என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும்

அனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்

உமா

வாழ்த்துக்கள் உமா... தினமும் கொஞ்சம் முலைகட்டிய பச்சை பயிறு சேர்த்துக்கங்க. சுக பிரசவத்திர்க்கு நல்லது'ன்னு சொல்லுவாங்க. டீ குடிப்பது தவறில்லை. குழந்தை'யின் movements கவனிங்க. உடல் உஷ்ண்த்தை அதிகமாக்கும் உணவுகளை தவிருஙக. உங்க அம்மா உடன் இருக்க பயம் ஏன்?? ;) நிம்மதிய சந்தோஷமா குழந்தை பற்றி கனா காண வேண்டிய காலம் இது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

movements நல்லா இருக்கு வனிதா. எங்க அம்மா-வுக்கு எல்லாம் மறந்திடுச்சாம் வனிதா(எப்படி 2 குழந்தை பெத்தாங்கன்னு தெரியலை!). எதுன்னாலும் பக்கத்தில் கேட்பார்கள். ஆனா என்ன இருந்தாலும் இந்த சமயத்தில் அம்மா ஒரு பெரிய பாதுகாப்பு தான்.அதுக்குத்தான இந்தியாவுக்கு ஓடிவந்தேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்,
எனக்கு பென் குழந்தை பிறந்து முன்று மாதங்கள் ஆகிறது,
எந்த ஊரில் வசிக்கிறீர்கள்.
எனக்கு தெரிந்த வரை கபி டி ஹிமொகுலொபினை குரைக்கும்.
மத்ர் ஹொர்லிக்ஸ் குடிப்பது நல்லது.
நான் எப்பொழுதும் குறை ஒன்றும் இல்லை பாட்டு கேட்பேன்.
மிக இதமாக இதமாக இருக்கும்.
நான் அருசுவை பல மாதங்களாக பார்வை இடுகிறேன்,
இப்பொழுது தான் நான் உன்களுக்காக என் முதல் பதிவை போடுகிறென்,ஏன் என்றால் எனக்கும் முதல் இரண்டு குழந்தை அபாஷன் ஆகி விட்டது.
கவலை படாமல் குழந்தை பற்றி கனவு கான தொடங்குங்கள்

உங்கள் அக்கறையான பதிவுக்கு நன்றி கீதா குழந்தை எப்படி இருகிறாள்.என் உளமார்ந்த வாழ்த்துக்கள். நான் மதுரையில் இருக்கிறேன்.நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்கள்.எனக்கும் "குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா" பாட்டு பிடிக்கும்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

பாப்பா நன்ராக உள்ளாள்.......
நான் கோவையில் உள்ளேன்....பாப்பா விளையாட்டு கொண்டு உள்ளாள்...
நாளை சந்திப்பொம் டியர்

நீங்கள் பேரீத்தபழம் சிரபை வாங்கி பாலில் கலந்து குடியுங்கள். ஜுஸில் சேர்த்தும் குடிக்கலாம்

எனக்கு இப்பொழுது இரவு நேரங்களில் நெஞ்சு கரிக்கிறது. நான் இத்தனைக்கும் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதில்லை. பசி சுத்தமாக இல்லை.எதுவும் சாப்பிட பிடிப்பதில்லை. இத்தனைக்கும் அம்மா நன்றாக சமைப்பார்கள்.இதனால் குழந்தைக்கு எதுவும் பாதிப்புள்ளதா? நான் இன்னும் rest தான் எடுக்கிறேன்(என்னை வேலை செய்யக்கூடாது என்று dr சொல்லிவிட்டார்). வீட்டினுள் மட்டும் நடப்பேன். எனக்கு ஏன் இப்படி உள்ளது. இது normal தானா? please help பண்ணுங்கள்.இப்பொழுது வயிற்றில் கோழி குஞ்சு போல் ஆடுவதால் தூக்கமும் இல்லை.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேல சொன்ன ப்ரச்சனை பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்..நமக்கு சாதாரணமா இருக்கும் ரத்தத்தின் அளவு கர்ப்பகாலத்தில் கூடுமாம் அதனால் தான் இப்படி இரவில் நெஞ்சு கரிக்கும்னு எங்கயோ படிச்சா மாதிரி இருக்கு.
தலையணையை உயரமா வச்சுட்டு இரவில் கரமாக சாப்பிடுவதை தவிர்த்து பால் குடிச்சு படுங்க கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும்...சுத்தமா சாப்பிட பிடிக்காட்டி எதுவாவது நியூட்ரீ மிக்ஸ் அப்படி இப்படின்னு சத்து கிடைக்கிர எதுவாவது குடிங்க...ஒன்னும் பயப்படதீங்க என் நெஇபர் பொன்னு சுத்தம் 1 இட்லிக்கு 2 மணிநேரம் ஆக்குவா அவ 9 மாசத்துல 5 மாசம் போல இருப்பா எல்லோரும் பயந்தோம் பல முறை ட்ரிப்ஸ் போட வேண்டிவந்தது அவ்ளோ சத்தில்லை..பாத்தா குழந்தை பிறந்தது 4 கிலோ...ஆஹ்ன்னு வாய் பிளந்தோம்..அதனால டோன்ட் வரி

தளிகா thanks-pa. நான் 2 நாளா ரொம்ப பயந்துட்டேன்.யாராவது பதில் சொல்ல மாட்டங்களானு லேப் டாப் முன்னாடி தவம் இருக்கிறேன்.again thanks.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

டியர் உமா ராஜ் இது எல்லோருக்கும் (எல்லா கர்பிணி பெண்களுக்கும்) உள்ள பிரச்சனை தான்.

இரவில் 7 லிருந்து 8 க்குள் சாப்பாடை முடித்து விடுங்கள்,
பிரை அயிட்டம் இரவில் சப்பிட வேண்டாம் சாப்பிட்டது படுக்காதீர்கள்.

தலி சொன்னமாதிரி தலையணை உயரமாவைத்து படுங்கள்,நெஞ்சி கரிக்கும் போது லேன் மிதமான சூட்டில் வெண்ணீர் அருன்ந்துங்கள்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்