இலங்கை தோழிகள் சங்கம்

இலங்கைத்தோழிகளா என் அன்பு உறவுகளா அரட்டை அடிக்க வாங்கோ வாங்கோ வாங்கோ

நன்றி வாணி. அடுத்தமுறை யாருக்காவது வாழ்த்துமடல் அனுப்பவேண்டி வருகிறபோது செய்து அனுப்புங்கள். கடைக்குப் போய் ஒன்று வாங்கிவரும் நேரம் ஒரு வாழ்த்துமடல் செய்யப் போதுமாயிருக்கும். (எனக்கு 5 நிமிடம்தான் எடுத்திருக்கும்.) ஒருமுறை அனுப்பிப் பாருங்கள். கிடைக்கும் வரவேற்பு மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும்.
//உங்களைப் போல teacher ஆக// ??? நான் சரியான கர்ர்.. கர்ர்..தெரியுமா? :-) வாணி, எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். பிள்ளைகளோடு சந்தோஷமாக இருக்க முடிவது அவர்கள் குழந்தைகளாய் இருக்கும் வரைதான். உங்கள் குட்டிப் பெண்ணுக்கு எனது அன்பு.
இமா

‍- இமா க்றிஸ்

நன்றி இமா, நீங்கள் சொல்வது சரிதான். நான் எனது பிள்ளைகளுடன் நிறைய நேரம் spend பண்ணுவேன். அவர்களை கூட்டிக் கொண்டு library போவது, ice cream store, toy store கூட்டிக் கொண்டு போவது என்று. அவர்களின் சந்தோசம் தானே முக்கியம். அவர்கள் வேகமாக வளர்வது போல ஒரு பிரமை எனக்கு எப்போதும்.

அவள் விகடனில்(on-line) வீட்டில் செய்யலாம் Fashion நகைகள் என்று ஒரு பகுதி 2 வருடங்களுக்கு முன்பு வந்தது, முடியும் என்றால் போய் பாருங்கள். எல்லாமே கொள்ளை அழகு. தோடு,நெக்லஸ், வளையல் என்று கண்ணை பறிக்கும். நீங்கள் சொன்னது போலவே வாழ்த்து மடல் செய்து பார்க்கிறேன்.
Vany

always smile

நிச்சயம் அவள் விகடன் பார்க்கிறேன். நான் எனக்காகவும் நண்பிகளுக்கு அன்பளிப்புக் கொடுப்பதற்காகவும் நகைகள் செய்வதுண்டு. தகவலுக்கு நன்றி.
பிள்ளைகள் இருவருக்கும் என் அன்பு. (இருவர்தானே? மகள் வானதி? அது நீங்கள்தான் என்று எண்ணுகிறேன்.)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்