என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும்

அனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்

உமா

செல்வி மேடம் பிஸி என்று நினைக்கிறேன்.வேறு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.நான் காலையில் டீ குடிக்கிறேன். இது சரியா? என் கணவர் ஹார்லிக்ஸ் குடிக்கச்சொல்கிறார்.அப்புறம் வாரம் 3 முறை இளநீர் குடிக்கின்றேன். தலைக்கு குளிக்கும் பொழுது குடிக்கலாமா?எனக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இல்லை.

அன்புடன்
உமா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உமா,
முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். காலையில் ரீ குடிப்பதால் பிரச்சனை ஏதுமில்லை. ஏன் அதற்குப் பயப்படுகிறீங்கள்? என்னைப்பொறுத்து குடிக்கலாம். தலைக்குத் தோயும் நாட்களில் இளநீரைத் தவிர்ப்பது நல்லது ஏனெனில் சிலருக்கு குளிர் உண்டாகி அதனால் இடுப்புபிடிப்பு கால் கை குத்துளைவு இப்படி ஏற்படலாம். எனக்குத் தெரிந்ததை கூறியுள்ளேன், அனுபவமுள்ளவர்கள் சொல்வார்கள் பொறுத்திருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

thanks அதிரா.நான் இப்பொழுது அனைத்திற்கும் இப்படித்தான் பயப்படுகிறேன். ஏன் என்று தெரியவில்லை. என் கணவர் கூட சொல்கிறார். ஏழு கழுதை வயதில் என்ன பயம் என்று? (அவர் இந்த சாக்கில் என்னை கழுதை என்கிறார்)

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

tea is very good for health. tender coconut(orange colour) is very tasty and then it dont cause any side effects. you drink it anytime dont afraid for this.

congratulations uma. u must take dates and honey daily early morning. u eat green leaves daily. u drink plenty of fresh juices. u take rice small cup and then vegetables more. dont think negative . be happy everyday]

சரி தான் அரசி. நான் செவ்விளநீர் தான் சாப்பிடுகிறேன்.dates எனக்கு பிடிக்கவில்லை(கர்ப்பமானதிலிருந்து தான்).சாப்பிட்டால் வாமிட் ஆகிறது.அதை வேறு எப்படி சாப்பிட என்று தெரியவில்லை.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

நீங்கள் அறுசுவை-க்கு கொடுத்துள்ள கடல்பாசி உணவுகளை சாப்பிட எனக்கு ஆசை. நான் இதுநாள் வரை செய்ததில்லை. நன்றாக இருக்குமா? இதை கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

வாழ்த்துக்கள் உமா,உங்களுக்கு சுப்பிரசவம் ஆக,நல்லப்படியாக குழந்தைப் பெற்றுக்கொள்ள இறைவனை வேண்டுக்கிரேன்.எதற்க்கும் கவலைப்படாதீங்க,மனசை சந்தோசமாக வைத்திருங்கள்.இது ஒரு சுகமான சுமை.போலிக் சத்துள்ள பொருட்களை சாப்பிடவும்.இந்த சமயத்தில் சுகரை கண்ட்ரோலில் வைத்திருக்கவும்,ஆசைப்பட்டதை சாப்பிடுங்க.நேரம் கிடைக்கும் போது கர்ப்பிணி பெண்களுக்கான் ட்ரெட்டைப் பார்க்கவும்,உங்களுக்கு உபயோகப்படும்.எனக்கும் திருமணமாகி 2 வருடம் கழித்து தான் பிள்ளை பிறந்து 1மாதம் ஆகப்போகிறது.தைரியமா இருங்க,பிள்ளைப் பிறந்தது எங்களுக்கு தெரியப்படுத்தனும்.
நான் உங்க ப்பொபைலில் பார்த்தேன் நீங்க கணக்கு டீச்சர்.எனக்கும் கணக்கு என்றால் விருப்பம்.நானும் கண்க்கு படித்துள்ளேன்.

டியர் உமா கடல் பாசி ஒன்றும் செய்யாது செய்து சாப்பிடுங்கள், நல்ல அதில் பாதம் பிஸ்தா எல்லாம் பொடியாக கட் பண்ணி சாப்பிடுங்கள், இளநீர், தேங்காய் தண்ணீர், பாலில் காய்ச்சி ரோஸ் மில்க் மாதிரி செய்து அதி பொடியா கடிபண்ணிய பாதாம் , பிஸ்தா எல்லாம் போட்டு சாப்பிடுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மேனகா.குழந்தை எப்படி இருக்கிறாள்.பெயர் வைத்தாயிற்றா? என்ன பெயர்?
என் சார்ப்பில் ஒரு முத்தம் அவளுக்கு கொடுஙகள். எனக்கு பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.கடவுளிடம் பெண் குழந்தை பிறக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.உங்களுக்கு கணக்கு என்றால் விருப்பமா? எனக்கு கணக்கு மட்டும் தான் விருப்பம்.

அன்புடன்
உமா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்