இலங்கை தோழிகள் சங்கம்

இலங்கைத்தோழிகளா என் அன்பு உறவுகளா அரட்டை அடிக்க வாங்கோ வாங்கோ வாங்கோ

ஹாய் நர்மதா. எப்பிடி இருக்கிறிங்க. குழந்தை எப்பிடி நலமா. ஸ்காபறோ. நர்மதா ஜலீலா அக்கா, தளிகா நலமா. பிறகு கதைக்கிறன்.

வணக்கம்!
என் பெயர் ஜீவிதா. சொந்த ஊர் யாழ்ப்பாணம். திருகோணமலை, வவுனியா, சென்னையிலும் கொஞ்சக்காலம் இருந்தேன். இப்ப நானும் என்ர கணவரும் Torontoவில் இருக்கிறம். குழந்தைகள் இன்னும் இல்லை. இப்ப தான் படிச்சு முடிந்தது. part time வேலை செய்யிறன்.அதிராவும், நர்மதாவும் இலங்கை என்று தெரியும். ஆனா இவ்வளவு பேர் இருக்கிறீங்கள் என்று தெரியாது. உங்கள் எல்லாரோடயும் கதைக்கிறதில நல்ல சந்தோசம்

சுரேகா,அதிரா,சுறேஜினி,காயத்ரி, வாணி,பிரியா, நர்மதா,ஜீவி நீங்கள் பேசுவதை எல்லாம் மொத்தமா படிக்கும் போது குட்டி இலங்கைல இருந்த மாதிரியும் இருக்கு..இன்ப தேன் வந்து பாயுது காதினிலேனு பாட வேண்டும் போல இருக்கு..நல்லா பேசுங்க..உங்க தமிழிலெயே பேசுங்க.. படிக்கும் போது ரொம்ப நல்லா இருக்கு..

எப்பிடி இருக்கின்றீங்கள்.நான் இடைக்கிடை வந்து போறனான் அறுசுவைக்கு.உங்களுடைய பட்டிமன்ற வாதம் எனக்கு பிடித்திருந்தது
நர்மதா
நான் உங்களுடைய பைன் கோன் பூக்கள் செய்து வைத்து இருக்கின்றேன்.உங்களுடைய மகளின் பெயர் என்ன
அதிரா உங்கள மாதிரி என்னால் டைப் அடிக்க முடியவில்லை.எப்படிபந்தி பந்தியா எழுதுறீங்கள்
காயத்திரி

காயத்ரி,
இதையே பார்த்து வியக்கிறீங்கள். இப்ப எவ்வளவு சுலபமாகிவிட்டது தமிழில் ரைப் பண்ணுவது, முன்பு என்றால் புள்ளிக்கு ஒரு எழுத்து, விசிறிக்கு ஒரு எழுத்து... அதே போல் அ என்றால் A அடிக்க முடியாது, ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு ஆங்கில எழுத்து இருந்தது. பாடமாக்கித்தான் அடிக்க வேண்டும்... அப்பவே நான் நன்கு தட்டுவேன்... போகப் போகப் பழகிவிடும், முதலில் ஆங்கில எழுத்துக்கள் எங்கே இருக்கிறதென கையில் பாடமாகிக் கொண்டால் சுலபமாக அடிக்கலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பின் அதிரா, காயத்ரி, வாணி, ப்ரியா, சுரேஜினி, சுரேகா, எல்லரும் எப்பிடி இருக்கிறீங்க?

அதிரா, கயத்ரி எனது மகள் பெயர் லயா வானதி. பெயர் விளக்கம் கேட்டால் ஒரு பெரிய பந்தியே வரும் எண்டதால வேண்டாம் :) காயத்ரி பைன் கோன் பூக்கள் செய்தீங்களா? இப்ப ஸீசன் தானே இன்னும் செய்யுங்கள். நானும் எடுத்து வச்சிருக்கிறன். பெயின்ட் பண்ணதான் நேரம் கிடைக்குதில்லை. உங்கட மகளின் பெயர் நல்லா இருக்கு. எத்தனை வயது? நானும் ஒரு 05 பிளாங்கெட் இவ பிறக்க முதல் செய்தது இப்ப ஒன்று குறையில நிக்குது. முடிக்கதான் நேரமில்லை.

அதிரா, முன்பும் என்னை பற்றி கேட்டிருந்தீங்கள். அப்ப டெலிவரி நேரம் எண்டதால எனக்கு பதில் போட முடியேல்ல. உங்கட மகன்களின் பெயர்கள் என்ன?

வாணி உங்கட வயதெல்லாம் கேக்க மாட்டன். :) மேரிலான்டில்தான் எனது நண்பி ஒருவர் படித்தார்.

ப்ரியா மகள் சுகமா இருக்கிறா. உங்கட பிள்ளைகள் எப்பிடி? எனது சொந்தங்களும் ஸ்காப்ரோ, மிஸ்ஸுஸாக அந்த பக்கம்தான்.

ஜலீலாக்கா, தளிகா, சந்தோ , எங்கட தமிழ ரசிக்கிறீங்களா? இப்ப இங்க நாங்க கதைப்பது (பேசுறது) கூட முறையான (ஒழுங்கான)இலங்கை தமிழ் இல்லை. யாழ்ப்பாண தமிழ்ல சில சொற்கள் உங்களுக்கு துண்டற(சுத்தமா?) விளங்காது(புரியாது). அதிராட்ட ஒரு டிக்ஷனரி போட சொல்லுங்க. (எனக்கு நேரமில்லை :) அதனால). நாங்கள் அங்கு கதைக்கும் பேச்சு தமிழில் அப்படியே எழுதுவதில்லை. எழுத்து தமிழ் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தமிழ் மீடியம்தான் பாடசாலைகள் எல்லம். அதனால அப்பிடி இருக்கும்:) மேலும் விளக்கம் பிறகு(அப்புறம்) சொல்லுறன்.
-நர்மதா :)

நர்மதா இதுக்கு முன்னால நான் சுவிஸ்ல இருந்தேன்னு ஏதொ திரட்ல சொல்லிருந்தேன்..அங்க உங்க இலங்கை தமிழ் பேசுறவங்க நிறைய ஆட்கள் இருந்தாங்க(இருக்காங்க) அப்போ எனக்கு நிறைய வார்த்தைக்ள் பழகிடுச்சு..
கதைக்கிறது=பேசுறது
குப்பி=விசிஆர்(வீடியோ கேசட்)
கூறுகிறேன்=சொல்றன்
என்னுடைய=எண்ட
பகடி=நகைசுவை
விசுறு=பைத்தியம்
விளங்குதோ=புரியுதா
இப்படி நிறைய புரியும்..இப்போ எல்லாம் நீங்க பேசும்போது திரும்ப ஞாபகபடுத்திற மாதிரி இருக்கு..

அன்புள்ள சுரேயினி, என் வயதுடன் இன்னும் நான் அலைந்து திரிந்த 8 வருடங்களை கூட்டினால் என் வயது வரும். சரியாக விடை கண்டு பிடித்தவர்களுக்கு ஒரு தங்க நாணயம்.
அதிரா, நான் வாணி ரமேஷ் இல்லை. நீங்கள் நலமா. மற்றும் ஜலிலா, நர்மதா, காயத்ரி, சுரேகா நலமா.
வாணி

எனது அப்பா,அம்மா கொழும்பில் இருக்கின்றார்கள்.இங்கு கனவரின் பெற்றார்,அண்ணன்மார் குடும்பத்தினர் எல்லோரும் இருக்கின்றார்கள். எனது மகளுக்கு ஒரு வயதும் இரண்டு மாதமும் ஆகின்றது.நடக்கத் தொடங்கி இருக்கின்றா. இந்தக் கிழமை மாமி வீட்டுக்கு வந்து இருக்கின்றா. அதனால் எனக்கு கொஞ்சம் free. நீங்கள் யாழ்ப்பாணத்தில் எந்த இடம்.
காயத்திரி

ஹாய் சுரேகா,அதிரா, காயத்திரி, வாணி, சுரெஜினி ,னர்மதா, ஜிவிதா, சாந்தோ, நலமா, அப்பா இப்ப தான் ஒரு மாதிரி நேரம் கிடைச்சுது, அதிரா என் அம்மா பெரியகல்லாறு. ஊரில வேலிக்கால எட்டி ஒரு சொட்டு தலைய கட்டுர நிலமதான் என்ர நிலமை. என்ன தளிகா , சந்தோ விளங்கிச்சுத்தோ.

மேலும் சில பதிவுகள்