கோழிப்புக்கை

தேதி: September 29, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

இலங்கையில் பச்சரிசியில் செய்யும் சாதத்தை, குழைய சமைத்து எடுத்தால் புக்கை என்பார்கள். பொங்கல் செய்த பின் பொங்கலை புக்கை என்று கூறுவார்கள். அதனால் கோழியில் செய்யப்படும் இந்த சாதத்தை கோழிப்புக்கை என்று சொல்கிறார்கள்.

 

கோழி(வைரமாக இருந்தால் நல்லது) - ஒரு கிலோ
பச்சரிசி - ஒரு கிலோ
சின்ன வெங்காயம் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - அரை மூடி
எலுமிச்சைபழம் - ஒன்று
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கோழியை பெரிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். தேங்காயை துருவி பால் பிழிந்து எடுத்து வைக்கவும். எலுமிச்சை பழத்தை நறுக்கி சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
கொதிக்கும் தண்ணீரில் சுத்தம் செய்த கோழியை போட்டு உப்பு சேர்த்து 20 நிமிடம் வேக வைக்கவும்.
20 நிமிடங்கள் கழித்து இரண்டாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்க்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து அரிசியை போட்டு தீயின் அளவை குறைத்து வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும்.
அரிசி அரைப்பதம் வெந்த பின்னர் அதனுடன் மிளகாய் தூளை சேர்த்து கிளறி விடவும்.
5 நிமிடங்கள் கழித்து எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை அதனுடன் சேர்க்கவும்.
10 நிமிடங்கள் கழித்து அரிசி நன்கு வெந்து தண்ணீர் வற்றி கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து விடவும்.
சாதத்தை இறக்கி வைத்து 10 நிமிங்களுக்கு பிறகு எலுமிச்சை சாறை ஊற்றி கிளறி விடவும். சுவையான கோழி புக்கை தயார்.
அறுசுவை நேயர்களுக்காக இந்த கோழிப்புக்கையை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் வத்சலா மேடம் எப்படி இருக்கீங்க?கோழிப்புக்கை பேரு வித்தியாசமாக இருக்கு ஆனா இதில் கோழி வைரமாக இருந்தால் நல்லது என்று சொல்லி இருக்கீங்க.அப்படின்னா என்ன மேடம். கோழிக்கறி பிஞ்சு கறியாக இருக்குனுமா,அதோட அர்த்தம் என்ன?

ஹாய் காயத்திரி நான் நலம் நீங்கள் நலமா? இங்கு ஜேர்மனியில் சூப்பன் கோழி என்று தான் இருக்கிறது. இலங்கை,இந்தியாவில் நாட்டுக்கோழி(சேவல்) தான் வைரமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"