மசாலா பக்கோடா

தேதி: October 1, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி மாவு- 3 கப்
கடலை மாவு- 2 1/2 கப்
வெங்காயம்- அரை கிலோ
பச்சை மிளகாய்- 6
கறிவேப்பிலை- அரை கப்
தேவையான உப்பு
சூடான நெய் அல்லது எண்ணெய்- 1 ஸ்பூன்
கீழ்க்கண்ட பொருள்களை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
பட்டை-1, சோம்பு- அரை ஸ்பூன், 1 கிராம்பு, பூண்டு பற்கள்-15, சீரகம்- கால் ஸ்பூன்,


 

மாவுகளை சலித்து உப்பு, சூடான நெய், நீளவாக்கில் மெல்லியதாக அரிந்த வெங்காயம், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரைத்த மசாலா அனைத்தையும் சேர்த்து போதுமான தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
மிதமான சூட்டில்,சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகப் போட்டு சிவந்ததும் எடுத்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்