பட்டி மன்றம் - தமிழ் வளர்க்கலாம் வாங்க

தமிழ் வளர்க்கலாம் வாங்க! தோழியரே!!

ஜாலியாக பட்டி மன்றம் நடத்துவோம்.

50 கமெண்ட்ஸ் தாண்டியவுடன், யாராவது தீர்ப்பெழுதிவிட்டு, புது தலைப்புக் கொடுங்கள்.
மத, அரசியல், சினிமா சம்பந்தப்பட்ட சீரியஸ் தலைப்புகள் வேண்டாம் ப்ளீஸ். சும்மா ஜாலியாக ரசிக்கத்தகுந்த லைட் விஷயங்கள் மட்டும் போதும்.

ஒருவர் ஒரு தலைப்பை மட்டுமே ஆதரித்து எத்துணை கமெண்ட்ஸ் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

கன்னியரே! கோபியரே!! கச்சை கட்டிக் கொண்டு களமிறங்குங்கள். நம் தமிழ் தாயை அறுசுவை விருந்து படைத்து வளர்த்துங்கள்.

உங்களின் இந்த புதிய இழை வரவேற்கத்தக்கது. அதேசமயம் வேறு ஏதேனும் சுவையான தலைப்பினை பட்டிமன்றத்திற்கு எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். என்னதான் மனம் புண்படாதவாறு கருத்து கூறுங்கள் என்று குறிப்பிட்டாலும், இதில் வரும் கருத்துக்கள் சிலரை மனவருத்தம் கொள்ளச் செய்யலாம்.

சுஹைனா உங்கள் எல்லா திரட்டுக்கும் நான் தான் முதல் பதில் அனுப்புகிறேன்னு நினைக்கிறேன்..பிடித்ததும் சாப்பிட தூண்டுவது இனிப்பு தான் என்று வாதிட விரும்புகிறேன்..

பார்தவுடன் சாப்பிட தூன்டுவது இனீப்பே என்று வாதிடுகிறேன்.
குழந்தைகள் முதல் ஆனைவரும் விரும்புவது இனிப்பை தான்
எந்த கடைக்கு சென்ராலும் நம்மை முதலில் கவர்வது இனிப்புகள் தான்.ஆகவே வருத்த முந்திரியை விட இனிப்பான முந்திரி கேக் தான் சுப்பர், சுப்பர், சுப்பர்..

ஹாய் சுஜ்மலா, நான் இனிப்புதான் என்று வாதாட வந்துள்ளேன். எந்த் பண்டிகையிலும் இனிப்பு இல்லாம்ல் கொண்டாட முடியுமா க்ண்ணா? என்ன் பா பதிலை கானோம் சொல்லுங்க..................
அன்னைவருக்கும் பிடித்தது இனிப்பு இனிப்புதான் .முதலில் விருந்தில் இலையில் வைப்பது இனிப்பே .தேர்வில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொடுப்பதும் இனிப்பே.நீங்க என்ன் காரமா கொடுபீங்க.

ஆகையால் இனிப்பே சிற்ந்து என கூறுகிரேன். யாருப்பா இனிப்பு கட்சி இங்கே வாங்கப்பா கருத்துகலை அள்ளி விடுங்க..........................

அன்ப்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

எதையுமே அள்வோடு தான் சாப்பிட வேண்டும்.இன்ப்பு சாப்பாடு அல்ல. இனிப்பு எப்படி சாப்பிட வேண்டுமோ அப்படிதான் சாப்பிடவேண்டும் சாப்பிட முடியும்.சாப்பாடு தினமும் தான் சாப்பிடுகிறோம். ஆனால் இன்ப்பு எப்போதாதவது சாப்பிட்டாலும் அதன் சுவையே தனிதான்.காபி ,டீ க்கும் இனிப்புதான் தேவைப்டுகிற்து. நீங்கள் சுகர் இல்லாமல் குடித்து உள்ளீர்கலா.

இனிப்பு சுவை சுவைதான் . சிலருக்கு எழுந்தவுடன் சுவையான காபியொ , டீயோ குடித்தால் தான் வேலையே துவங்குவார்கள்.சுறு சுறு ப்பு ஆவார்கள்.காலைல காரத்தையா சாப்பிடுவீஙக?

அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

இனிப்பு அணிக்கு வோட்டு கூடிப் போகுதே கார அணித்தலைவி சுமஜ்லா கவினிச்சீகளா!
அவுக சொல்றதும் உண்மைதானே விஷேஷங்கள் மகிழ்ச்சியை கொண்டாட இனிப்புதான கொடுக்கறோம்.சுதந்திர தினத்துக்கு பள்ளிக்கூடத்துல கூட பத்து பைசா மிட்டாய் தானம்மா கொடுக்கறாக...காரச்சேவா கொடுக்கறாக?
இனிப்பு அணி காரர்களே கார அணித்தலைவி சொல்றதயும் யோசிக்க வேண்டியிருக்குல்ல?தட்டு நிறைய பிரியாணி சாப்பிடலாம் தட்டு நிறைய அல்வா சாப்பிட முடியுமா.ரொம்ப அல்வா கொடுக்காதீக...
அடுத்து யாரும்மா வாங்க கருத்துகளை அள்ளி விடுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுதந்திர தினத்துல இனிப்பு கொடுத்து கொடுத்து இந்தியாவுல பாதிக்கும் மேல உள்ளவங்களுக்கு சக்கரை வியாதி தான். அதோடு ஒப்பிட்டு பார்த்தா காரம் பரவாயில்லை.அதனால காரம் தான் சிறந்தது.

கவி நீங்க இந்த பக்கமும் அந்த பக்கமும் பேசி அல்வாவ கிண்டியே எங்களுக்கு கொடுக்கிறீர்களே? இது நியாயமா? பார்த்தீங்களா? சும்மா கிண்டல் பண்ணனும் என்றாலும் அல்வா(இனிப்பு) தான் கொடுக்கவேண்டியதா இருக்கு..காரம்னு சொன்னால் கண்ணில் தண்ணி வருது, இனிப்புன்னு சொன்னால்தான் நாக்கில் தண்ணி வருது...கவிக்கு ஒரு லட்டும் கொஞ்சம் மிக்சரும் கொடுத்திடலாம்..அவங்களுக்கு இரண்டும் சேர்ந்து தான் பிடிக்கும் போல..ஆமாவா கவி?

தாமரை எனக்கு லட்டும் மிக்சரும் சேர்த்து சாப்பிட பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?
அப்புறம் பட்டி மன்றத்துக்கு சாலமன் பாப்பையா மாதிரி ஒரு ஆள் வேணும்ல அதான் இங்கேயும் அங்கேயுமா கிளறி விட்டுகிட்டு இருக்கேன் ஹி ஹி...

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்