சிக்கன் பிரட்டல் கறி

தேதி: October 1, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

சிக்கன் - ஒரு கிலோ
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
கிராம்பு, ஏலக்காய், கருவா - ஒவ்வொன்றிலும் 2 துண்டுகள்
கறி பவுடர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - ஒன்று
கறிவேப்பிலை - 2 கொத்து


 

வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு இரண்டையும் மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிக்கனை எலும்புடன் சிறுத் துண்டுகளாக நறுக்கி அதனுடன் பாதியளவு கறித்தூள், உப்பு இரண்டையும் போட்டு பிரட்டி வைக்கவும். அதிக நேரம் ஊற வைத்தால் சுவையும் அதிகமாக இருக்கும். உடனே செய்வதாக இருந்தாலும் செய்யலாம்.
ஒரு நாண்ஸ்டிக் பானை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் வதங்கியதும் கிராம்பு, கருவா, ஏலக்காய் போட்டு வதக்கி விட்டு மீதமிருக்கும் கறித்தூளை போட்டு பிரட்டி விடவும்.
பிரட்டியவற்றுடன் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு பிரட்டி விட்டு மூடி விடவும். தீயை அதிகமாக வைத்து வேக விடவும்.
5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்தால் சிக்கனிலிருந்து தண்ணீர் வந்திருக்கும், சிக்கன் வேக அந்த தண்ணீரே போதுமானது, அந்த அளவு தண்ணீர் போதவில்லை என்றால் அரை டம்ளர் சுடுதண்ணீர் ஊற்றி மூடி விடவும்.
சிக்கன் கலவை நன்கு கொதிக்க தொடங்கியதும் மூடியை எடுத்து விட்டு கரண்டியால் இடையிடையே கிளறி விடவும். கலவை தண்ணீர் வற்றி பிரட்டலாக வந்ததும் அதில் கரம் மசாலா தூள், கறிவேப்பிலை போட்டு நன்கு பிரட்டி விட்டு இறக்கி விடவும்.
சிக்கனை இறக்கியதும் எலுமிச்சை பழத்தை பிழிந்து கிளறி விட்டு பரிமாறவும். இந்த சிக்கன் பிரட்டல் பிரியாணி சோறு, சப்பாத்தி, இடியாப்பத்துடன் சாப்பிட ஏற்றது.
அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் இந்த செய்முறையை வழங்கியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் அதிரா சூப்பர்

இறட்டையர்கள் அமர்களம் அருமை, நானும் ஒரு இறட்டையர் போட்டோ அனுபுகிறேன் இதே மாதிரி தான்

சிக்கன் குறிப்பு சூப்பர் சிக்கன் வங்கியதும் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்
ஜலீலா

Jaleelakamal

கறி பவுடர் என்றால் என்ன,இப்பொழுது என்னிடம் சிக்கன் உள்ளது.அதனால் உடனெ ட்ரை பன்னலாம் என்று கேட்கிரேன். ramani

ஆ.....
ஜலீலாக்கா, இந்தச் சாட்டெல்லாம் வேண்டாம், இப்பவே செய்துபார்த்து பதில் போடுங்க, குட்டிகளின் படம் நான் ஏற்கனவே அனுப்பினேன், இதிலேயும் ஒட்டி வந்துவிட்டது, இனிவரும் குறிப்புகளில் போடவேண்டாம் என அட்மினிடம் சொல்லவேண்டும்.

ரமணி, இங்கே இலங்கைக் குறிப்பில் நர்மதா எழுதியிருக்கிறார் கறித்தூள் குறிப்பு, நீங்கள் உங்கள் உறைப்புக் கறிகளுக்கு எப்படி மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்ப்பீங்களோ அப்படியே இதற்கும் சேருங்கள். வறுத்த தூள் தான் இதற்கு நல்லது, இல்லாவிட்டாலும் பறவாயில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இரட்டையர்க்கள நல்லாவே இருக்காங்க. நல்லாவே சமைக்கவும் தெரியும் என்று இப்பதான் தெரிஞ்சுகிட்டேன். பாவம் எவ்வள்வு கஷ்டப்பட்டு இந்த ஆண்டிக்காக சமைத்துருக்காங்க. நன்றி இரட்டை குட்டிஸ். பேர் என்னவோ.அதிரா ஸாரி நான் சைவம் ஆனால் எனக்கு இந்த அரட்டையரிம் சொல்லி சைவம் சமையல் நல்ல சமைச்சு படம் பிடித்து போட சொல்லுங்க நன்றி குட்டிஸ். குட்டிஸ் யூ லூக் ஸுப்ப்ர்.

பிள்ளைகளின் படம் அருமை. சிக்கின் நேத்து தான் செய்தேன்.. அடுத்தவாரம் சிக்கன் முறை வரும்போது செய்துவிட்டு பின்னூட்டம் அனுப்புகிறேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா!! விஜி சத்யா!!!

விஜி ஆன்ரி உங்களுக்காகவே ஒரு வடை நிறைய நாளாக செய்து என் பிஸியை நிரப்பிக்கொண்டிருக்கிறது... இன்னும் அனுப்ப நேரம் வரவில்லை... சீக்கிரமாக அறுசுவைக்கு வந்துவிடும்....

ஆ.... இலா அதுதானே பார்த்தேன்..... மிக்க நன்றி... எனக்கென்னவோ தெரியவில்லை.... யாராவது கோபமாக இருப்பதுபோல் தெரிந்தால் .. எதுவுமே ஓடாது... ஸ்கூலால் காரோடி வரும்போது இதையே தான் நினைத்தபடி ஓட்டினேன்..... நீங்களாவது அதிராவைக் கோபிப்பதாவது.. என்ன இலா... இந்தாங்க கையைப் பிடிச்சுக்கொள்ளுங்க பீச்சுக்குப் போவோம்.... விஜி முறைக்க வேண்டாம்... நீங்களும் வாங்க அட்சயாக்குட்டியைக் கூட்டிக்கொண்டு....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹலோ அதிரா அக்கா,

எப்படியிருக்கீங்க? உங்களுடைய சிக்கன் பிரட்டல் கறி பார்த்தவுடனேயே செய்யனும் போல இருக்குது. அம்மா இங்கு இருக்கிறாங்க அவர்கள் புரட்டாசி மாதம் சிக்கன் சாப்பிடமாட்டார்கள். அதனால் அடுத்த மாதம் செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் அனுப்புகிறேன்.

இரட்டையர்கள் பெயர் என்ன? உங்களுக்கு உடம்பு சரியாகிவிட்டதா?

அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

சுஹைனா...... ஹா....ஹா..... நல்ல ஜோக், ஆனால் நான் எப்ப சொன்னேன் திருமணம் முடிந்தது பற்றி... இதுவரை எனக்கு 2, குட்டி மகன் கள்.......

செய்து பாருங்கள்.. சொன்னதற்கு மிக்க நன்றி

மணி எப்படி இருக்கிறீங்கள்? நான் இப்போ நலமே..... நல்லது புரட்டாசி முடியட்டும் அம்மாவின் கையால் செய்து சாப்பிடுங்கள். இது முக்கியமாக இந்த வெளிநாட்டு பிஸ்கட் (புறொய்லரை நான் அப்படித்தான் அழைப்பேன்... இறைச்சி மாதிரி இருக்காது பிஸ்கட் சாப்பிடுவதுபோல் இருக்கும்)கோழிக்கு நல்ல சுவையாக இருக்கும்.... அதற்கு தண்ணி, பால் எல்லாம் சேர்த்தால் அவிந்து கரைகிறதே.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா கை வசம் சிக்கன் இல்லை இலா மாதிரி தான் அடுத்தவாரம், இந்த வாரன் சிக்கன் டேன் முடிந்து விட்டது. வியாழன் கிழமையே முடிந்து விட்டது.
இனி மீன், மட்டன், இறால், வெஜ் அதற்க்கு பிறகு தான் சிக்கன் ஒகே வா.

ஜலீலா

Jaleelakamal

அதிரா நேற்று இரவு உங்கள் சிக்கன் பிரட்டல் கறி செய்தேன். சுவை அருமையாக இருந்தது. எங்கள் பாரம்பரிய கறி பவுடர் போட்டேன். கிட்டதட்ட நம் இருவரின் கறிபவுடரும் ஒரே மாதிரிதானே. அதனால் சுவையில் வித்தியாசம் இல்லை. நேற்று என்குட்டி கூட சிக்கன் சாப்பிட்டாள். தாங்ஸ் டூ அதிரா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

in which step do we add the garlic and ginger paste? and what does the "curry powder" consist of?

தனிஷா!!
அப்படியா? செய்து சாப்பிட்டாச்சா? குட்டியும் சாப்பிட்டா எனக் கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கு.

பிறின்சஸ்,
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, கராம்பு, ஏலக்காய் போடுகிறபோது இஞ்சி, பூண்டையும் போட்டுப் பிரட்ட வேண்டும், (நான் இதற்கு பேஸ்ட் பாவிப்பதில்லை). கறிபவுடர் , இங்கே இலங்கைக் குறிப்பில் விபரமாக உள்ளது பார்க்கவும்.

ஜலீலாக்கா... கை...வசம் இருக்காதக்கா:)... குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தால்தான் தெரியும்:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

thanks for the immediate response.

அதிரா குளிர்சாதன பெட்டியை திறந்து பர்த்தேன் போன்லெஸ் தான் கிடைத்தது.
அதில் செய்தேன் உண்மைதான் இது சிக்கன் பிஸ்கேடே தான், பச மிளகாய்க்கு பதில் கேப்சிகம் பயன் படுத்தினேன் வாசனை சும்மா வீடு முழிவதும் அப்பவே சாப்பிடனும் போல் இருந்தது. சுவையான குறிப்புக்கு நன்றி

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா!மிக்க நன்றி... உங்களுக்கும் குளிர்சாதனப் பெட்டிக்கும்(சிக்கினை ஒழித்து வைத்திருந்ததற்கு)...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

It was really good. came out very well.

Thanks

பிரபா, சுஹைனா...
நன்றாக வந்தது எனக்கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைக்கிறேன். என்ன சுஹைனா ஒரு கையில் அகப்பை, ஒரு கையில் கீபோட்டா? அப்படித்தான் இருக்க வேண்டும்.... கலக்குங்கோ....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்று உங்கள் சிக்கன் பிரட்டல் கறி செய்து பார்த்தேன். மிக மிக நன்றாக இருந்தது.

god is my sheperd

பெல்ஷியா,
மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நீங்கள் செய்து அசத்திய கோழிப் பிரட்டலை நான் இன்று செய்து வீட்டுக்கு வந்த எனது நண்பி குடும்பத்தை அசத்திவிட்டேன். நானும் ஒரு கறியையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விட்டேன். நானும் ஒரு இலங்கைப் பெண்தான். நல்லா இருந்தது :D

நன்றி சகோதரி

தாரணி, மிக்க நன்றி சிக்கின் கறி செய்து அசத்திவிட்டீங்களா.... எனக்கு ஒரே சந்தோஷமாக இருக்கு, இப்படித்தான் நான் அடிக்கடி செய்வேன், மட்டினைக்கூட இதே முறையில்தான் செய்வேன் ஆனால் அதுக்கு ஒரு கப் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு அவிய விட்டுச் செய்யவேண்டும் அவ்வளவுதான் வித்தியாசம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

திருமதி. ஜலிலா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த சிக்கன் பிரட்டல் கறியின் படம்

<img src="files/pictures/curry_pirattal.jpg" alt="pirattal curry" />

ஜலீலாக்கா சூப்பர் படம்,
அக்கா இப்பத்தானே பார்க்கிறேன், அப்படியே அழகாகச் செய்திருக்கிறீங்கள், 500 குறிப்புக்கள் கொடுத்த நீங்கள், என்ர 5 குறிப்புக்களில் ஒன்றை, இப்படிச் செய்து படமெடுத்தும் போட்டதால் உண்மையில் அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன்... மிக்க நன்றி.

இன்னுமொன்றக்கா , அறுசுவையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரே வாண வெடி, அட இதென்ன சத்தம் என்று பார்த்தால் அறுசுவை முகப்பில் அழகாக தீபாவளி ஆரம்பம்..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஒரு போன் பேசிட்டு வரதுக்குள்ள இங்க வெடி சத்தம் மத்தாப்பு.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பார்க்கவே!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் அதிரா
உங்கள் குழந்தைகள் நல்லா அழாகாக இருக்கிறார்கள் இப்போது தான் பார்த்தேன்.
சிக்கன் பிரட்டல் கறி சுவையாக இருந்தது.
குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அதிரா

இவர்கள் இருவரும் இரட்டையர்களா?? :) படு ஸ்மார்டாக இருக்கிறார்கள் :) அப்பா ஜாடை என்று நினைக்கிறேன்.. :)))))) என் கணிப்பு படி, இது பல வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம் போல தெரிகிறது.. ))))

உங்கள் சிக்கன் பிரட்டல் கறி அருமை.. யார் இதை செய்தாலும், தனக்கு கொஞ்சம் உணவுக் கப்பம் கட்டிச் செல்ல வேண்டும் என்று பூஸ் கட்டளையிட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.. அதான், கொஞ்சம் தக்காளியையும் சேத்து செய்திருக்கிறேன்.. :)) நன்றி.. நான் ட்ரை வகை சிக்கன் (வறுவல் போன்று) அவ்வளவாக செய்ததில்லை.. இது நன்றாக வந்துள்ளது.. என்னிடம் இருந்த குருமாத்தூள், கூட கொஞ்சம் மல்லி, மஞ்சள் தூள் சேர்த்து சும்மா பிரட்டி பிரட்டி :)) செய்தேன்.. அருமை..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அதிரா, இந்த கறி மிகவும் நன்றாக இருந்தது. என் மகன் விரும்பி சாப்பிட்டார். நன்றி உங்களுக்கு.

சிக்கின் பிரட்டல்
சுகா மிக்க நன்றி.

சந்தனா மிக்க நன்றி. நீங்கள் சொல்வது உண்மையேதான் அப்பா ஜாடையேதான்.... அம்மா இதைவிட அழகோஅழகு:)... என்னைப் பார்க்கமாட்டீங்கள் என்ற திரியத்தில் சொல்கிறேன்:). நேற்று எடுத்து சுடச்சுட இன்று இணைத்த படம்......:).

இதைத்தான் பிரட்டோ பிரட்டெனப் பிரட்டினனீங்களோ?:) இப்பத்தான் பார்க்கிறேன்....மிக்க நன்றி.

வின்னி மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்