நன்னாரி சர்பத்

தேதி: September 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

நன்னாரி சிரப் - 1 கப்
தண்ணீர் - 4 கப்
எலுமிச்சை - 1
பாதாம் பிசின் - 50 கிராம்
கேசரிபவுடர் - 2 பின்ச்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்


 

பாதாம் பிசினை நொருக்கி இரவில் ஊறவிட்டால் காலையில் ஊறி இரண்டு, மூன்று மடங்காகி இருக்கும்.
ஊறிய பாதாம் பிசினில் சர்க்கரை. கேசரி பவுடர் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் 10 நாள்வரை கெடாமல் இருக்கும்.
தண்ணீரில் கொட்டை நீக்கிய எலுமிச்சை சாறை சேர்த்து, நன்னாரி சிரப்பையும் சேர்த்து கலக்கவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து குளிரூட்டவும்.
டம்ளர்களில் சர்பத்தை ஊற்றி மேலே ஒரு டம்ளருக்கு 2 டீஸ்பூன் ஊறிய பாதாம் பிசின் விட்டு கலக்காமல் உடன் ஜில்லென்று பரிமாறவும்.
நிறமற்ற நன்னாரி சிரப்பின் மேலாக ஆரஞ்ச் நிற பாதாம் பிசின் பஞ்சு போல் மிதக்க சுவையான ஜில்லென்ற நன்னாரி சர்பத் தயார்


மேலும் சில குறிப்புகள்