பட்டாணி சுண்டல்

தேதி: September 29, 2008

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டாணி - ஒரு கப்
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - கொஞ்சம்
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று


 

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பட்டாணி முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
கடாயில் எண்னெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளித்து கொள்ளவும்.
வெந்த பட்டாணியையும் உப்பையும் போட்டு ஒரு முறை நன்றாக கிளறி விட்டு இறக்கவும்.
பீச் சுண்டல் மாதிரி வேண்டுமென்றால் மாங்காய், காரட், வெங்காயம், எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறவும்.
இதே முறையில் கொண்டைக்கடலை காராமணி, மொச்சை, பச்சை பயறு, கடலை பருப்பு வகைகளிலும் செய்யலாம்.


இந்த சுண்டல் நவராத்திரி தினங்களில் கொலுவிற்கு நைவேத்யம் செய்து வந்தவர்ளுக்கு கொடுப்பது வழக்கம்.
கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவைக்கு உப்பு சேர்த்து வேகவக்க வேண்டாம். தோல் தனியாக வந்து விடும். தாளிக்கும் போது உப்பு சேர்த்தால் தோலோடு சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த பட்டாணி சுண்டலின் படம்

<img src="files/pictures/aa312.jpg" alt="picture" />

விஜி சுண்டல் நன்றாக இருந்தது. நான் செய்தது காராமணியில்தான்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எப்படி இருக்கிங்க? இப்ப தான் பார்க்கிறேன். நிங்க நிறய்ய குறிப்புகள் செய்து அதோட படமும் எடுத்து அருசுவையையும் என்னையும் சேர்த்து அசத்திட்டிங்க. மிக்க மிக்க நன்றி.
எனக்கும் காரமணி சுண்டல் ரொம்ப பிடிக்கும். நாங்க
இங்கு எல்லாரும் சேர்ந்து பீச் போவோம் என்னைதான் இத செய்து எடுத்து வர சொல்வாங்க.
சாப்பிடுவதற்க்கு ரொம்ப நன்றாக இருக்கும்.