மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு

தேதி: September 28, 2008

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மீன் (சங்கரா, வெள்ளைக் களங்கா, பாறை, வஞ்சிரம், வவ்வால், வரால்) - 1/4 கிலோ.
அரைக்க:
மிளகு - 1 தேக்கரண்டி.
பூண்டு - 8 பல்.
மிளகாய்த் தூள் - 1.5 தேக்கரண்டி.
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி.
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1 பெரியது.
தாளிக்க:
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1.
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி.
கடுகு - 1/2 தேக்கரண்டி.
சீரகம் 1/4 தேக்கரண்டி.
கறிவேப்பிலை - சிறிதளவு.
எண்ணெய் - தேவையான அளவு.
மற்றவை:
புளி -1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
உப்பு - தேவையானது


 

புளியை தண்ணீர் விட்டு கரைசல் செய்து, அதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து, சுவை பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் தாளிப்புப் பொருட்களை சேர்த்து, தாளித்து, கலந்த மசாலாவை ஊற்றி, தேவையான தண்ணீர் கலந்து, பச்சை மசாலா வாசம் நீங்கும் வரை கொதிக்க வைத்து, அதன் பின் மீன் துண்டுகளை சேர்த்து, மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் சமைத்தால் எண்ணெய் மேலெழும்பி கவர்ச்சியும், சுவையும் மிக்க மீன் குழம்பு தயாராகி விடும்.


வழக்கமாய் செய்யப்படும் மீன் குழம்பை விட சுவையிலும், நறுமணத்திலும் வேறுபட்ட இந்தக் குழம்பு பெரும்பாலானவர் விரும்பி செய்வார்கள் என நம்புகிறேன். ஒரு முறை செய்துதான் பாருங்களேன்!
காரம் கூட்டியோ அல்லது குறைத்தோ அவரவர் விருப்பப்படி செய்து கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மிளகு பூண்டு மீன் குழம்பு .செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது.. மிளகையும் பூண்டையும் அரைக்காமல் ஒன்றிரண்டாய் தட்டி போட்டேன் செம டேஸ்ட் இந்த குழம்பு..நன்றி உங்களுக்கு..

வாழு, வாழவிடு..

டியர் ஜுபைதா இதற்கு தேங்காய் தேவையில்லையா?
காரம் அதிகமாக இருக்கும் போல இருக்கு

ஜலீலா

Jaleelakamal

இதே மாதிரி நாங்க செய்வோம்,ஆனால் மிளகாய்ப்பொடி போடாமல். மிள்கு ஆனம்னு சொல்வோம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

டியர் ஜலீலா,
தேங்காய் இன்றி செய்வதில்தான் இதன் சுவை அதிகம் என்பது எங்கள் கருத்து. உங்கள் சுவைக்கேற்ப தேங்காய் சேர்க்கலாம். அதுவும் சுவைமிக்கதுதான். காரசாரமாய் எப்போதாவது செய்யலாம்தானே!

அன்புடன்,
ஜூபைதா.

அன்புடன்,
ஜூபைதா.

இந்த குழம்புக்கு,புளி கூடுதலாக சேர்த்து கரைசலுடன் பெரிய வெங்காயம் செதுக்கி அல்லது அரைத்து + தக்காளி கையால் கரைத்து, பின் மசாலா கரைத்து, தண்ணீர் கலந்து சமைத்தால் சுவை சூப்பராக இருக்கும்.

மல்லிக்கீரை தூவி விடவும்.

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

if we add half cup of cocoanut ( well ground in a mixie ) to the boiling gravy before adding fish, then the gravy will be still thicker & tastier. quantity will also be more for 4 persons.
thanks for permitting me to convey my comments.
Ponmanikumaran

sriramajeyam