கர்ப்பமாக இருக்கும்போது மலச்சிக்கல் தீர என்ன வழி?

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.

நான் கர்ப்பமாக உள்ளேன்.மலச்சிக்கலால் மிக மிக கஷ்டப்படுகிறேன்.தீர என்ன வழி.கர்ப்பத்திற்கு முன்பும்,கர்ப்பமான இத்தனை காலங்களிலும் சுகர் இல்லை,இந்த மாத செக்கப்பில்,லைட்டாக சுகர் இருக்கிறது என்று கூறி,டயட் கண்ட்ரோலில் இருக்க மருத்துவர் சொல்லி விட்டார்.அதனால்,சாப்பிட்டுக் கொண்டிருந்த வாழைப்பழத்தையும் நிறுத்தி விட்டேன்.மலச்சிக்கலால் மிகவும் கஷ்டப்படுகிறேன்.உங்களிடம் கேட்டால் உடனடி தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இதை பதிவு செய்கிறேன்.பதில் தந்து உதவுவீர்களா தோழிகளே.

கர்ப்பமான காலத்திலிருந்து சரியான தூக்கமில்லாமலும் தவிக்கிறேன்.அதனால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா,இந்தப் பிரச்சனை தீர என்ன செய்ய.
எத்தனை மாதத்திலிருந்து கண்டிப்பாக ஒருக்களித்து படுக்க வேண்டும்.

தோழிகளுக்கு நன்றி.

விரைவில் தாயாகப்போகும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிலருக்கு கர்ப்பகாலத்தில் சுகர் வரும். பிரசவம் ஆனதும் சரியாகிவிடும்.
மலச்சிக்கலுக்கு தினமும் கீரை சாப்பிடுங்கள். தண்ணீரைக்காய்ச்சும்போது எப்போதும் சிறிது சீரகம் சேர்த்து காய்ச்சிக்குடியுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்.
நீர் மோர் குடியுங்கள்.
அரை டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கப்போகும் முன் நீரில் ஊறவைத்து காலையில் பல் தேய்த்ததும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளுங்கள்.
கொய்யாப்பழம் சாப்பிடுங்கள்.

சாதத்தின் அளவைக்குறைத்து காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுங்கள்.
காய்கறிகள், பயத்தம்பருப்பு, சேர்த்து கூட்டு செய்து நிறைய பச்சைக்கொத்தமல்லியைத்தூவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இரவில் நேரம் கழித்து உணவு எடுத்துக்கொள்ளாதீர்கள்.

எப்பொழுதுமே (குழந்தை உண்டாகாமல் இருக்கும்போது கூட) ஒருக்களித்துப்படுப்பதுதான் நல்லது. குழந்தை உண்டாகியிருக்கும்போது பாதி தூக்கத்தில் அப்படியே திரும்பிப்படுக்காமல் எழுந்து உட்கார்ந்துகொண்டு திரும்பிப் படுக்கவேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிக்கொள்ளும்.
உங்களுக்கு பயத்தினால்தான் தூக்கம் வருவதில்லை என்று நினைக்கிறேன்.
தைரியமாக, சந்தோஷமாக இருங்கள்.
நன்கு பிரார்த்தனை செய்யுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் ராதிகா வாழ்த்துக்கள்..கடைசியில் சொன்னீங்களே வாழைப்பழம் அது உண்மையில் மலச்சிக்கலை உண்டாக்கும்.அதுவும் ஆப்பிலும் மலச்சிக்கலுக்கு தோழிகள்.
இது பெரும்பாலானவர்களுக்கு உள்ள ப்ரச்சனை தான் சிலருக்கு டெலிவெரி முடிந்த பின் அதிகரிக்கும்.ஆனால் ஃபைபெர் கான்டென்ட்ஸ் அதிகமா உள்ள உணவுகளா தேடிப் பிடிச்சு சாப்பிடுங்க சரியாகும்.ஃபைபெர் ரிச் ஃபுட் நு கூகில் பன்னி அதை அதிகமா உணவில் சேத்துக்குங்க.
உலர்ந்த பழ வகைகளை சாப்பிடலாம்..ஆப்ரிகாட் ப்ரூன்ஸ் சாப்பிடலாம்...உலர்திராட்ச்சையை ஊற்வைத்து பிழிந்து அந்த தண்ணீரை குடிக்கலாம்.இப்படி இன்னும் ஏறாளமான குறிப்புகள் உண்டு இப்ப எனக்கு நியாபகம் வர மாடேஙுது.
ஆனால் இதை விட உங்களுக்கு திருப்திகரமா இருக்கனும்னா ஒரு டயடீஷியனை சந்தித்து கேளுங்க அவங்க பதிலிலேயே தைரியம் வரும் ப்ரச்சனை சரியாகும்.தூக்கப் ப்ரச்சனை இல்லாத கர்பினிகளே எனக்கு தெரிந்து இல்லை...நான் நினைக்கிறேன் பிள்ளை வந்தபின் தூங்க கஷ்டம் தானே சரியான சமையத்துக்கு அதனால் கடவுள் இப்பவே தரும் ட்ரெயினிங்கா இருக்கும்.
இதனால் பிள்ளைக்கு எந்த பாதிப்பும் வராது கவலையை விடுங்க ஆனா எனக்கெல்லம் நைட் தான் தூக்கம் வராது பகலில் நல்லா தூக்கம் வரும் சரி அப்படியாவது தூங்கட்டுமேன்னில்லாம பகல்ல தூங்குரதால் தான் நைட் தூக்கம் வர்லன்னு சொல்லுரவங்களை கடிச்சு கொதரலாம் போல வரும்..சரி சரி மேட்டருக்கு வறேன்.
ஒருக்களித்து படுக்க துவக்கத்திலேயே பழகிக் கொண்டால் நல்லது..இல்லாட்டி பின்னாடி தூக்கம் வராம கஷ்டப்படனும்..ஒரு 3 மாதத்திலிருந்து கூட அப்படி படுத்தா போதும் ஆனா முன்னயே பழகிடுங்க நல்லது.சரியா ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க இதெல்லாம் ரொம்ப சகஜம் தான்..

அறுசுவையில் நிறைய இடங்களில் உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும்.
அத்துடன் www.arusuvai.com/tamil/forum/no/9469
பாருங்கள்
அன்புடன்
ஜெயந்தி மாமி

எனக்கும் இதே பிரச்சனை இருந்தது... பிரெக்னென்ஸி தொடர்பான புத்தகங்களை படிக்க ஆரம்பித்து உள்ளேன்(பிரெக்னென்டுன்னு சொல்லிட்டா போதும் ஏக பட்ட அட்வைஸ் வருமே:( ,அதுல எது சரின்னு நாமளே தெரிஞ்சுக்கதான்).அரை மணிக்கு ஒருமுறை ஒரு டம்ளராவது(atleast 250 ml) தண்ணீர் குடியுங்கள்.டிஹைட்ரேட் ஆகக் கூடாது.உணவை பிரித்து உண்ணுங்கள்.அதாவது நார்மலாக சாப்பிடும் அளவை இரண்டாக பிரித்து,சிறிது கால இடைவெளியில் சாப்பிடுங்கள். கடையில் ஜூஸ் வாங்காமல் வீட்டிலேயே செய்யுங்கள்.அதுவும் நான் சக்கரை,க்ரீம் சேர்பதில்லை(முதலில் சாப்பிட கஷ்டமா இருக்கும் 2,3 முறைக்கு பிறகு சக்கரை சேர்த்து சாப்பிட பிடிக்காது :))இதனால் சக்கரையின் அளவை சிறிதளவு குறைக்கலாம்.எனக்கு செவ்வாய் கிரகம் போனாலும் சாதம் சாப்பிடனும்.ஆனாலும் இப்போ தினமும் ஒரு வேளை (மட்டும்:)) சப்பாத்தி சாப்பிடுகிறேன். இப்போதிருந்தே சக்கரையை கட்டுபடுத்த முயற்சி.அதனால் ஒரு வேளையாவது சப்பாத்தி சாப்பிடுங்க.எனக்கும் ரொம்ப உதவியது வாழப்பழம் தான்.(இது மலச்சிக்கலை ஏற்படுத்துமா!? முதல் தடவை கேள்வி படுகிறேன்).ஆனால் இதில் சக்கரையின் அளவு அதிகம்தான்.ரொம்ப கஷடப்பட்டால் ஒன்னே ஒன்னு சாப்பிடுங்க.ஒரே நாளில் சரியாகி விடும்.அடுத்த நாளிலிருந்து பாலன்ஸ்டு டயட் சாப்பிட்டு சக்கரையை குறைத்து விடலாம்:)இதை தான் நானும் செய்கிறேன். ஏற்கனவே செய்யாதிருந்தால் லைப்ரரியில் ப்ரெக்னன்ஸி தொடர்பான புத்தகங்கள் எடுத்து படியுங்கள்.நம்பிக்கை வரும்.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

ஹலோ ராதிகா,

உங்களுக்கும் வரப்போகும் புது வரவுக்கும் வாழ்த்துக்கள்.

மலச்சிக்கலுக்கு பியர்ஸ், பிலம்ஸ் பழங்கள் எடுத்துக்கலாம் இதில் பைபர் அதிகமாக இருக்கிறது. எனக்கு என் மருத்துவர் சொன்னது. ஆனால் சர்க்கரை அளவு எவ்வளவு என்று தெரியாது. அதனால் மருத்துவரிடம் கேட்டு சாப்பிடவும். நார்ச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

வாழை பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாதாஉ.
தேங்காய் நல்ல கொர கொரப்பா ரைத்து அதில் சிறிது பால் ,சர்க்கரை கலந்து வாழைபழத்தை நல்ல பிசைந்து சாப்பிடுங்கள் மோஷன் பிராப்ளம் ஏற்படாது.பிரீயாக இருக்கும்.
தண்ணீரும் நிறைய குடிங்க.
ஜலீலா

Jaleelakamal

ராதிகா!! வாழ்த்துக்கள்... ரோஜா குல்கந் எனக்கு ரொம்ப நல்லா இருந்தது. என்ன இனிப்பு ஆனால் பரவாயில்லை... சாப்பிட்டால் நல்ல குணம் தெரிஞ்சது. யூ எஸ் ல என்றால்.. ப்ரூன் ஜுஸ்/ப்ளம் ஜூஸ் வாங்கி வைத்துக்கோங்க... டிரை புருன்ஸ் கூட நல்லா கேக்கும்.. தண்ணி அதிகமா குடிச்சாலும் ரொம்ப நல்லா இருக்கும்.. இல்லன்னா இஸப்கால் ( ஃபைசிலியம் ஹஸ்க்)/மெட்டாமியூசில்/சிட்ரூசில்) தண்ணியில்/ஜூசில் கலந்து குடிங்க... அதிக்க்கபுறம் ஒரு புல்ல் கிளாஸ் தண்ணி குடிக்கணும் இல்லைன்ன இன்னும் கஷ்டமாகிடும். இந்தியாவிலன்னா தினமும் கொய்யா சாப்பிடுங்க மலசிக்கலா என்ன என்று கேப்பீங்க.. அப்புறம் சிலருக்கு அவங்க சாப்பிடும் பிரீ நேடல் வைட்டமின் மலசிக்கல் உண்டாக்கும்.. இதுவரை நான் சாப்பிட்ட பிரீனேட்டல் வைட்ஸ் எல்லாமே மலசிக்கல் உண்டாக்கி இருக்கு. உங்க டாக்டரிடம் சேம்பிள் வாங்கி சாப்பிட்டு பாருங்க.. இங்க பிரீமா கேர் (Prima Care)என்று ஒரு ப்ரீனேட்டல் இருக்கு அதில மைல்டா லாக்சேடிவ் கலந்து இருக்கு ..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் ராதிகா எப்படி இருக்கீங்க? நீங்க US ல இருந்தால் ஆப்பிள் சாப்பிடுங்க இந்தியாவில் இருந்தால் நாட்டு வாழைப்பழம் சாப்பிடுங்க கண்டிப்பா பிரச்சனை இருக்காது கொய்யாபழம் நல்லது தான் ஆனால் சுகர்க்கு நல்லது அல்ல இந்த டைம் அயர்ன் மாத்திரை சாப்பிடுவதால் கான்ஸ்டிபேசன் பிரப்ளம் இருக்கும் ரெம்ப கஷ்டமாக இருந்தால் டாக்டரே மாத்திரை தருவார் இங்கு ல் சில பிராண்ட் இருக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும் ட்ரை பண்ணுங்க

வாழ்த்துக்கள்.கர்ப்பகாலத்தில் இந்த ப்ராப்ளம் சாதரணமானதே எனவே கவலைப்படாமல் இருக்கவும்.பிஞ்சு வெள்ளரிக்காய் கிடைக்கும் என்றால் வாங்கி சாப்பிடவும்,நிறைய தண்ணீர் குடிக்கவும்,சாப்பாட்டை பிரித்து ஒரு வேளை உணவை இரு வேளைக்கு சாப்பிடவும்,நார்ச்சத்துள்ள உணவு அதிகம் எடுத்துக்கொள்ளவும்.முக்கியமாக மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவும் ஏனென்றால் இதற்க்கும் மலச்சிக்கலுக்கும் அதிகம் தொடர்புள்ளது.இப்பவே இரவில் ஒருக்களித்துப்படுக்க பழகிக்கொண்டால் பின்னாளிலும் ஈஸியாக இருக்கும்.

நன்றி ஜெயந்தி மாமி,உங்கள் வாழ்த்துக்கும்,பதிவிற்கும். நீங்கள் கூறியுள்ளபடி உடனே செய்து பார்க்கிறேன்.
//தண்ணீரைக்காய்ச்சும்போது எப்போதும் சிறிது சீரகம் சேர்த்து காய்ச்சிக்குடியுங்கள்.//
சீரகம் போட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டுமா இல்லை சீரகத்துடன் குடிக்க வேண்டுமா.8 டம்ளர் நீருக்கு எத்தனை தேக்கரண்டி சீரகம் போட்டு காய்ச்ச வேண்டும்.

பதில் தாருங்கள் மாமி.நன்றி.

மேலும் சில பதிவுகள்