ப்ரெஷ் பாஸ்தா

தேதி: September 27, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இந்த இத்தாலியன் உணவு குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. விஜிசத்யா </b> அவர்கள். இவர் அறுசுவை நேயர்களுக்காக நிறைய குறிப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ப்ரெஷ் பாஸ்தா - ஒரு பாக்கெட்
ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
ஸுக்னி - ஒன்று
உப்பு - தேவைக்கேற்ப
பார்ஸ்லி - சிறிது
பட்டர் - அரை தேக்கரண்டி
துருவிய சீஸ் - 3 தேக்கரண்டி


 

தக்காளி, வெங்காயம், ஸுக்னி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் பாஸ்தா மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அதில் பாஸ்தாவை போட்டு மூடவும். பதினைந்து நிமிடத்திற்கு பிறகு பாஸ்தாவை எடுத்து தண்ணீரை வடித்து விடவும்.
ஒரு கடாயில் பட்டரை போட்டு உருகியதும் நறுக்கின வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கின தக்காளி, ஸுக்னி சேர்த்து வதக்கவும். அதிக நேரம் வதக்க அவசியமில்லை.
வதக்கியவற்றுடன் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து பாஸ்தா உடையாமல் கிளறி இறக்கி விடவும்.
இதில் பார்ஸ்லி இலை, துருவிய சீஸ் போட்டு அலங்கரித்து பரிமாறலாம். இந்த இத்தாலியன் உணவு காய்கறிகளுடன் சாப்பிட்ட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

விஜி இந்த பாஸ்தா நானும் அடிக்கடி செய்வேன், என் இஷ்டத்துக்கு மரக்கறிகள் சேர்ப்பேன், சிலவேளை சிக்கினும் சேர்ப்பதுண்டு. நான் இஞ்சியும், தூளாக்கிய காய்ந்த மிளகாயும் சேர்ப்பேன். அழகாக இருக்கிறது பாஸ்தா படம். நீங்க அசைவம் சாப்பிடுவதில்லைத்தானே?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என் வீட்டவர்க்கும், என் குழதகள்க்கும் ரொம்ப விரும்பி சாப்பிடகூடியது. இந்த படங்கள் என் பென் அக்ஷ்யா எடுத்தது.

அப்படியா விஜி,
அப்போ பாராட்டெல்லாம் உங்கள் மகளுக்குத்தான் சரியா? :)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் அவகிட்டே சொன்னா ரொம்ப சந்தோஷ படுவா. நன்றி அதிரா

விஜி உங்க் குறிப்பு அருமை,அக்ஷயா போட்டோஸும் அருமையோ அருமை என் சார்பில் முத்தம் கொடுங்க வாழ்த்தியதாகவும் சொல்லுங்க..இந்த பாஸ்தா டிப்ரண்டா கூட இருக்கு ஒரூ சந்தேகம் அதென்னப்பா,ஸுக்னி எனக்கு இப்படியான இத்தாலியன் ஸ்டைலில் செய்ததே இல்லை என்னவருக்கு இப்படி செய்வது பிடிக்கும் முதல் முறையாக டிரை செய்ய போகிறேன்(குழந்தை பெற்ற பின்)என் மெயில் போடஎன்னம்மாஆட்டம் போட்டீங்க அம்மணி மெய்ல் கொடூத்தாச்சு ரிப்ப்லே இல்ல்லா இதூநியாய்யமா,,தர்ம்மமா?ஒரூ வேளைபயந்ந்ட்டு மயக்கம்மாகிட்ட்டீங்க்களா மெய்யிலை பாஅர்த்தூ..

அதீரா சிக்கனை எப்படீ சேர்ப்பீங்க டீட்டைல் கொடுங்க(பியூர் வெஜ் விஜி கொஞ்சாம் கண்களை மூடிக்கங்க்க..) மெயிலில் உங்க முறைய சொல்லுங்க அசைவம்ச்சேர்ப்பதால்..இதில்வேணாம் நம்ம விஜி சைவாம்மென்பதால்..(என் கீபோடைஇ மர்யம் ஒரு வ்வலி பாடுத்திட்டா அதனால்தான் அதீக ஸ்பெல்லிங் மிஸ்ட்டேக் வருது என்னால் அதிகமா திருத்ட்த முடியல பொறுடத்துகங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு