என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும்

அனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்

உமா

எனக்கு 25வது வாரம்பா. தூக்கம் வரலை. அதான் என் ஹஸ்-ஐ அறுக்கலாம்னு பார்த்தா மனுஷன் ஆபிஸை கட்டிட்டு இன்னும் அழறார்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் மர்ர்லி ,உமா ,எப்படி இருக்கீங்க ? உங்க 2 பேருக்கும் கடவுளின் அருளால் நல்ல படியாக குழ்ந்தை பிறக்கும்.நான் உங்களுக்காக கடவுளை வேண்டுகிறேன்.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

எனக்கும் இதே கதிதான் இவர் ஜம்முன்னு தூங்கிடுவார் நா பாட்டுக்கு பே ந்னு முழிச்சுட்டு இருப்பேன் எழுப்பலாம்னு தோனும் ஆனாலும் டயர்டா இருப்பாரே பாவம்ன்னு விட்டுடுவேன் நாள் போக போக இன்னும் அவஸ்ததான்..குழந்தையின் அசைவை ரசித்துட்டு இருப்பேன்..

ஜெயா ரொம்ப தேங்ஸ்ப்பா!சமையல் எல்லம் ஆச்சா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மார்லி ,சமையல் இப்போதுதான் செய்து முடித்தேன் ப .

ஹாய் தேவா எப்படி இருக்கிறீர்கள். உங்களிடம் பேசி எவ்வளவு நாளாயிற்று. தேவா எனக்கு ஒரு சந்தேகம் சிலர் கர்ப்பகாலத்தில் இடதுபுறம் ஒருக்களித்துப் படுப்பது நல்லது என்கிறார்களே அது ஏன்?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் உமா, எப்படி இருக்கீங்க? நம்ம ஊரில் கர்ப்ப காலத்தில்னு இல்லை, பொதுவாகவே பெண்கள் இடது புறமாக படுத்தால் நல்லதுன்னு சொல்வாங்க. அதுக்கு காரணம் இடது புறமா படுத்தா ஜீரண சக்தி அதிகமாகும். செரிமான கோளாறுகள் இல்லாம உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னு ஒரு நம்பிக்கை.

தேவா மேடம் ரமணிச்சந்திரன் நாவல் கேட்டு உங்களுக்கு ஒரு பதிவு போட்டு இருந்தேன் ( St pauls school thread la). பார்த்தீங்களா.

இப்படிக்கு
இந்திரா

indira

நன்றி தேவா.நீங்கள் பட்டிமன்றத்தில் நடுவராக கலக்குவதை பார்த்தேன். எனக்கு கூட அதில் கலந்து கொள்ள ஆசைதான். ஆனால் சிறிது நேரம் கூட என்னால் உட்கார்ந்து டைப் செய்யமுடியாதது தான் காரணம். இப்பொழுது கூட சிறிது நேரம் படுப்பேன் பிறகு வந்து உட்காருவேன்.dr என்னை நன்றாக rest எடுக்க சொல்கிறார். கட்டாயம் குழந்தை பிறந்ததும் நானும் மற்ற தோழிகளுடன் கலந்துகொள்வேன்.நான் கல்லூரியிலும், பள்ளியிலும் தமிழ் மற்றும் கணிதத்தில் முதல் மாணவியாக வருவேன் (மற்றவை படிக்கவே பிடிக்காமல் வேறு வழியின்றி படிப்பேன்).தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில் அறுசுவை போன்ற இணையத்தளம் பெரிய ஆறுதலான விஷயம் தான் (இதற்கு அட்மினுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

Lying on your left side will increase the blood flow to the baby. Sorry for english. Hi marli,ila,jeyanthi mami how are you all. do u remember me?
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

என்னப்பா ஆளையே கானோம்..எப்படி இருக்கீங்க?டாக்டர்ட்ட செக்கப் போறீங்களா?உங்களுக்கும் 6 மாசம்தானே இருக்கும்..உங்களை மறக்க முடியுமா..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்