ஷாஃப்ட் சப்பாத்தி

தேதி: October 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

கோதுமை மாவு - 2 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
டால்டா அல்லது நெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கு


 

இரண்டு கப் மாவு பிசைய தேவையான அளவை விட சற்றுக்குறைவாக நீரை எடுத்துக்கொள்ளவும்.
நீரில் உப்பு, டால்டா அல்லது நெய் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
நீர் நன்கு சூடு ஏறியதும்(கொதிக்கக்கூடாது) அடுப்பை அணைத்து விட்டு மாவைசேர்த்து கம்பால் கிளறவும். உடனே ஒரு மூடியால் மூடி விடவும்.
நன்கு ஆறியதும் தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
இந்த முறையில் மாவு பிசைந்து வழக்கமாக சப்பாத்தி போடுவது போல் செய்தால் மிகவும் ஷாஃப்ட் ஆக வரும்.
சப்பாத்தியை சாப்பிடுபவர்கள் அறுசுவை.காமை மட்டுமல்ல என்னையும் மறக்க மாட்டீர்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

sister,

jasakallah hair.

nice recipe and chappathi was very softand truly we wont 4get u.

Alhamthulillah

சப்பாத்தி ரொம்ப ப்ரமாதமா வந்துச்சு. லேசா வெதுவெதுப்பான நீர் மட்டும் தான் இது வரை உபயோகித்திருக்கிறேன்(பயனில்லை)

ஆனா நீங்க சொன்ன முறையில் செய்தேன். ரொம்ப நல்லா ஷாப்ட்டா வந்துச்சு.ஈசி சன்னா மசாலா கூட சேத்ததில் ருசியோ ருசி.

கண்டிப்பா உங்கள மறக்கவே மாட்டேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அட...அப்படியா !!!!செய்து பார்க்கிறேன்.நோன்பெல்லாம் முடிந்து இப்போ தான் உடற்பயிர்ச்சி,டயட்ன்னு கொஞ்ஜம் ஸ்டாட் செய்திருக்கேன்.இந்த சப்பாத்தி கிளரிவிட்டு உடனே சுடனுமா?இல்லை ஒரு மணிநேரம் கழித்து நிதானம சுட்டால் நீர்த்துவிடுமா மாவு?கொஞ்ஜம் விளக்கவும்.

பர்வீன்.

பர்வீன்.சப்பாத்தி மாவு கிளரி விட்டு ஆற விட்டு பிசைந்து வேண்டிய போது சப்பாத்தி தயார் செய்யலாம்.நீர்க்காது.நிதானமாக சுடுங்கள்.என்னையும் மறக்காதீர்கள்.சரியா.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்பு தோழி,
நானும் இப்படித்தான் சப்பாத்தி செய்வேன். இந்த முறைதான் எண்ணெயும் அதிகம் இல்லாமல், சப்பாத்தியும் சாஃப்டாக வருகிறது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹா ஹா சேம் பின்ச் நானும் ஹி ஹி

ஜலீலா

Jaleelakamal

சமையல் கில்லாடிகள் செந்தமிழ்செல்வி,ஜலீலா இருவருமே இதே முறை தான் பின்பற்றுவீர்களா?பலே.
நான் சமீபமாகத்தான் இந்த முறையில் சப்பாத்தி பண்ண ஆரம்பித்தேன்.பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்னேகிதிகளே.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாஃப்ட் சப்பாத்தி செய்து பார்த்தீர்களா?மிக்க மகிழ்ச்சி.உங்களுக்கெல்லாம் பிடித்து இருக்கின்றது என்பதே மனதிற்கு நிறைவைத்தருகின்றது.பின்னூட்டத்திற்கு நன்றி.
பர்வீன் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் சாதிகா அக்கா
நேற்று சப்பாதி செய்தேன்.ரொம்ப சாஃப்டா இருந்திச்சு.அரை மணி நேரம் கழித்தி நிதானமா செய்தேன்.நீர்த்து போகவில்லை.ஆறியும் மிருதுவாகவே இருந்தது.மிகவும் நன்றி அக்கா.

பர்வீன்.

பர்வீன்.பின்னூடத்திற்கு நன்றி.சப்பாத்தி என்பது நாம் அடிக்கடி செய்வது.உடனே செய்து பின்னூட்டமும் அனுப்பியது மனதிற்கு நிறைவைத் தருகின்றது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பின்னூட்டத்திற்கு நன்றி.சப்பாத்தி ஷாஃப்ட்டாக வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா இனி உங்களையும், இந்த சாஃப்ட் சப்பாத்தியும் மறக்கமாட்டேன். மிகவும் நன்றி அக்கா.

லதா

இப்படிக்கு
லதா

அடிக்கடி உங்க சப்பாத்தி தான் செய்வேன்.நல்ல சாஃப்ட் .
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா ரொம்ப சந்தோஷமாக உள்ளது.பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாஃப்ட் சப்பாத்தி செய்து பார்த்தேன். நான் ஏதோ சொதப்பி விட்டேன்.தண்ணீரை கொதி நிலைக்கு சற்றுமுன் மாவை கலந்து விட்டேன். தண்ணீரின் அளவும் கூடுதலாகி விட்டது. சப்பாத்தியை திரட்டும் போது ஓரம் ஸ்மூதாக வரவில்லை. (அடை போல்).
மாவு வெந்து விட்டதா? அல்லது தண்ணீர் அதிகமானதால் அப்படியா?
2 கப் மாவிற்கு எவ்வளவு தண்ணீர் கொதிக்க வைக்க வேண்டும்.
ஆனாலும் சப்பாத்தி ஸாஃட்டாக வந்தது.

தண்ணீர் நன்கு கொதி நிலைக்கு வராவிட்டால் இப்படி ஆகாது.தண்ணீர் அதிகள்வு சேர்த்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.2கப் மாவுக்கு அரைகப் நீர் கொதிக்க வைத்துப்பாருங்கள்.தேவைப்பட்டால் சிறிது பச்சைத்தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.நன்றி
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் ஷாதிகா ஆன்டி எப்படி இருக்கீங்க? உங்க சாஃப்ட் சப்பாத்தி செய்தேன் ரெம்ப நல்லா இருந்தது thanks aandi நான் நிறைய மாவுகளை மிக்ஸ் பண்ணி chappadi செய்வேன் அதுக்கே இது நல்லா சாஃப்ட்டாக இருந்தது என் பொண்ணு அம்மா உன் சப்பாத்தி சூப்பர்ன்னு சாப்பிட்டா :)ஆறினதுகப்புறம் நல்லா இருந்தது தேங்ஸ் ஆன்டி உங்க சப்பாத்தி அதற்க்கு சைட் டிஷ் பொட்டேடோ யோகர்ட் குருமா ரெண்டும் நல்ல காமினேஷன் தேங்யூ ஸோ மச் ஆன்டி உங்களை மறக்காமல் சாப்பிட்டதும் பதில் அனுப்புகிறேன்

சதாலட்சுமி
ஸாதிகா அக்கா நான் உங்கள் சப்பாத்தியை செய்தேன். என் வீட்டில் அனைவரும் விருப்பமாக சாப்பிட்டார்கள். நன்றி அக்கா.

சதாலட்சுமி

ஷாதிகா அக்கா உடன் பதிலுக்கு நன்றி.மறக்காமல் செய்கிறேன்.அதர்குள் மற்ற தோழிகலிடத்திலும் ரிசல்ட் சொல்லிவிட்டார்கள்.நானும் செய்து பார்க்கிறேன்.
பர்வீன்.

ஸாதிகா,இன்று நானும் உங்க சப்பாத்தி செய்தேன்,என் பிள்ளைகள் ரசித்து கூட இரண்டு சாப்பிட்டார்கள்.நன்றி

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆஸியா.உங்கள் பிள்ளைகள் இன்னும் 2 சப்பாத்திகள் சேர்த்து சாப்பிட்டார்கள் என்ற உங்கள் பதிவு எனக்கு நிறைவைத்தருகின்றது.நன்றிப்பா.
ஸாதிகா

arusuvai is a wonderful website

செல்வி. இந்திரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த சப்பாத்தியின் படம்

<img src="files/pictures/softchappa.jpg" alt="picture" />

அன்பு இந்திரா,
ஷாஃப்ட் சப்பாத்தி செய்து அழ்காக படம் எடுத்து அனுப்பி இருக்கின்றீகள்.மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஷாதிகா ஆன்டி .. எப்படி இருக்கீங்க ? உங்க முறையில் சாப்ட் சப்பாத்தி செய்தேன் ரொம்ப மிருதுவா இருந்தது. நல்லா உப்பியும் வந்தது தீயில் வாட்டினால் வருவது போல. உங்க குறிப்புக்கு நன்றி!
"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பின் இலா,
நீங்கள் எப்படி இருகின்றீர்கள்.இந்தியாவுக்கு எப்ப விசிட்.இலா,சப்பாத்தி நன்றாக வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் ஷாதிகா ஆன்டி உங்க பதிவை பார்த்ததும் தான் நியாபகம் வந்தது. சுட்டு அப்படியே ஒரு 3 மணி நேரம் ஆச்சு இப்ப தான் எடுத்து உள்ள வச்சிட்டு வர்றேன். ரொம்ப நல்லா இருக்கு. இந்தியா ஏப்ரல்ன்னு நினைக்கிறேன். இன்னும் எப்படி இருக்கும்ன்னு தெரியலை.

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நல்லது இலா.நல்லபடியா ஊருக்கு வாருங்கள்.சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா,
1 கப் மாவுக்கு எவ்வளவு நீர் என்று approximate ஆ சொல்றீங்களா?எனக்கு நீர் அளவு சரியாக பிடிபடவில்லை...

விஜி,ஒரு கப் மாவுக்கு கால் கப் நீரில் பாதி எடுத்துக்கொள்ளுங்கள்.தேவைப்பட்டால் அவப்போது சிறிதி நீர் தெளித்துக்கொள்ளலாம்.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அக்கா சப்பாத்தி ரொம்ப சாஃப்டா இருந்தது.நன்றி
சவுதி செல்வி

சவுதி செல்வி

அன்பு செல்வி,
சப்பாத்தி சாஃப்ட்டாக இருத்தமைக்கு மகிழ்ச்சி.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா மேடம் நேற்று இரவு உங்க ஷாப்ட் சப்பாத்திக்கு,பனீர் பட்டர் மசாலா, முட்டை பொடிமாசும் செய்து சாப்பிட்டோம் சுவை சூப்பர் நன்றி ஸாதிகா மேடம்.

பட்டர் பனீர் மசாலாவுக்கும்,முட்டை பொடிமாசுக்கும் இதையே பின்னூட்டமா எடுத்துகோங்க மேடம் ப்ளீஸ்... தப்பா எடுத்துக்காதீங்க மேடம் நேரமின்மைமையே காரணம்,நேரம் கிடைக்கும்போது அவை இரண்டுக்கும் கண்டிப்பா பின்னூட்டம் கொடுக்கறேன் மேடம்.

உங்கள் ஷாப்ட் சப்பாத்தி செய்தேன் ரொம்பவே ஷாப்டாவே நல்லா இருந்தது நன்றி மேடம் .

அன்புடன்,
ஜாஸ்மின்.

ஸாதிகா அக்கா முன்று நாளா அருசுவை ஓப்பன் ஆகல.

ஷாஃப்ட் சப்பாத்தி செய்தேன் நல்ல வந்தது.

Jaleelakamal

சாஃப்ட் சப்பாத்தி செய்து பார்த்தீர்களா?நன்றாக வந்தமைக்கு மகிழ்ச்சி.பின்னூட்டத்திற்கு நன்றி.நாளைக்கு மகன் இந்தியா புறப்பட ஆயத்தமாகிகோண்டிருப்பாரே?நல்ல படியாக அவர் விரும்பும் வண்ணம் கலேஜ் அமைய பிரார்த்தனை செய்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா என் மகன் நேற்றே கிளம்பியாச்சு

Jaleelakamal