என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும்

அனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்

உமா

எனக்கு இன்னொரு doubt. இப்பொழுது தான் அம்மா பார்த்தார்கள். கால் சிறிது வீங்கி உள்ளது. பார்லி கஞ்சி குடிக்காலாமா? எந்த நேரத்தில் அதனை குடிக்க வேண்டும். அப்புறம் நேற்று என் brother-in-law சவுதியில் இருந்து வந்துள்ளார். பேரிட்சை பச்சையாக வாங்கி வந்து சாப்பிட கொடுத்தார்(நான் இதுநாள் வரை பார்த்ததில்லை. நுரையுடன் இருக்கிறது). அதனை நான் சாப்பிடலாமா? தெரிந்தால் சொல்லுங்கள்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உமா பேர்சனலி சொல்லனும்னா இப்போ பேரீச்சம்பழத்தை சாப்பிடாதிங்க இன்னும் அதிகமா நெஞ்சு கரிக்கும்..எனக்கு அப்படி தோனுச்சு.ஆச்டைக்கு எப்போவாவது ஒன்னு சாபிடலாம்.ப்ல்ட்ப்ரெஷர் எல்லாம் சரியா இருக்குல்ல?கால் வீக்கத்துக்கும் காலை ஸ்டூலில் வச்சு உக்காருங்க.பர்லி கஞ்சி கன்டிப்பா டாக்டர்ட கேட்டு குடிங்க..அது அளவுக்கு மிஞ்ச கூடாது.சும்மா 1/2 கப் ஒரு நாளைக்கு குடிங்க.முள்ளு கீரை சாப்பிட்டா கூட நீர் குறையும் ஆனால் எல்லாம் அளவா சாப்பிடனும்

உமா கால் வீங்கி இருந்தால் சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்கவும்.

பேரிட்டை நுரைத்து இருந்தால் கெட்டு போச்சான்னு பாருங்கள் .
பேரிட்சைசட்னி நல்ல இருக்கும். அது செய்து சாப்பிடுங்கள்
பேரிட்சை, புளி , கிஸ்மிஸ் பழம், வெல்லம், உப்பு, சீரகம், மிளகாய் தூள் சேர்த்து அரைத்து சாப்பிடலாம்.

கால் வீக்கத்திக்கு பார்லிய வேக வைஹ்து அந்த தண்ணீர் குடிங்க.

காலை கீழே தொங்க போட வேண்டாம். சோபாவில் உட்கார்ந்தால் கூட கீழே குட்டி சேர் வைத்து அதில் காலை வைத்து கொள்ளுங்கள்.
ஜலீலா
ஜலீலா

Jaleelakamal

தளிகா போன மாதம் வரை BP இல்லை. இந்த மாதம் போகும் போது கவனிக்கின்றேன் நன்றி.அப்புறம் முள்ளு கீரை எனில் முள்ளு முருங்கையா? jaleela mam நான் பெரிய நெல்லிக்காய் உப்பு வைத்து சாப்பிட்டேன். அது தான் போல. நிறைய நெல்லிக்காய் உள்ளது. அதில் துவையல் எப்படி செய்வது?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

old is gold

old is gold

ஹாய் தோழியரஎ
வணக்கம்.
என்னோட பெயர் லக்ஷ்மி . எனக்கு திருமணம் ஆகி 2 மாதம் தான் ஆகிறது. நானும் உங்களுடன் என்னோட கருத்துகளை பரிமாற ஆசை படுகிற்ன்.

old is gold

old is gold

ஹாய் லஷ்மி வாங்க வந்து பரிமாறுங்க.

வாங்க லக்ஷ்மி வாங்க.

ஹாய் கவி அக்கா
ரொம்ப நன்றி.

old is gold

old is gold

ஹாய் லஷ்மி வாங்க வாங்க

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்