பட்டி மன்றம் 2

இரவில் குழந்தைகளை பெற்றோருடன் உறங்கச் செய்வது ஆரோக்கியமான முறையா? இதனால் பெற்றொரின் தனிமை பாதிக்கப்படுகின்றதா, இல்லையா?

அன்புத்தோழியர்களே, அருமைத் தங்கச்சிங்களே, பெருமைக்குரிய சகோதரர்களே, தம்பிகளே (முக்கியமாக பாபுத்தம்பி) அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.
இப்படி ஒரு அருமையான தலைப்பையும், தீர்ப்புகூறும் வாய்ப்பையும் கொடுத்த மனோகரிக்கு நன்றி.
ஒரு சாரார் சொல்லுவாங்க "அந்தக்காலத்திலே வீட்டிலே தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, அப்படி இப்படின்னு நிறைய சொந்தக்காரங்க இருந்தாங்க. குழந்தைங்க பாட்டி கிட்ட கதை கேட்டுக்கிட்டே தூங்குவாங்க. எங்க அம்மா, அப்பா எல்லாம் ஜாலியா இருந்தாங்க. நாங்கள்ளாம் பாட்டி, தாத்தா கூட தூங்குவோம். ம் இந்தக்காலத்தில அதெல்லாம் முடியுதா" அப்படிம்பாங்க. இதிலேந்து என்ன தெரியுது இவங்க வீட்டிலே குழந்தைங்களுக்கு தனி படுக்கை அறை கிடையாது.

இன்னொரு சாரார், "இதிலே என்ன தப்பு? ஒரு வயசு வந்துட்டா குழந்தைங்களை தனியாதான் படுக்கவைக்கணும். இதுதான் முறை"ம்பாங்க. இவங்களுக்கு தனிமை தேவைப்படுது.

தங்கச்சிங்களா, நீங்கள்ளாம் அவங்கவங்க பக்கத்து நியாயத்தை எடுத்து வுடுங்க. நான் கட்சீல வந்து தீர்ப்பு சொல்லுவேன்.
நம்ப கையிலே வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

பட்டிமன்றத்தின் இந்த தலைபிற்கு நடுவராக இருக்க சம்மதித்து புதிய இழையத்தொடங்கி வைத்ததற்கு மிக்க நன்றி அக்கா. இந்த தலைப்பை பொருத்தவரை நான் "இதனால் பெற்றொர்களின் தனிமை பாதிக்கபடுகின்றது" என்று வாதாட வந்துள்ளேன். இந்த விசயம் அந்தக் காலம் இந்த காலம் என்று இல்லாமல் எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு விசயம் ஏன்னா குழந்தைகள் பெற்றோருடனோ அல்லது உறவினருடனோ தான் தூங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.எங்கு படுத்தாலும் தூங்க வேண்டும் அது ஒரு இயற்கையான விசயம்.ஆனால் இதுவே சில குடும்பங்களில் பெற்றோரை பிரிக்கும் ஒரு பாலமாக அமைகின்றது என்பதை எத்தனையோ பெற்றோர்களால் அதை உணர முடியாமல் இருப்பது தான் பரிதாபமான விசயம். இன்னும் பேசுவோம்.

அன்பு நேயர்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்கள் பதிவுகளின் தலைப்பில் நீங்க வாதாடும் கட்சியைக் குறிப்பிடும்படியான தலைப்பை போடவும், இதனால் நடுவருக்கு தீர்ப்பு கூறுவது சுலபமாக இருக்கும் சரீங்களா.

கண்டிப்பாக அது பாதிப்பு தான் எல்லாம் தெரிந்திருந்தும் கூட தான் படுக்க வைக்கிறேன்.எப்படி தனியாக படுக்க வைக்க குழந்தை பாவம் என்பதெல்லாம் அடுத்து வரும் விஷயம்..ஆனால் பல குடும்பங்களிலும் ப்ரச்சனைக்கு முதல்க் காரணம் அது தானாக இருக்கும்..வெளியே மேலோட்டமாக கனவர் மனைவியை திட்டுகிறார் மனைவி சரியாக அனுசரிப்பதில்லை என்றெல்லாம் சொன்னாலும் உண்மையான பெருமாலான ப்ரச்சனைக்கு காரணம் இதுவாக தான் இருக்கும்..அரிகில் பிள்ளைகள் இருப்பதால் இருவரிடையே நெருக்கம் வரும் வாஇப்ப்ய் மிகவும் குறையும்...இன்னும் பல தாம்பத்திய விஷயங்களில் அருகில் குழந்தை இருந்தால் ஈடுபட மிகவும் சிரமம்..அதிலும் அது கொஞ்சம் வளர்ந்து இடையே எழுந்து விட்டால் வாழ்நாள் பூரா குற்றௌணர்வு தான்.
அதுக்காக இப்ப தாம்பத்தியமா பெரிசு என்று கேட்கலாம்.ஆம் அது தான் எல்லாத்துக்கும் முக்கிய காரணம்.அதிலிருந்து தான் எல்லா ப்ரச்சனையும் முளைக்கும்.என் கனவரின் தோளில் நான் விளையாட்டுக்கு கைய்யைப் போட்டாலே என் மகள் இருவரையும் அடிப்பாள் கைய்யை எடுக்க சொல்லி.இதில் கூடவே எப்பவும் படுக்க வைத்தால் அவ்வளவு தான்

ஆ... ஆரம்பமாகிவிட்டதா......
இதோ வந்திட்டேன், நான் நினைத்தேன் எங்கே ஜெயந்திமாமி காணாமல் போய் விட்டாவோ என்று..... என்னுடைய கட்சி, குழந்தைகளை எம்முடன் தான் உறங்க வைக்க வேண்டும்....

மாமி நான் இதுபற்றி நிறைய எழுத வேண்டும்..... அதனால் அவசரப்படு தீர்ப்பை வழங்கிட வேண்டாம்... இப்போ நேரமில்லை... 2/3 நாள் போகட்டும் மாமி தீர்ப்புச் சொல்ல.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்ன மாமி இப்படி அசத்துறீங்க வாழ்த்துகள்..எனக்கு விரிவாக போட டைம் இல்லை ஆனா குழந்தைகள் என்னோட வைத்துகனும் அதுதான் என் கருத்து :-)

அவங்க தளி சொன்னது போல அப்படி கோபமாக கையை எடுன்னு சொல்லும் அழகே தனிதான்....தூக்கத்தில் நம்மை தேடுவது..உலருவது...அரை தூக்கத்தில் வந்து என்னை கிஸ் செய்யுவது இதெல்லாம் பார்க்க மனசுக்கு எவ்லோ சந்தோசம்..இன்னும் நிறைய இருக்கு டைம்தான் இல்லை...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நீங்கள் சொல்வதுதன் சரி.என் குழந்தைகள்,தனியாகதான் படுப்பார்கள்.நான் கொஞ்சநேரம் அவர்களோடு படுத்தால் கூட டேடி போயாச்சு ,நீங்க போங்கமானு அனுப்பிவிடுவார்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

முதலில் எனக்கும் தலைப்ப படித்ததும் குழந்தைகள் நம்முடன் இருப்பது தான் நல்லது என்று தோன்றியது ஆனால் சுஹைனா தளிகா இவர்களின் கருத்துக்களை படித்ததும் எனக்கும் அவர்கள் கூறுவது தன் சரி என்ரு தோன்றுகிறது...அதாவது நானும் குழந்தைகள் தனியே படுத்து கொள்வது நல்லது என்று தான் வாதாட விரும்புகிறேன். அவ்வாறு தனியே இருந்து பழகுவதால் பெற்றவர்க்கு இருக்கும் இடையே அன்னியோன்யம் அதிகரிக்கிறது மேலும் குழந்தைகளை பற்றி அவர்கள் எதிர் காலம்,படிப்பு பற்றி நம்மால் கலந்து ஆலோசிக்க முடிகிறது..மேலும் குழந்தைகளும் தனியே இருந்து பழக வேண்டி உள்ளது,,அதாவது வெளியூர்,வெளிநாடு சென்று படிக்கும் போது அது அவர்களூக்கு கண்டிப்பாய் பயன்படும்.அவர்கள் தனியே படுப்பதால் அவர்களுக்கும் நமக்கும் உள்ள அன்பு குறைய வாய்ப்பு இல்லை..நாள் முழுவதும் அவர்களை நாம் கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்.மேலும் குழந்தைகளுக்கு தேவை இல்லாத பயம் அழிந்து தைரியம் வரும்..

என் கருத்து குழந்தைகளை தனியாக படுக்க வைப்பதே நல்லது.அவர்களுக்கு என்று தனியறை இருப்பின் அதனை அவர்களின் இஷ்டம் போல் அலங்கரித்து( கார்ட்டூன் திரைச்சீலைகள் மற்றும் விரிப்புகள்) வைத்துவிடல் நல்லது.சிறிது வயதிற்கு பின் அவர்களுக்கென்ற உரிமையை தருதல் நல்லதே.கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவினை மேலும் வலுப்படுத்தவே இந்த முறை நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.இரு குழந்தைகள் எனில் இந்த முறை மிக மிக எளிது.ஒரு குழந்தை எனில் சிறிது கடினமே. Every day is a little life.Live it to its fullest

நடுவர் அவர்களே எங்கள் கட்சி தான் ஸ்ட்ராங்காகிக் கொண்டு போவதை கவனித்திருப்பீங்க, உங்களுக்கும் இரண்டு குழந்தைகளை வளர்த்ததின் அனுபவம் நல்லாவே இருக்கும் என்பதால், கொஞ்சம் முன்னே பின்னே பார்த்து தீர்ப்பை சொல்லுங்க சொல்லுவீங்கன்னு தெரியும். இருந்தாலும் நாங்க அப்பபோ வந்து இப்படி நினைவுப்படுத்திக் கொண்டிருப்போம்.

என் கட்சியைச் சேர்ந்தவங்க ரொம்ப ரொம்ப தெளிவாக பேசுராங்க அதை யெல்லாம் பார்த்த பின்பும் எதிர் கட்சியினர் குழந்தையை கட்டிப் பிடிச்சித்தான் தூங்குவேன் என்று அடம் பிடிப்பவர்களை நாங்கள் என்னச் சொல்வது? எங்க வாதம் என்னன்னா கணவன் மனைவிக்குள் ஒரு அன்னியோன்யத்தை வளர்த்துக்கோங்க அதற்கு தடையாக குழந்தையை வைத்துக் கொண்டு பிறகு அவஸ்தைப் படாதீங்கன்னு தான், குழந்தைக்கென்று தனி அறை மற்றும் தனி உடமைகளை கொடுத்துப் பாருங்க பிறகு உங்க பக்கம்கூட தலை வைத்து படுக்க மாடாங்கன்ற உண்மை புரியும். ஏதோ நாங்க எங்க அனுபவத்தில் கண்டதை சொல்லிட்டோம் அப்புறம் உங்க தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்.

நாள் முழுவதும் நீங்க இருவருமோ அல்லது உங்க கணவரோ வெளியில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டில் கிடைக்கும் ஒரே சுகம் உங்க >>>>>பாட்னரின் அரவணைப்பு மட்டும் தான் நடுவர் அவர்களே இதை நோட் பன்னிக்குங்க.அதை வேண்டாம் என்று சொல்றவங்க ரொம்ப வேடிக்கையானவங்க.புருசனுக்கு சோறாக்கி போடுவது, தலை துவட்டுவது, காது கொடாய்வது, நகத்தை வெட்டுவது போன்று அவங்க அம்மா செய்ததையே நாமும் செய்துக் கொண்டிருந்தால் பிறகு அம்மாவிற்கு டாட்டா காட்டியதுப் போல், ஒருநாள் பொண்டாட்டிக்கும் டாட்டா காட்டிடுவார்கள் சில ஆண்கள்.அதெல்லாம் வெறும் அன்பைச் சார்ந்த விசயங்கள் ஆனால் இவையெல்லாவற்றும் மேலானது தான் இல்லற சுகம் என்பது இதில் தான் கண்ணுங்களா உசாராய் இருக்கனும் இல்லையென்றால் காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தள்ளிக்கிட்டு போன கதை தான் இதை எல்லாம் கேள்விப் பட்டிருப்பீங்க தானே. பிறகு என்ன பிடிவாதம். பேசாம எங்க கட்சிக்கு வந்துடுங்க ரொம்ப ஜாலியாய் இருக்கும்.

ஆமா நான் தெரியாமல் தான் கேட்கின்றேன் குழந்தையைக் கொஞ்சுவதற்கு மற்ற சந்தர்ப்பமே இவங்களுக்கு கிடைக்காதா? இல்லற வாழ்க்கையின் உச்சக்கட்ட சுகமே, அதுவும் எந்தவித இடையூறும் இல்லாமல் அதை அனுபவிப்பது படுக்கை அறையில் தானே,அதில் பச்சிளங்குழந்தையை அருகில் வைத்துக் கொண்டு செயல்படுவது அந்த குழந்தைக்குச் செய்யும் துரோகம் என்பதை நன்கு நினைவில் வைத்துக்குங்க, மேலும் புள்ளைகள பக்கத்தில் வைத்துக் கொண்டு என்னத செய்வது ஒன்னும் புரியல. ஆணுக்கு வேண்டுமானால் அதன் பிறகு ஓய்வுத் தேவைப்படும் ஆனால் பெண்மைக்கு அதன் பிறகும் கிடைக்கும் அந்த தொடு உணர்வு தான் அதிக திருப்தியைத் தரும் இதையெல்லாம் இழந்து பின்னாளில் நினைத்து தவிக்க வேண்டுமா? மேலும் இதனால் குழந்தைக்கும்கூட மனத்தளவில் எனென்னெ அசெளகரியம் வரும் என்பதை என் கட்சியினறும் தெளிவாக கூறிவருகின்றார்கள்.

எந்த விசயத்திற்க்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் தான் கடைசி வரையில் நம்மை பின் தொடரும்.கடைசியாக ஒன்று சொல்கின்றேன் கணவருடன் வாழ்க்கை முழுவதும் செல்லச் சோறு சாப்பிட வேண்டுமானால் குழந்தைகளை இப்போதிலிருந்தே ஒரு அடி தள்ளி வைத்து வளருங்க இல்லைன்னா பொண்டாட்டிக்கோ அல்லது புருசனுக்கோ கிடைக்க வேண்டிய கிஸ்ஸு வேறு பக்கம் போய்விடும் அவ்வளவு தான், இன்னும் பேசுவோம்.

இந்த இழையின் இறுதியில் தனியாக குழந்தையை படுக்கவைப்பது எப்படி என்பது பற்றி அலோசனை வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்

வாரேவா அப்படியே சாலமம் பாப்பியா பட்டிமன்றத்தில் ஒல்லியா ஒரு வாத்தியார் பேசுவாரே அது போலவே பேசிட்டாங்க மனோஹரி.இனி வறேன் நானும் பிறகு

மேலும் சில பதிவுகள்