உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

முட்டை பொடிமாஸ்

 


தேவையான பொருட்கள்

  • முட்டை - 4
  • வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 2
  • சில்லி பிளேக்ஸ் - 2டீஸ்பூன்
  • தக்காளி - 1
  • எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கு
  • கருவேப்பிலை - சிறிது

செய்முறை

  • வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி,கருவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு
  • நறுக்கியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.
  • ஓரளவு வதங்கியதும் ,முட்டையை உடைத்து ஊற்றி கிளரவும்.
  • கூடவே சில்லி பிளேக்ஸ்,உப்பு சேர்த்து முட்டை வேகும் வரை வதக்கி இறக்கவும்.
  • இது இடியாப்பம்,சப்பாத்தி,பரோட்டா போன்றவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ்.

குறிப்பு:

அவசரத்திற்கு ஆறிய சாதத்தினை இத்துடன் கலந்து கலவை சாதமாக சாப்பிடலாம். மாசி சாப்பிடக்கூடியவர்கள் இத்துடன் சிறிது மாசித்தூளை சேர்த்தால் சுவையாக இருக்கும். இத்துடன் நெத்திலி கருவாடை வறுத்து சேர்த்து சாதத்தில் கலந்தால் மலேஷியன் நாஸிகோரி தயார்.

வழங்கியவர்

ஸாதிகா


comments
சந்தேகம்
அக்டோபர் 11, 2008 - 6:06am - வழங்கியவர் டார்வ...

சகோதரி, சில்லி பிளேக்ஸ் என்றால் என்ன ? எங்கே கிடைக்கும் ?

டார்வின்-சில்லி பிளேக்ஸ்
அக்டோபர் 12, 2008 - 5:07am - வழங்கியவர் shadiqah

டார்வின்,சில்லி பிளேக்ஸ் வீட்டிலேயே சுலபமான முறையில் தயாரிக்கலாம்.எனது குறிப்புகளில் இந்த குறிப்புக்கு முந்தைய குறிப்பில் சில்லி பிளேக்ஸ் செய் முறை போட்டுள்ளேன்.பாருங்கள்.பின்னூட
்டத்திற்கு நன்றி.
ஸாதிகா