அனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்
உமா
ஜீம்பூம்பா இழையே முகப்பிற்க்கு வந்துடு :)
ஐ வந்துட்டு!!!
தோ பாருங்கப்பா அப்பாவி வனியை நாங்க கெடுக்குறோமாம் சொல்லிகிட்டாங்கப்பா :)
வனி பசங்க உங்களை ரொம்பவே பிரீயா வைத்து இருக்காங்க போல எனக்கு புகை வருது :(
அட மேனு வாங்க வாங்க வெல்கம் வெல்கம் :)
நீங்க வேற என்ன அதுகுள்ளயான்னு கேள்வி உமா பையனுக்கு 1 வயசு ஆக போகுது தெரியுமா வருஷத்துக்கு ஒன்னுன்னு பெற்றாதானே ஒரு 10த்தோ 12டோ லைனா பெர்று போட முடியும் :)))
மர்ழி திரும்பி பார்காம ஓடு :D
இதோடா என்னை ஓட்ட வந்த கவி கண்ணே நீங்க எப்ப உமாவோட போட்டி போட போறீங்க?அவங்க வருஷத்துக்கு 1 நீங்க வருஷத்து 2 எப்படி டீலா நோ டீலா ஹா ஹா
அடுத்ததையே என்னால நினைக்க முடியல இதுல இம்புட்டு பிள்ளைகளா?யம்மாடி....
உமா பதீல் மெயில் போட்டுட்டேன் பாருங்க...அரட்டை பக்கமே வருவது இல்லை அதனால தெரியலப்பா...சும்மா மேல்லோட்டமா டைம் கிடைத்டால் வருவேன் அம்புட்டுதான்,,இப்ப இந்த பதிவால் வர வேண்டிய முக்கிய முக்கிய முக்கியமான கட்டாயம் :D
பாவம்பா உங்களை போய் இவங்களாம் ஓட்டுராங்க இப்ப மேனு வேற இன்னும் யாரெல்லாம் வர போறாங்களோ (ஹய்யா இந்த கேப்பில் மர்றவர்களும் வருக வருக வென நாசுக்காக சொல்லிபுட்டேன்)
ஐய்யோ உமா அதெல்லாம் மறக்க முடியுமா...உருட்டுகட்டை ஆட்டோ மங்காத நினைவுகள் :)
உருட்டு கட்டையோட வாங்க நான் இங்கே சைக்கிள் செயினுடன் இருக்கேன் :D
அன்புடன்,
mrs.noohu
அன்புடன்,
மர்ழியா நூஹு
வனி, மேனகா, மர்ழி, உமா
வனி நாங்கெல்லாம் நல்ல எண்ணத்திலேயே பிறந்து,நல்ல எண்ணத்திலேயே வளர்ந்தவங்க.. ஹி ஹி ஹி. குமரன் இப்பயே சமர்த்தா இருக்கானா வெரிகுட் வெரிகுட்.
மேனகா நான் நல்லாயிருக்கேன் எனக்கு இருக்கும் ஒரே ஒரு குட்டியோட நலம்,அதென்ன சீனியர் சிட்டிசன்களோட என்னையும் சேர்த்திட்டீங்க:)நீங்க ரொம்ப நல்லவங்கனு எனக்கு தெரியும், வாழ்த்துக்கு நன்றிமா.
மர்ழி.. நோ டீல்,உங்களை........வரேன் வரேன் இருங்க.
உமா உங்களோட நானும் கூட்டு,ஆட்டோ, உருட்டுகட்டையா இல்லை சைக்கிள்செயினா பார்த்துடலாம்:)
உமா நான் திரும்பவும் சொல்றேன்,நானா இந்த இழையை கொண்டு வரலை தானா வருது....ஆஹ்ஹ்ஹ்ஹா
மறுபடியும் ஒரு சந்தேகம்
ஹாய் தோழிகளே,
மறுபடியும் ஒரு சந்தேகம். குழந்தைக்கு ட்ரை பண்ணும் போது alaska pollack fish சாப்பிடலாமா? இதன் தமிழ் பெயர் என்ன?
கவி, மர்ழி, மேனகா, செல்வி... உதவுங்க!!!
கவி, மர்ழி, மேனகா, செந்தமிழ் செல்வி... அர்ஜுன்'கு உடம்பு சரி இல்லைன்னு உமாராஜ் ஒரு இழைல சந்தேகம் கேட்டு இருக்காங்க. போய் பாருங்க, உங்களுக்கு தெரிந்தா சொல்லுங்க, நான் எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன்.
"சீக்கிரம் சொல்லுங்க தோழிகளே"னு இருக்கு பாருங்க முகப்பில்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hi
early stage vomitting ku uppil ooravaitha " NAARTHANGAAI" 1 thundu vaail vaithukkondal vomit kuraium... serikkum .... adhigam sapida vendam....
Hi uma........... எனக்கு food
Hi uma...........
எனக்கு food details பத்தி தெரியாது .....but உங்க கதைய படித்ததுக்கு அப்புறம் எனக்கும் ஆனந்தகண்ணீர் வந்து விட்டது ...உங்களுக்கு சுக பிரசவம் ஆக என்னுடைய வாழ்த்துக்கள் .......உங்களுக்கு பாப்பா பிறந்ததும் சொல்லுங்க..............
Brintha
இதுவும் கடந்து போகும்
பழைய இழை
எவ்ளோ பழைய இழை.....உமாவின் குழந்தைக்கு இரண்டு வயதாவது முடிந்திருக்கும்......தேதியை பார்த்துட்டு கருத்து சொல்லுங்கப்பா....
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
venthaya kali
எனக்கு யாராவது வெந்தயக்களி எப்படி செய்வது என்று கூறவும்.
சுபாசரண் வெந்தயகளி
http://www.arusuvai.com/tamil/node/5482
http://www.arusuvai.com/tamil/node/3885
இந்த லின்க்கில் போய் பாருங்க சுபாசரண். வெஙந்தய களி குறிப்புகள் இருக்கு.
Yazhinimukil
Thank you very much yazhinimukil.