கர்ப்பிணி பெண்களுக்கான சர்க்கரை நோய் பிரச்சனைகள்

http://www.arusuvai.com/tamil/forum/no/8305

மேற்கூறிய திரெட்டில் எனக்கு அறிவுரைகள் மற்றும் கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் எனது மனதார்ந்த நன்றி.

இப்பொழுது நான் குழந்தை உண்டாகி இருக்கிறேன்.

Harmonal imbalance,pco,typeII diabetics,Irregular periods,ovalation problem போன்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய பிரச்சனைகள் இருந்ததால் diet control, Metformin tablet(500mg-0-850mg) உடன்,1 hour daily walking ம் சென்றேன்.Sugar கட்டுப்பாட்டுக்குள் வந்தது, morning எழும்பியவுடன் பார்க்கும் level தவிர.

ஹார்மோன் ஊசி போட்டு,கரெக்ட்டாக ovalation time,blood test மூலம் doctor சொன்னார்கள்,நார்மல் முறையில் கருத்தரித்து விட்டேன்(not iui/not ivf)

கருத்தரித்த உடன் metformin நிறுத்த சொல்லியிருந்ததால் நிறுத்தி விட்டேன்(இப்போது எடுத்து பார்த்தால் sugar level நார்மலாக இல்லை).கூடி விடுமோ என்று பயந்து பயந்து சப்பாத்தியும்,ஏதாவது ஒரு காய்கறியுமே தினமும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.நிறைய சாப்பிட பிடிக்கவில்லை.சத்தே இல்லாதது போல் weak ஆக உணர்கிறேன்.குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுமோ என பயமாக உள்ளது. இவ்வளவு வருடம் கழித்து கிடைத்ததை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என பயமாக உள்ளது.சாதம் சாப்பிட வேண்டும் போல் ஆசையாக உள்ளது.

1.நான் சாதம் சாப்பிடலாமா,தினமும் எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்.
2.பழவகைகளில் எந்த பழங்கள் சாப்பிடலாம்.நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம்.
3.எந்த பழங்கள் நான் சாப்பிடவே கூடாது.
4.இளநீர் குடிக்கலாமா.
நான் இங்குள்ள டாக்டரிடம் மேற்கூறியவற்றை கேட்டால் இந்த நாட்டு diabetic chart தருகிறார்.அது எனக்கு உபயோகப்படாது. நமது நாட்டு diabetic chart யாரிடமாவது இருந்தால் எனக்குமெயில் பண்ணுவீங்களா.
twinkle79_tony@yahoo.com
5.நான் 1 hour walking pregnent ஆவதற்கு முன்பு போனேன்.இப்பொழுது கர்ப்பிணி பெண்கள் திரெட்டை பார்த்த பொழுது முதல் மூன்று மாதம் ரெஸ்ட் எடுப்பது நல்லது என்று போட்டிருந்தது.இப்பொழுது நான் தினமும் language class போகவர மொத்தத்தில் 45 நிமிடங்கள் walking போக வேண்டிய சூழ்நிலை.Sugar இருப்பதால் நான் 45 mins walking போவது நல்லதா அல்லது ரெஸ்ட் தான் எடுக்க வேண்டுமா.மேலும்,தனிப்பட்ட முறையில் stress ரொம்ப இருந்ததால் தான் language class -ற்கு join செய்தேன்.- walking போகலாமா என்று தெரிந்தவர்கள் பதில் சொன்னால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

6.மல்லாந்து படுத்தால் மூச்சு முட்டுவது போல்,uneasy ஆக உள்ளது.எதிலோ படித்த ஞாபகம்,ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று.என்ன காரணத்திற்காக என்று எனக்கு தெரியவில்லை.எத்தனை மாதத்திலிருந்து ஒருக்களித்து படுக்க ஆரம்பிக்க வேண்டும்.

மனோகரி அக்கா,செந்தமிழ்செல்வி அக்கா,தளிகா,இலா, இஷானி,அதிரா அக்கா,மாலதி அக்கா,தேவா அக்கா,மேனகா,ஜெயந்தி மாமி, டிசென்,ஜலீலா அக்கா,அஞ்சலி,மர்ழியா,அபினவி,அஸ்மா அக்கா,மனோ அக்கா மற்றும் பெயர் விடுபட்டுப் போன அனைத்து சகோதரிகள் மற்றும் தோழிகளிடமிருந்து அறிவுரைகள் மற்றும் கருத்துக்களை விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.

எனக்கு இப்போதிருக்கும் ஒரே துணை மற்றும் ஆறுதல் அறுசுவை தான்.பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
Anupa twinkle

டியர் சங்கீதா,

ரொம்ப நன்றிப்பா உங்கள் அக்கறையான பதிலுக்கு.நீங்கள் கூறிய உணவுமுறைகளை கட்டாயம் பின்பற்றுகிறேன்.

சங்கீதா,எனக்கு ஒரு டவுட்,இங்கு டாக்டர் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னதால், பயன்ப்டுத்துகிறோம்.நீங்கள் தேங்காய்பால் வேண்டாம் என்று சொல்லி இருக்கீங்களே,எதனால் என்று சொல்ல முடியுமா,தெரிந்து கொண்டால் பயனாக இருக்கும்.

மீண்டும் உங்கள் அக்கறையான பதிவிற்கு நன்றி சங்கீதா.

ட்யர் Anupa,

மன்னிக்கவும்.Coconut water என்பதற்கு பதில் coconut milk யென்று டய்ப் செய்து விட்டேன்.U can take coconut and not its water becoz it contains sugar.Thanks for ur reply.

Be Good,Do Good

மேலும் சில பதிவுகள்