மிளகு உருண்டை

தேதி: September 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி(இட்லி அரிசி) - 1/2 கிலோ
தேங்காய் மூடி - 1 (துருவிக் கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
மிளகு (பொடித்தது) - 1 டீஸ்பூன்
தாளிக்க - நல்லெண்ணெய் அல்லது நெய்
கடுகு, உளுத்தம்பருப்பு - தேவையான அளவு


 

அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மையாக அரைத்துக் கொள்ளவும்.
அடிப்பிடிக்காத வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, இடியாப்ப மாவு கிளறுவது போல கிளறிக் கொள்ளவும்.
மாவுடன் துருவிய தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவு உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும்.
சீடை போல் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த உருண்டைகளை சேர்த்து, மிளகுப் பொடி தூவி, கிண்டி இறக்கவும்.


சிறு குழந்தைகளுக்கு தாளிக்காமலும் கொடுக்கலாம். மாலை நேரத்துக்கு ஏற்ற சிற்றுண்டி இது. சுலபமாக ஜீரணம் ஆகும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சீதா மேடம் இந்த மிளகு உருண்டை நேற்று செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. நன்றி. உங்க ரெசிப்பி ரொம்ப சிம்பிளாகவும் ஹெல்தியாகவும் இருக்கு.மேலும் நிறய்ய ரெசிப்பி குடுங்க.