Splenda sweetner

Splenda sweetner பயன்படுத்தி என்ன வகை இனிப்புகள் செய்யலாம். நான் ஒரு முறை கேக் செய்து,பிஸ்கட் ஆகி விட்டது.டயபடிக் உள்ளவர்களுக்கு இந்த sweetner பயன் படுத்தி செய்யக்கூடிய குறிப்புகள் தெரிந்தவர்கள் யாராவது சொல்லவும். நன்றி.

நீங்க splenda.comக்கு போய் பாருங்கள் நிறைய recipes இருக்கும்
அன்புடன்
காயத்திரி

நன்றி காயத்ரி. ஆனால் நான் கேட்பது Indian sweets வகைகள் செய்வதற்குரிய குறிப்புகள். பாயாசம், கேசரி போன்றவைகள் செய்யலாம் என்று கேள்விப்பட்டேன். வேறு பலகாரங்கள் செய்வது பற்றி கேட்டேன். என்ன அளவுகள் போடுவது என்று தெரியவில்லை.தெரிந்தால் சொல்லுங்கள். Anyway thank u so much 4 ur reply.

எனக்கு சரியா தெரியலை ஆனால் ஸ்வீட்டனரை சூடுபடுத்த கூடாது கடைசியில்வேனா சூடா இருக்கும் உணவில் கலந்து கொள்ளலாம் என கேள்விப்பட்டேன்

டியர் ஜிஜா

ஒரு டம்ளர் பால் அல்லது டீக்கு இரண்டு போதும் அதான் எனக்கு தெரியும், மற்றபடி கேகு தெரியல.

மனோ மாமி சொல்வார்கள்,இதற்கு பதில்

ஜலீலா

Jaleelakamal

நன்றி தளிகா. இந்த splenda sweetner பயன்படுத்தி கேக் கூக்கீஸ் செய்யலாம்.நான் முதலில் சொன்னது போல் கேக் செய்ய அது பிஸ்கட்டாக வந்தது. ஆனால் சுவை நன்றாக தான் இருந்தது. எல்லாருக்கும் பிடித்தது.(கேக் பிஸ்கட்டாக மாறிய ரகசியத்தை நான் யாருக்கும் சொல்லவில்லை). நான் தான் அளவு சரியாக போடவில்லை என நினைக்கிறேன். எனக்கு நம் ஊர் இனிப்பு வகைகள் செய்தால் நன்றாக வருமா என தெரியவில்லை. நானே முயற்சி செய்து பார்க்கிறேன். உங்கள் பதிலுக்கு நன்றி :-)

நன்றி Jaleela sister. பால், டீக்கெல்லாம் equal tablets பயன்படுத்துவேன். நம் ஊர் இனிப்பு பலகாரங்கள் செய்வதற்க்கு தான் அளவு மற்றும் முறைகள் வேண்டும்:-)

மேலும் சில பதிவுகள்