குழந்தையின் திடீர் கால் வலி

எனது 2.8 வயது மகள் நன்றாக விளையாடி ஆடி ஓடக் கூடியவள்.இன்று காலை எழுந்து ஏதோ காலில் முள் குத்தியது போல குதிகாலை தூக்கிக் கொண்டு நின்றாள்.எதுவோ ஏறி விட்டதோ என்று தேடினேன் காணோம்..பிறகு தூங்கி விட்டாள் எழுந்தபின் பார்க்கலாம் என்று விட்டு விட்டேன்..எழுந்த பின் நொண்டினாள்..பயந்து விட்டேன்...ஆனால் எந்த வருத்தமோ அழுகையோ இல்லை நொண்டி நொண்டி நடக்கிறாள்..வலிக்கிறது என்று கேட்டால் மட்டும் சொல்கிறாள்..சிறித்துக் கொண்டே சொன்னதால் சும்மா என்னை ஏமாற்றுகிறாள் என விட்டு விட்டேன்.
பின் தவழ்ந்தாள் நான் ரொம்ப பயந்து விட்டேன் அப்பொழுதும் அதே சிரிப்பு அதே நோண்டல் தான்..குறும்பில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் நோன்டினாள்..காலில் தைலம் போட்டு விட்டு மதியம் திரும்ப தூங்க வைத்தேன்..தூங்கி எழுந்த பின் முட்டி இரண்டையும் மடக்கிக் கொண்டு குனிந்து குடிந்து நிமிராமல் நடக்கிறாள்.
இன்று ஒரு நாள் பார்த்து விட்டு நாளை காலை மருத்திஉவரிடம் கொண்டு செல்ல இருக்கிறேன்...மற்ற எந்த கம்ப்லெயின்ட்டும் சொல்வதில்லை அமைதியாக தூங்குகிறாள்..எதனால் இந்த வலி??
இன்றே மருத்துவரிடம் போக இருந்தேன் ஆனால் ஒரு பக்கம் பயம் எதுவும் மருந்து ஊசி என குத்தி இல்லாத நோயை வாங்க வேண்டாமே பொறுPPஓம் என இருந்து விட்டேன்.
நான் சந்தேகிக்கும் சில காரணங்கள்:
1)2 நாட்களுக்கு முன் சைக்கில் வாங்கினோம்..அது கொஞ்சம் அவள் கால் எட்டாமல் இருந்தது என்றாலும் அவள் அடம் பிடித்ததால் கொண்டு வந்தோஷம் அதில் 25 நிமிடமாவது விளையாடியிருப்பாள்..அதனால் தொடையில் ஏதும் ஸ்பெரியின் ஆகி இருக்குமோ??சைக்கில் ஓட்டி அடுத்தநாள் வராமல் 2 நாள் கழித்து வலி வருமா?
2)வாரத்தில் ஒரு நாளாவது ஒரு கண்ணாடியை உடைப்பாள்..அதில் ஏதாஅவ்து சில் கண்ணுக்கு தெரியாமல் உள்ளே போயிருக்குமோ?
3)தினசரி செய்யும் சின்ன காரியங்களுக்கு கூட அவளுக்கு பொறுமை இல்லை..ஒரு சேரில் ஏற கூட சும்மா ஏறாமல் ஓடி வந்து தான் ஏறுவாள்..அப்பப்ப டமார் டிம்மிர்னு முட்டிக் கொண்டு தான் ஏறுவாள்..அப்படி எதுவாவது பட்டிருக்குமோ?
இப்பொழுது அவள் கால் இரண்டையும் நடுவில் 1/2 அடி இடைவெளி விட்டு விரித்துக் கொண்டு முட்டியையும் மடக்கிக் கொண்டு குனிந்து நடக்கிறாள்....மருத்துவர் சொல்லும் முன்பே உங்களது ஆலோசனை எனக்கு மிகவும் அவசியம்.
இப்படி ஏதும் அனுபவம் உண்டா?எனக்கு ரொம்ப பயமாக தான் இருக்கு.

ரீமா குட்டி எப்படி இருக்கிறாள்.நீங்கள் துபாயில் தானே வசிக்கிறீர்கள்.பொதுவாக இங்கே ஊசி போடுவது குறைவு.ஏன் பயப்படுகிறீர்கள்.ஆனால் சொல்வது சுலபம்.நடைமுறையில் சாத்தியமில்லை.குழந்தைகளுக்கு ஒன்று என்றால் நமக்கு அவ்வளவு தான்.அதுவும் இயல்பாக இல்லாமல் இருந்தால் சொல்லவே வேண்டாம்.நான் எப்போதுமே 3 நாள் கைவைத்தியம் கொடுப்பேன்.பிறகு தான் டாக்டர்.எனக்கு தெரிந்து அவள் சைக்கிள் ஓட்டுவதனால் தான் அந்த வலி இருக்கும்.ஏனென்றால் கண்ணாடி குத்தியிருந்தால் அன்றைகே குழந்தை வலியால் துடிக்கும்.அந்த இடம் லேசான சிகப்பு நிறமாக இருக்கும்.நீங்கள் தான் பாத்தை செக் பண்ணிட்டீங்கல.நாமே திடீரென்று உடற்பயிற்ச்சி செய்தால் இரண்டு நாள் கழித்து தான் அதன் effect தெரியும்.குழந்தைக்கு சைக்கிள் கொஞ்ச கொஞ்சமாக ஓட்ட கற்று கொடுங்கள்.பயம் வேண்டாம்.டாக்டரிடம் சென்று விட்டு என்ன சொன்னார்கள் என்று மறக்காமல் பதிவு போடுங்கள்

எப்படி இருக்கிங்க? ஓ.. ரிமா குட்டிக்கா? ஒ.க் என்னுடய்ய நெய்பர் வீட்டு குழந்தைக்கு இந்த மாதிரி நடந்தான் 3 நாட்கள். அதாவது அவன் படுக்கும் போது பெட்டில் குதித்து விளாயாடி ஏற்ப்பட்டது என்று என் நெய்பர் சொன்னாங்க. குதிக்கும் போது ஏதாவது காலில் ஸ்ப்ரெயின் ஆகியிருக்க வாய்ப்புகள் அதனால் ரொம்ப அழுத்தி தேய்க்காமல் மசாஜ் குடுத்து பாருங்க தளி. இங்க டாக்டர்காள் ரெக்கமண்ட் செய்வது எக்காரியம் கொண்டும் அழுத்தி தேய்க்ககூடாது என்ன காரணத்தினால் என்று தெர்யும் வரை சாப்டாக மசாஜ் செய்து விடுங்க. வார்ம் வாட்டரில் ஒத்தடம் குடுக்கவும். ஒரு டவ்வலை மைக்க்ரோவேவில் 10 நிமிடம் வைத்து எடுத்து அதை சிப்லாக கவரில் போட்டு முதலில் உங்க கையில் போட்டு பார்த்து விட்டு அவ காலில் லைட்டாக ஒத்தடம் குடுக்கவும்.
லைட்டாக அவ 2 கால்களிலும் கட்டை விரலால் லைட்டா ப்ரஸ் செய்துகொண்டே வரவும் அவ எந்த இடத்தில் வலி கண்டுகொண்டு அந்த இடத்தை கவனம் வைத்து அந்த இடத்தில் இந்த ஒத்தடம் கொடுக்கவும். 2 நாடகளுக்கும் மேல் வைத்து கொள்ள வேண்டாம், எதுக்கும் டாடரிடம் காண்பிக்கவும். அவல் ஆக்டிவா இருந்தால் பயப்பட தேவையில்லை.டேக் கேர்.

மேலும் சில பதிவுகள்