ஸ்பாஞ்ச் கேக்

தேதி: October 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.6 (5 votes)

 

பொடித்த சீனி- 250 கிராம்
வெண்ணெய்- 250 கிராம்
முட்டை-4
மைதா மாவு- 250 கிராம்
பேக்கிங் பவுடர்- 2 டீஸ்பூன்
ஆரஞ்சு எஸென்ஸ் அல்லது ரோஸ் எஸென்ஸ்- 2 ஸ்பூன்


 

வெண்ணெயை குளிர்சாதப்பெட்டியிலிருந்து எடுத்து room temperatureல் வைக்கவும். அது மிருதுவான பதத்துக்கு வரும்போதுதான் கேக் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
சீனியை நன்கு மாவாகப் பொடித்துக் கொள்ள வேண்டும்.
மாவையும் பேக்கிங் பவுடரையும் கலந்து மூன்று முறை சலிக்கவும்.
முட்டைகளை தனியாகப் பிரித்தெடுக்கவும். முதலில் முட்டை வெள்ளைகளை சிறிதுகூட மஞ்சள் கரு கலப்பில்லாது எடுத்து வைக்கவும்.
பிறகு அவற்றை egg beater அல்லது electronic beaterல் நன்கு அடிக்கவும். அடிக்க அடிக்க முட்டை வெள்ளை கட்டித் தயிர்போல திரண்டு வரும். இறுதியில் கட்டியான பாளம்போல தயிர் பதத்தில் வந்ததும் அடிப்பதை நிறுத்தவும்.
ஒரு அகன்ற க்ளாஸ் பாத்திரம் எடுத்து இளகலான வெண்ணெய், சீனியைப் போட்டு நன்கு அடிக்கவும். அல்லது electronic beaterலும் இதை மட்டும் நன்கு நுரை வர அடிக்கவும்.
பிறகு முட்டை வெள்ளையை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஒரு ஸ்பாட்டுலாவால் மிருதுவாக கலக்கவும். பின் அடித்த மஞ்சள் முட்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கலக்கவும்.
அதன் பிறகு மாவை ஒவ்வொரு கரண்டியாக சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
இறுதியில் எஸ்ஸென்ஸ் சேர்த்து கலந்து கேக் ட்ரேயில் ஊற்றி பரப்பவும்.
ஏற்கனவே சூடாக்கப்பட்ட அவனில் வைத்து 160 டிகிரி C-யில் சுமார் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
பிறகு 10 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து ஆற வைத்து விரும்பிய வண்னம் துண்டுகள் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

please tell me that "how to make a cake without using the owen.."

Thank you.

cake-il manjal muttai serthal vaasam adikkatha madam..

நேற்று எங்கள் வீட்டில் உங்கள் sponge கேக் தான் செய்தோம் . ரொம்ப நன்றாக வந்தது

சூப்பர் ரெஸிபி.நன்கு விளக்கமாக கொடுத்திருக்கீங்க.

ஆரஞ்சு/ரோஸ் எஸென்ஸில் நீங்கள் கொடுத்திருக்கும் ஸ்பூன் அளவு என்பது டேபிள்ஸ்பூன் அளவா அல்லது டீஸ்பூன் அளவா.

கேக் ஐஸிங் முறை தெரிந்தால் இதுபோல் விளக்கமாக தருவீர்களா.ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.நன்றி.

ஆரஞ்சு அல்லது ரோஸ் எஸென்ஸ் 1 டீஸ்பூன் என்பதைத்தான் ஒரு ஸ்பூன் என எழுதியிருந்தேன். இனி அடுத்தாற்போல ஐஸிங் செய்முறைகள் பற்றி என் குறிப்புகள் பக்கத்தில் விரைவில் எழுதுகிறேன்.

உங்கள் பாராட்டுக்கு என் அன்பான நன்றி!!

ரொம்ப அருமை மனோ மாமி அழகா தெளிவா கொடுத்து இருக்கீங்க.
இதில் லெமென் ஜூஸ் கூட ஊற்றலாம் நல்ல இருக்கும். கேக் செய்து ரொம்ப நாள் ஆகுது, இனிதான் செய்யனும்.
எனக்கு கை வலி டைப்பண்ண முடியல உங்களுக்கு பதிவு போடுவதற்காக வந்தேன்.

ஜலீலா

Jaleelakamal

உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி. எனக்காக ஒரு கேக் ரெஸிப்பி அனுப்பியிருக்கீங்க. கேக் செய்முறையை ரொம்ப தெளிவா விளக்கியிருக்கீங்க. உங்கள் பிஸியான நேரத்திலும் எனக்காக கேக்ரெஸிப்பி கொடுத்த அன்புக்கு கோடானு கோடி நன்றிகள்.

மேடம் எனக்கு ஒரு டவுட், முட்டைகளை தனியே பீட் பண்ணி வைக்க சொல்லியிருக்கீங்க. பட்டர்,சீனி கலவையில் மைதா மற்றும் முட்டைகளை சும்ம கலந்தால் போதுமா? இல்லை சேர்த்து பீட் பண்ண வேண்டுமா

மஞ்சள் கருவையும் க்ரீம் மாதிரி வரும் வரை பீட்பண்ண வேண்டுமா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இன்னைக்கு மாலை கேக் செய்யலாம்னு இருக்கேன் டவுட் க்ளியர் பண்ணுவீங்களா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

உங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி!!

அன்புள்ள தனீஷா!

தற்போதுதான் உங்கள் வேண்டுகோளைப்படித்தேன். உடனேயே பதில் எழுதுகிறேன்.

கேக் செய்முறைகளைப்பற்றி எழுதுவதில் எனக்கொன்றும் சிரமமில்லை. என் சமையல் செய்முறை அனுபவங்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்குமென்றால் அது பற்றி எவ்வளவு எழுதினாலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. பல வகை கேக்குகள் செய்வதில் எனக்கு பல வருடங்கள் அனுபவம் உண்டென்றாலும். கொலஸ்ட்ரால், சுகர் பயத்தினால் தற்போதெல்லாம் அதிகம் செய்வதில்லை. கேக்கை அதன் விதி முறைகள் படி செய்தால் மிக சுலபமாக கேக் செய்ய முடியும். கூடிய விரைவில் அதில் நீங்களும் நிச்சயம் expert ஆகி விடுவீர்கள்.

வெண்ணெய்-சீனிக்கலவையில் முட்டைகளை கலக்கும்போது மட்டும் electronic beaterஐ உபயோகிக்கலாம். [முதலில் முட்டை வெள்ள அப்புறம் முட்டை மஞ்சள்] நன்றாக கலந்து வர அது உதவி செய்யும். electronic beaterஐ உபயோகிக்கும்போது ஒவ்வொரு கரண்டியாக முட்டை உடனே உடனேயே போட்டுக்கொண்டே வரலாம். எல்லாம் தீர்ந்ததும் ஒரு செகண்டில் எல்லாம் நன்கு கலந்ததும் நிறுத்தி விடுங்கள். ரொம்ப நேரம் பீட் செய்ய வேண்டாம். முட்டை மஞ்சளையும் ஓரளவு நுரை வர அடித்துக் கொள்ளவும். Manual egg beaterஆலும் கையால் நன்கு கலக்கலாம்-ஆனால் சிறிது நேரம் பிடிக்கும், அவ்வளவுதான். அதன் பிறகு மைதா மாவை சிறிது சிறிதாக தூவி கையால் மெதுவாக கலந்தாலே போதும். electronic beaterஐ உபயோகித்தால் வேலை சுலபமாக முடியும். ஆனால் மாவு நன்றாக கலந்ததும் உடனேயே நிறுத்தி விடவேண்டும்.

மனோ மேடம் இப்போதான் கேக்செய்ய எல்லாம் எடுத்து வைத்துவிட்டு ஸ்பான்ஜ் கேக் ஓபன் செய்தேன். பதில் கொடுத்துள்ளீர்கள். ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப நன்றி. உங்க வாழ்த்துக்கு நன்றீ. மேடம் எக்ஸ்பர்ட் ஆகாவிட்டாலும் ஏதோ சுவையா சாப்பிடும்படி இருந்தால் போதும்

இன்று செய்து விட்டு சொல்கிறேன். எப்படி வந்தது என. மேடம் அவனில் ஹீட் பாட்டம் பட்டன் திருகினால் மட்டும் போட்டால் போதுமா. இல்லை வெப்பநிலை முழுவதும் பரவ வேண்டும் என்று வைக்க வேண்டுமா.

நான் தந்தூரி வகைகள் செய்யும் போது 300 C யில் முழுவதும் பட்டனைத் தேர்வு செய்வேன். இருபுறமும் வெப்பம் பரவுவதால் ஓவனை லேசாக மேலே ஒரு இரும்பு ப்ளேட் வைக்கச் சொல்லி மேனுவலில் கொடுத்துள்ளார்கள்.(இல்லையெனில் முழுவதும் வெப்பம் பரவுவதால் உள்ளேயுள்ள சர்க்யூட் எரிந்து விடுமாம்) நான் அப்படிதான் வைப்பேன்.

கேக்கிற்கு எப்படி வைப்பது? தொந்தரவிற்கு மன்னியுங்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

கேக் செய்முறையை திறம்பட விளக்கியுள்ளீர்கள். உங்கள் குறிப்புகள் நல்ல அனுபவமிக்க குறிப்புக்கள். ஒரு சில குறிப்புகள் என்மருகனின் பாராட்டை பெற்று தந்தது.மனமார்ந்த நன்றி தங்களுக்கு

தங்களினின் பின்னூட்டமும் பாராட்டும் மேலும் மேலும் நல்ல குறிப்புகள் தருவதற்கான மிகுந்த உற்சாகத்தை தருகிறது. தங்களுக்கு என் அன்பான நன்றி!!

மேடம் கேக் செய்தேன். நல்ல சூப்பரா வந்தது. உங்க ஸ்டெபை பாலோப் பண்ணி அப்படியே செய்தேன். ஹீட்பாட்டம் மட்டும்தான் கொடுத்தேன். சுவை நன்றாக இருந்தது. 30 நிமிஷத்திற்கு மேலாக வைத்து விட்டேன். அதனால் அடியில் கொஞ்சம் தீய்ந்து விட்டது. டேஸ்ட் செய்துவிட்டு எல்லோரும் சுவை நல்லாயிருக்குனு சொன்னாங்க. பாராட்டு உங்களுக்குத்தான். உங்களிடம் இருந்து இன்னும் நிறைய விதமான கேக்குகளை எதிர்பார்க்கிறேன். நீங்க விதவிதமா அனுப்புங்க. நான் செய்து பின்னூட்டம் அனுப்புகிறேன். உங்களுக்கு மிக்க நன்றி மேடம். கேக் போட்டோ அட்மினுக்கு அனுப்பியுள்ளேன். பப்ளிஷ் பண்ணுவார் என நம்புகிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

கேக் நன்றாக வந்ததை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அன்பான பின்னூட்டத்திற்கு என் நன்றி!! விரைவில் வேறு சில வகை கேக்குகளின் செய்முறைகள், ஐஸிங் வகைகள் விரைவில் எழுதுகிறேன்.

நானும் செய்து பார்த்தேன்,மிக நன்றாக வந்தது,கேக் குக் ஆன பின்பு எனக்கு மேல் பகுதி கிரீம் கலராகவே இருந்தது,ப்ரவுனா வரலை,எந்த கலரில் மேல் பகுதி வரனும்?

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்களுக்கும் கேக் நன்றாக வந்ததறிய மகிழ்வாக இருக்கிறது. பொதுவாக கேக்கின் அடிப்பகுதிதான் இலேசான பொன்னிறமாக இருக்கும். மேல் பகுதி சில வகை கலவைகளில் இலேசான பொன்னிறமாகவும் சில வகை கலவைகளில் வெள்ளயாகவும் இருக்கும். அதனால் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

திருமதி. தனிஷா அவர்கள் இந்த செய்முறை குறிப்பின்படி தயாரித்த ஸ்பாஞ்ச் கேக்கின் படம்

<img src="files/pictures/cake1.jpg" alt="Sponge cake" />

நீங்கள் செய்த ஸ்பாஞ்ச் கேக் மிகவும் அழகாக இருக்கிறது. என் பாராட்டுக்கள்!

அன்புள்ள தனீஷா!

உங்கள் சந்தேகத்தை இப்போதுதான் பார்த்தேன். இதற்குள் செய்ய ஆரம்பித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

கேக் செய்ய கீழுள்ள உஷ்ணம் இருந்தால் போதுமானது.

மனோ மேடம் ஸ்பாஞ்ச் கேக் பிள்ளைகளுக்கு செய்து குடுத்தேன். மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். அப்படியே நானும் டேஸ்ட் செய்து பார்த்து விட்டேன். சூப்பராக இருந்தது. நன்றி உங்களுக்கு.

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. வானதி அவர்கள் தயாரித்த ஸ்பாஞ்ச் கேக்கின் படம்

<img src="files/pictures/aa201.jpg" alt="picture" />

அன்புள்ள வானதி!

ஸ்பாஞ்ச் கேக் சுவையாக வந்ததறிய மகிழ்ச்சி! பின்னூட்டமும் கொடுத்து புகைப்படமும் இணைத்துவிட்டீர்கள். ஸ்பாஞ்ச் கேக் மிக அழகாக இருக்கிறது!! நன்றி!!

கேக் செய்முறை விளக்கம் தெளிவாக எல்லோரும் எளிதாக செய்யும் வண்ணம் விளக்கி இருக்கீங்க.நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மனோ மேடம்,

இன்று உங்களுடைய ஸ்பாஞ்ச் கேக் செய்தேன் ரொம்ப சாப்டாகவும் நல்ல சுவையாகவும் இருந்தது ரொம்ப நன்றி மேடம் இந்த குறிப்பு தந்தற்க்கு.