வெந்த வாழைக்காய் வறுவல்

தேதி: September 28, 2008

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 1 நன்கு முற்றியது.
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி.
தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி.
தயிர் - 2 தேக்கரண்டி.
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி.
எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி.
சோள மாவு - 2 தேக்கரண்டி.
பொட்டுக்கடலை மாவு - 1 தேக்கரண்டி.
உப்பு தேவையான அளவு.
தாளிக்க:-
எண்ணெய் - 25 மி.லி.
கடுகு - 1/2 தேக்கரண்டி.
சோம்பு - 1/4 தேக்கரண்டி.
கறிவேப்பிலை - 3 கொத்து.


 

முழு வாழைக்காயை தோலுடன் ஒரு பாத்திரத்தில் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
தோலை நீக்கி விட்டு வட்ட வடிவில் 3 மில்லி மீட்டர் அளவு சில்லுகளாக வெட்டி வைக்க வேண்டும்.
மசாலா பொருட்கள் அனைத்தையும் கெட்டியான பேஸ்ட் ஆக செய்து வாழைக்காய் சில்லுகளில் ஏற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அகலமான நாண் ஸ்டிக் கடாயில் தாளிப்பு செய்து, ஊற வைத்த வாழைக்காய் சில்லுகளை மிதமான சூட்டில், சில்லுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமல், பிரட்டி பிரட்டி ரோஸ்ட் பதத்தில் வறுத்து, சூடாக பரிமாறி மகிழலாம்.


ரோஸ்ட் செய்தது போல் அமையும் இந்த வறுவல் சாம்பார் சாதம், ரசஞ்சாதம், மோர்க்குழம்பு சாதம், தயிர்சாதம் மற்றும் பழைய சாதம் அனைத்திற்கும் ஏற்ற சைட் டிஷ்.
வாழைக்காய் சில்லுகள் ரோஸ்ட் ஆகி எடுக்கும் பதத்தில், மிளகுத் தூள் 1/2 தேக்கரண்டியும், சுக்குத்தூள் 1/4 தேக்கரண்டியும் தூவி பின்னர் பரிமாறினால் சுவை இன்னும் கூடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜுபைதா,
இன்னைக்கு சாம்பாரும் வாழைக்காய் வறுவலும் தான், நல்லா இருந்தது.நான் shallow fry செய்தேன், it tastes well.

உங்களின் வெந்த வாழைக்காய் வறுவலினை செய்தேன். மிகவும் சுவையாக இருந்த்து. அதனை எலுமிச்சை சாறு மற்றும் தயிரில் சிறிது நேரம் ஊற வைத்த்தால் மிகவும் சுவையாக இருந்த்து.
குறிப்புக்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் தயாரித்த வெந்த வாழைக்காய் வறுவலின் படம்

<img src="files/pictures/aa162.jpg" alt="picture" />

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த வெந்த வாழைக்காய் வறுவலின் படம்

<img src="files/pictures/aa166.jpg" alt="picture" />

இன்று இந்த வறுவல் செய்தேன்,நல்லா இருந்தது