ஜவ்வரிசி புலாவ் - 1

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நைலான் ஜவ்வரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு - 250 கிராம்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 5
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி துருவியது
பச்சைமிளகாய் - 5
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

ஜவ்வரிசியுடன் மஞ்சள் தூள் கலந்து மூன்று மணி நேரம் தண்ணீரில் முழ்கும் படி ஊற வைக்க வேண்டும்.
பாசிப்பருப்பை அரைவேக்காடு வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, பச்சைமிளகாய் இவை அனைத்தையும் போட்டு வதக்கவும்.
அவை வதங்கியபின் ஊறிய ஜவ்வரிசி, வெந்த பருப்பு போட்டு 5 நிமிடம் கிளறவும்.
கடைசியில் தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்