வெந்தயக் குழம்பு

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய வெங்காயம் - 20
பூண்டு - 6 பற்கள்
மிளகாய் வற்றல் - 5
சீரகம் - 3 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
மல்லி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரைத் தேக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தை உரித்து நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை தோல் உரித்துக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல், சீரகம், மல்லி ஆகியவற்றை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
புளியை சிறிது நீரில் ஊற வைத்து, சற்று நேரத்திற்கு பின் அதனைக் கரைத்து அதனுடன் அரைத்த மசாலாவினையும், மஞ்சள் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் நுணுக்கிய வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டினைப் போட்டு வதக்கவும்.
பிறகு அதில் மசாலா கரைத்த புளித் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து வற்றியவுடன் சிறு தீயில் சிறிது நேரம் வைத்திருந்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வெந்தயக் குழம்பு செய்து பார்த்தேன். புது வித சுவையாக இருந்தது. நீங்கள் புளியின் அளவு குறிப்பிட வில்லை. சின்ன வெங்காயத்துக்கு பதில் பெரிய வெங்காயம் போடலாமா.

god is my sheperd