என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும்

அனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்

உமா

thank you pa.ok Jeeva take care.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

நலமா தோழி??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டியர் வனிதா, நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் நலமா? உங்களின் சூப் குடித்தேன்பா. மிகவும் நன்றாக இருந்தது.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் தோழிகளே , எனக்கு ஒரு சந்தேகம். கமலாப்பழம் குளிர்ச்சி தன்மை உடையதா இல்லை சூடா? கமலாப்பழமும் சாதுக்கொடியும் ஒரே மாதிரியான சத்து உடையதா? அதாவது, கமலாபழதிலும் போலிக் ஆசிட் உள்ளதா? தெரிந்தவர்கள் தெளிவு படுத்தவும்.

உமா தாயாக போகும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்ல சந்தோஷமா இருங்க எந்த கவலையும் வேண்டாம் நிம்மதியா ரிலாக்ஸா வரப்போகும் உங்க செல்ல பிள்ளையை நினைத்து சந்தோஷமா இருங்க நிறைய க்னிகள் காய்கள் தண்ணீர் நிறைய் குடிங்க சாப்பிடுங்க லேசா வாக்கிங் பண்ணுங்க தினமும் இரவி பால் குடிங்க அதிகம் டீ சாப்பிடாதீங்க தினமும் மறக்காம்ல் ஆண்டவனை பிராத்தனை பன்ணுங்க கீரை வகைகள் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள் சூடான ஆகாரம் எதும் சாப்பிடாதீங்க என்ன பிள்ளை இப்வே முண்ட ஆரம்பிச்சிட்டாங்களா உணர முடியுதா உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் குட்டி பாப்பா ம்டியில வந்துடுவாங்க உமா அப்புறம் என்ன் நீங்க ரொம்ப பிஸிதான் போங்க சந்தோஷமா இருங்க உமா நானும் வெண்டிகொள்கிறேன்

ஹலோ
உமா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.நான் இப்போது 32 வாரம்.அனால் என்னக்கு இது ரெண்டாவது.நல்ல சத்துள்ள சாப்பாடு சாப்பிடுங்க.அம்மா கூட தானே இருக்கீங்க,அப்புறம் என்ன சூப்பரா கவனிபங்க.எங்க அம்மா இன்னும் ரெண்டு வாரத்துல வந்துடுவாங்க.அது வரைக்கும் கொஞ்சம் கஷ்டம் தான்.அப்புறம் நெறைய உடற்பயற்சி
செய்யுங்க.என்னகு இது caesarian .அதனால் இப்பயே ரெஸ்ட் எடுதுகறேன்.
வேற எதாவது சந்தேகம் இருந்த கேளுங்க.

Anbe Sivam

Anbe Sivam

யாருக்கு பதிவு போட்டிருக்கிங்க??? உமாராஜுக்கா??? அவங்க தான் பையனை பெற்று அர்ஜூன்'னு பேரும் வெச்சு ரொம்ப நாளாச்சே...!!!! எனக்கு ஒன்னும் புரியல.... தப்பா புரிஞ்சிகிட்டனா, இல்ல உமா'கு 2 வது குழந்தையா, இல்ல நீங்க தப்பா போட்டுட்டீங்களா????

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹி ஹி ஹி
குழந்தையே பொறந்துடுச்சா.சரி நம்ள மாதிரி யாரோ இருகங்கலேன்னு ஒரு enthula போட்டேன்.ஹி ஹி ஹி
சரி விடுங்க.பொது சேவைல இதெல்லாம் சகஜம்.

என்ன மாதிரியே பார்வினும் பதில் போடு இருகாங்க போல?
சரி உமாவுக்கு என்னோட வாழ்த்துக்கள்.
Anbe Sivam

Anbe Sivam

drink lots of water as hydration is very important. eat frequently. avoid coffe and other caffine products...

please check the date of the post as it says 2008. I think uma raj has baby already.

It was fun to read it.

மேலும் சில பதிவுகள்