முழு சிக்கனை ஃப்ரீசரில் எவ்வளவு நாட்கள் வைக்கலாம்

முழு சிக்கனை ஃப்ரீசரில் எவ்வளவு நாட்கள் வைக்கலாம்.(ஹலால் மார்கெட்டில் வாங்கியதால் உபயோகிக்கும் நாள் வரையரை கொடுக்கவில்லை) .. வைப்பதற்க்கு முன்பே உள்ளே உள்ள தேவையில்லா பாகங்களை நீக்கி விட வேண்டும் என்று கூகிலில் தேடிய போது தெரிந்தது. நேற்றே ஃப்ரீஸரில் அப்படி நீக்காமலே வைத்து விட்டேன். இப்பொழுது டீஃப்ராஸ்ட் செய்து விட்டு , சுத்தம் செய்து மீண்டும் ஃப்ரீஸரில் வைக்கலாமா..? இதனால் சிக்கனில் இருக்கும் ஈரப்பதம் போய் விடாதா..? ஏற்கனவே ஒரே ஒரு முறை ஃப்ரீஸரில் வைத்த போது சிக்கனில் உலர்வுத் தன்மை இருந்தது.. எனக்கு இதில் பழக்கமில்லாததால் தெரிந்தவர்கள் உதவுங்கள் ப்ளீஸ்..

என்னுடைய சந்தேகத்திற்கு உதவுங்கள் ப்ளீஸ்

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

ஹலொ நான் பாரதி .தாமரை விட்டில் பேசினோம் நியாபகம் இருக்கா. என்னக்கு சிக்கன் பற்றீ தெரியாது. சாரி பா.

நானும் ஹாலல் கடையில் தான் வாங்குவேன். உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வேண்டுமோ, அதை ஒரு zipper bagகில் போட்டு,freeze செய்து விடுங்கள். எப்போது வேண்டுமோ அப்போ வினிகர் சேர்த்து டீஃப்ராஸ்ட செய்து பயன்படுதலாம்

ஹாய் வேல்விழி,
முழு கோழியை தேவையில்லாததை எடுத்துவிட்டு கட்பன்னி அதில் மஞ்சள் தூள், உப்பு தூள் போட்டு பிசைந்து தனி தனியாக கவரில் போட்டு ஃபிரிசரில் வைத்து தேவையான போது யுஸ் செய்துகொல்லலாம்.

ஃப்ரீடா & குயிலா உங்க பதில்களுக்கு ரொம்ப நன்றி..சிக்கனை இப்பொழுது டீஃப்ராஸ்ட் செய்து விட்டு , சுத்தம் செய்து மீண்டும் ஃப்ரீஸரில் வைக்கலாமா..? இதனால் சிக்கனில் இருக்கும் ஈரப்பதம் போய் விடாதா..?

பாரதி உங்களை நல்லா ஞாபகம் இருக்கு. அதுக்குள்ள எப்படி மறக்க முடியும்

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

ஹாய் வேல்விழி,
டீஃப்ராஸ்ட் செய்து மீன்டும் வைக்கலாமா என்று தெரியவில்லை சாரி.உங்கள் பெயரை பார்த்தால் என் தோழி கயல்விழியின் ஞாபகம் வ்ருகிறது

பரவாயில்லைங்க உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி.என்னையும் உங்க தோழியாக நினைத்துக் கொள்ளுங்கள். நீங்க இங்கு எங்க இருக்கீங்க.?

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

மீண்டும் வேலை தேடுவதில் பிஸியாக இருக்கியா? ஆன்லைனில் வரவே இல்லையே? சரி எப்போ டைம் இருக்கோ அப்போ வா.. வீக் என்ட் என்ன பிளான்?

Madam VELVIZHI,

Oru murai freezer la vachita atha thirupi defrost pani thirupi freezeer vaika koodathu.

athu udambuku nalalthu alla. Chickenu veena poyidum.

athanal freezerla vachatha veliya eduthu samiathu sapitudunga.

inimel chicken vangina atha pieces cut panni thannila alasi nalla vadikati ( atahvathu chickenla thanni iruka koodahtu ) athuku appuram freezer bag la thani thaniya potu vachidunga.

sila peru manjathool ubayokipanga. anal ithuvarai nan salt use pannathu illa.

chicken freezerla evvalo natkal vaikalamnu ketu irukeenga . HALAL kozhingurathunala romba nalaiku vaikatheenga. mudinja alavu sikirama eduthu samaika parunga. nan inga ( FRANCE ) freezer la vacha kurainjathu one month or one and hal month la use panniduven. romba natkalum vaika koodathu. Oru murai vachi kozhi romba irugip poyitu. eppdi solrathunu theriyala.

athanal entha porulayum freezerla vacha one or two monthsla use panna parunga.

freezer bag la date ( ennaiku freezer la podureengalo antha date )ezhuthidunga. appa theriyum ethu romba nala freezerla iukumnu. appa atha eduthu use panidalam .

athey pathiri purchase panna porappa ethu illayo atha vangunga. irukurathaey vangi thirupi yen freezer la vaikanum. yenna itha mathiri than nanum munbu senji veenakunen. athan solren.

ENNA ALLARUM MANICHIDUNGA. ENGLISH LA TYPE PANNATHUKU. YENNA NAN VELAYILA IRUKEN. ATHAN TAMIL LA TYPE PANNA NERAM AGUMNU SIKIRAMA TYPE PANRATHUKAGA IPPADI ENGLISHLA ADICHITEN. I AM REALLY SORRYNGA.

ADMIN SIR MANICHIDUNGA

Best regards

ஆமா திவ்யா சொன்னதத்தான் நானும் சொல்ல நினைத்தேன் .ஆனா நெகடிவா பேச பயத்தில் சும்மா இருந்துவிட்டேன்.நாம அப்பிடி வைத்து எடுத்து வைத்து எடுத்து செய்வதால் ஒருவித பக்டீரியா உருவாகும் இல்லயா திவ்யா.ஆனா பயப்படவேண்டாம் வேல்விழி அந்த சிக்கனை வைத்து அரை அவியலாக எந்த உணவும் செய்யாமவிட்டீங்கன்னா ok.

மேலும் சில பதிவுகள்