இலங்கை தோழிகள் சங்கம்

இலங்கைத்தோழிகளா என் அன்பு உறவுகளா அரட்டை அடிக்க வாங்கோ வாங்கோ வாங்கோ

எனது அப்பா மட்டக்களப்பு,அம்மா யாழ்ப்பாணம்.நீங்க கனடாவில் எங்கு இருக்கின்றீங்கள் நான் ஒட்டாவாவில் இருக்கின்ரேன் நீங்க திருமணம்முடித்தவரா?
காயத்திரி

ஹாய் ஹாயத்திரி. நான் டொரொண்டொவில் உள்ளேன். ஆம். எனக்கு 2 குழந்தைகள். 1. பெண் - நிஷ்ஹரி . 2வது. ஆண் - நிஷ்ஹரன். நன்றி.

அன்பின் வாணி, உங்கட இடத்திலிருந்து ~3000 மைல்கள் தள்ளி இருக்கிறோம். சியாட்டில் இல். இங்க வந்து 3 வருடங்கள். நீங்க எவ்வளவு காலமா இருக்கிறீங்க?

காயத்ரி மகள் நல்லா இருக்கிறா. உங்களுக்கு ஒரு மகள்தானா? என்ன பெயர்? எனக்கும் குரோஷே, கைவேலைப்பாடு பிடிக்கும்.

ஹலோ பிரியா, எனக்கும் நிறைய நண்பர்கள், உறவினர்கள் ரொரண்டோவில் உள்ளனர். நீங்க ரொரண்டோவில் எவிடம்?
-நர்மதா :)

காயத்ரி, 2 பிள்ளைகளுடன் நேரம் போவதே தெரியாது. அவர்கள் படுத்த பிறகு தான் சிறிது ஓய்வு வரும். எனது அப்பா, அம்மா கனடாவில் இருக்கின்றார்கள்.உங்களை பற்றி சொல்லவும்.
வாணி

always smile

அன்பின் நர்மதா, நான் இங்கு வந்து 8 வருஷம் ஆச்சு. இந்தியாவில் 10 வருஷம், கொழும்பில் 8 வருஷம் இப்படியே போகின்றது எனது வாழ்க்கை. இன்னும் சில விடுபட்ட வருடங்களை சொன்னால் எனது வயதை கண்டு பிடித்து விடுவீர்கள் என்று தான் சிலவற்றை மறைத்து விட்டேன்(சும்மா தமாஷ்)
Vany

always smile

வாணி கண்டுபிடித்துவிட்டேன்.நிச்சயமா நீங்க 26 வயதுக்கு மேற்பட்டவரே.காயத்றி,சுரேகா,ந்ர்மதா,நிஷ்கரி ,அதிரா எல்லோரும் நலமா?நானும் ரொறன்டோலதான் இருக்கேன்.நான் பிறந்து வளர்ந்த இடம் அரியாலை யவ்னா.வேற என்ன சொல்லலாம்...ம்...திருமண்மாகி 20 மாதங்கள்.வாணி சொன்னதுபோல் பாரீஸ்ல10 வருஷம் கனடால 2வருஷம்.இப்போது நேரம் இரவு 2 மணி கண்ணக்கட்டுது அதனால நாளை சந்திப்போமா

ஆகா சேர்ந்துட்டாங்கய்யா சேர்ந்துட்டாங்க இனி அருசுவைக்கு ஒரு இனிய சிங்கள தமிழ் கலை கட்ட போகுது இங்க , எம்மாடி நர்மர்தா இலங்கை தழிழர்கள் என்று கூப்பீட்டதும் ஓடோடி வந்து விடீர்கல் கதைக்க ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.(சும்மா தமாழுக்கு) ஹா ஹா ஹா ஹி ஹி ஹி
ஜலீலா

Jaleelakamal

கதையுங்க கதையுங்க..படிக்க ரொம்ப நல்லா இருக்கு,,வழமையாக கதையுங்கோ.

எனது மகளின் பெயர் ஆர்த்தி. . மகள் பிறக்க முதல் எனக்கு எனக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு குரோசே தான்.இப்ப மகள் விடமாட்டா.
காயத்திரி

ஆகா வந்திட்டாங்கப்பா....
இந்த ஜலீலாக்காவையும் தளிகாவையும்தான் சொல்றேன்........

இத்தனைபேர் இலங்கையா? இலங்கையைக் கூப்பிட்டதாலதான் தெரியுது, காயத்ரி நீங்களும் இலங்கையா? முன்பு தொடக்கமே கதைத்துக்கொண்டிருக்கும் காயத்ரிதானே?

நர்மதா.... பலமுறை கேட்க நினைத்து தவறவிட்டுவிட்டேன்... நீங்கள் தான் ஓடி விடுவீங்களே.... உங்கள் குட்டி மகளுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீங்க?

சுறேஜினி... நல்லாவே பாடுறீங்க... நேற்று உங்கள் பாட்டைக் கேட்டபடியே நித்திரையாகிவிட்டேன், இல்லையெனில் இங்கே கதைத்திருப்பேன், சின்ன வயதிலிருந்தே இப்படித்தான் பாடுறீங்களோ?:)

வாணி இது என்ன கேள்வி வாங்கோ ... ஆனால் அடிக்கடி வாங்கோ... இல்லாட்டில் மறந்துபோய்விடுவோம்.... வாணி ரமேஷ் என்பது நீங்களோ?

நிஷ்ஹரி, ஹாயத்ரி.... மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பிலே எந்த இடம் சொல்ல முடியுமோ?

சுறேஜினி.... நீங்கள் யவ்னா என்றதும் எனக்குப் புரியவில்லை, நான் யோசித்தேன் இது எந்த இடம் என்று, பிறகுதான் முழங்கிச்சுது... யாழ்ப்பாணம் என்று...

சுரேகா எப்ப போகிறீங்கள் சென்னைக்கு? முடிந்தால் எங்கட கெட்டுகெதருக்கும் போகப்பாருங்கோ....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்