ருசியான சாம்பார் வைக்க...

அன்பு தோழியருக்கு,

எப்படி ருசியான சாம்பார் வைப்பது ?

இது கொஞ்சம் அபத்தமான கேள்வியா கூட இருக்கலாம் :-)

இங்க இருக்கற சாம்பார் குறிப்புகளை பார்த்தேன்..சில குறிப்புகள்ல முதல்ல புளித்தண்ணி வைத்து அதுல காய் சேர்த்து கடைசியா பருப்பு சேக்கணும்னு இருக்கு...

சில முறைல பருப்பு காய்லாம் சேர்த்து வேக வச்சுட்டு கடைசியா புளிதண்ணி சேர்த்து கொதிக்க விடணும்னு இருக்கு...

பருப்ப காயோட சேர்த்து வேகவிடறப்ப சில சமயம் பருப்பு அடியில தங்கி அடிபிடிக்குது :-(

எனக்கு அம்மா சொன்னது என்னன்னா, பாகற்காய் சாம்பார்லாம் வைக்கறப்ப புளி முதல்ல சேக்கணும் மற்றபடி எல்லா சாம்பார்க்கும் கடைசிலதான் புளி சேக்கணும்னாங்க...

நான் எல்லா சாம்பாரும் ஒரே முறைலதான் வைக்கிறேன்...

முதல்லயே தாளிச்சு காய வதக்கிட்டு தண்ணீர் ஊற்றி கொதித்து காய் வெந்ததும் புளி,சாம்பார் பொடி சேர்த்து கொத்தித்ததும் கடைசியா பருப்பு சேர்த்து கொத்தித்ததும் இறக்குவேன்..அதனாலயோ என்னவோ எந்த சாம்பார் வைத்தாலும் ஒரே சுவைல இருக்கு :-(

பொதுவா எந்த முறைல சாம்பார் வைக்கணும்....வைக்கும் முறை ஒவ்வொரு காயை பொருத்து மாறுபடுமா ?

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா.
காய் வெந்ததும் புளி ஊற்றனும்,பிறகு புளி வடை அடங்கியதும் பருப்பு ஊற்றி கொதிக்க விடனும்.வேண்டு மனால் யரும் சமைக்கலாமில் என்னுடைய காய்கறி சாம்பாரை பாருங்கள் நீங்கள் கேட்பது போல் இருக்கிறதா பாருங்கள்.

ஜலீலா

Jaleelakamal

முதலில் சாம்பாருக்கு பருப்பில் வெங்காயம்,பூண்டு சேர்த்து வேகவைத்து தனியே வைத்துக்கொள்ளுங்கள்.காய்களில் நீர்சேர்த்து அதில் சாம்பார்பொடி பச்சை மிளகாய்,தக்காளி ஆகியவற்றை காய்களுடன் உப்பு சேர்த்து வேகவையுங்கள் பின்பு காய் முக்கால் பாகம் வெந்த பிறகு புளி,பருப்பை சேருங்கள் புளியை முதலில் சேர்த்தால் காய் வேகுவதர்க்கு அதிகம் நேரமாகும் அது மட்டுமல்ல காய்களில் அதிகம் புளிப்பு சுவை ஏறிவிடும் பருப்பையும் முதலில் சேர்த்தால் அடி பிடிக்கும் ஆனால் பருப்பு வெந்த நீரில் காய்களை வேகவைக்கலாம்.தாளிப்பு கடைசியில் செய்தால் சாம்பார் கமகமக்கும் தாளிப்பில் வெங்காயத்தை பொன்னிறமாக வாசனை வரும் வரை வதக்கனும் சாம்பார் நன்றாக வரும் முயற்ச்சியுங்கள்

ரஸியா மேடம்,

தங்கள் பதிலுக்கும் ,சாம்பார் குறிப்புக்கும் நன்றி. :-)
உங்கள் குறிப்புபடி செய்துபார்த்துவிட்டு பதில் தருகிறேன்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

எனக்கு தெரிந்த சாம்பார்
முதலில் பருப்பு புன்டு மஞ்சல் thool,tomata-2 சிறிது உப்பு செர்து வெகவிடவும். காயை தனியஎ வெகவிடவும். தெங்காய் துருவி மல்லி துள் மிள்காய் துள் செர்து வறுது பின் அரைத்து கொள்ளவும்.பின் அரைத்த மசாலா காய் வெகவைத்த பருபு செர்த்து அடுப்பில் வைத்து கொதி விடவும். பின் கடுகு வெங்காயம் பெருங்கயா துள் செர்த்து தாளிகவும்.
ஏதாவது தவறு இருந்தால் .sorry sorry

anuchakko

ஹாய் அனு,

காலையிலேயே உங்களுக்கு பதில் போட நினைத்து முடியவில்லை.. பதிலளி ஆஃப்ஸன் இல்ல...

எதுக்கு ஸாரி-லாம்... உங்க குறிப்புக்கு நன்றி... இனிமே சாம்பார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரிதான். :-)

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

மேலும் சில பதிவுகள்