இலங்கை தோழிகள் சங்கம்

இலங்கைத்தோழிகளா என் அன்பு உறவுகளா அரட்டை அடிக்க வாங்கோ வாங்கோ வாங்கோ

வணக்கம் நண்பிகளே வணக்கம் குட்டீஸ் நிஷ்கரி,நிஷ்ஹரன்,ஆர்த்தி,லயா குட்டிகளே உங்க குறும்பு பிஸ்னஸ் எல்லாம் எப்பிடி போய்ட்டிருக்கு?ஜலீலா உங்க சிரிப்பு ரொம்ப இனிமயா இருக்கு .அதிரா யாழ்ப்பாணத்த யாழ்ப்பாணம் எண்டும் சொல்லலாம் ஜவ்னா எண்டும் சொல்லலாம் நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்.ஜீவிதா ஒரு நிலம் சொந்தமா வாங்கிறதே கஸ்டம்.நீங்க எத்தன ஊர் சொந்தமா வச்சிக்கிறீங்க.பில்கேட்ஸ் உங்களிடம் பிச்சை எடுக்கவேணும் போங்க.வாணி உங்கள நினைக்க ஒண்டு யாபகம் வருது.ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினேன்.....கவலப்படாதீங்கோ இலங்கைத்தமிழரா பிறந்திட்டு அப்படான்னு இருந்துட முடியுமோ.காலம் நம்பள மத்தவங்களவிட அனுபவசாலிகளா மாத்திண்டு போகுதுதெண்டு எடுத்துக்கோங்கோ

ஹாய் சுரேஜினி, குட்டிஸ் நித்திரை, நீங்கள் என்ன செய்கிறீர்கள்.

இப்பிடி தமிழ் டைப் பன்ன கொஞ்சம் கஸ்டமா இருக்குது. சாதாரணமாக டைப் பண்ண என்னால ஈசியா முடியும்.

இப்பிடி தமிழ் டைப் பன்ன கொஞ்சம் கஸ்டமா இருக்குது. சாதாரணமாக டைப் பண்ண என்னால ஈசியா முடியும்.

பிரியா நீங்க இவ்ளோ கஷ்டமா பேசி என்ன மாட்டி விடுறீங்களே? அப்பறம் நான் அழுதுருவேன்..ஆஹ்..எனக்கு சில வார்த்தைகள் தான் ஞாபகம் இருக்கு..அதும் நான் சுவிஸ் ல இருந்து வந்து 6வருஷம் ஆகிடுச்சு.. வேலிக்கால அப்படின்னா என்னன்னு தெரியல..எனக்காக நீங்களே சொல்லிருங்கபா..இல்ல சுகன்ய வந்து சொல்றாங்களா பார்க்கலாம்..

ஹாய் சாந்தோ, யாராவது சொல்வார்கள். பொறுத்தார் புவி ஆழ்வார். இதுக்கெல்லாமா அழுவார்கள். நான் உங்களுக்கு லோலி பப் தாறன். கண்ண துடையுங்கோ பிளீஸ்.

ஹய்!
ப்ரியா நான் நலம். நீங்களும் உங்கள் குழந்தைகளும் சுகமா? சுரேயினி சொந்தமா வீடு உள்ளவர்களுக்கு ஒரு வீடு. இல்லாதவர்களுக்கு உலகமே வீடு. ஆனா விற்க தான் முடியாது. (லொல்)
சந்தோ, உங்கள் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுது.

அன்பு இலங்கைத் தோழிகளே, இந்த த்ரெட் படிக்க மிகவும் இனிமை. பதின் வயதில் இலங்கை வானொலிதான் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் நெருங்கிய நட்பு. வேறு ஒரு த்ரெடில் குணசரி குல்டோ பற்றியும் படித்தேன். அதன் விளம்பரம் இலங்கை வானொலியில் கேட்டதும், அதையே பாடிக் கொண்டு இருந்ததும் நினைவு வந்தது.

இந்த த்ரெட் படித்ததும், ராஜேஸ்வரி சண்முகம், விமால் சொக்கனாதன், ஆமீனா, புவனலோசனி வேலுப்பிள்ளை, கே.எஸ்.ராஜா எல்லோரது குரலும் காதில் கேட்பது போல் ஒரு பிரமை. மதியம் ஒரு மணிக்கு என் விருப்பம் என்று ஒரு நிகழ்ச்சி. திரு விமால் சொக்கனாதன் எப்போதும் முருகன் பாடலோடுதான் ஆரம்பிப்பார்.
இசைமாலை, இசையும் கதையும், இன்றைய நட்சத்திரம், இன்றைய நேயர் ... இன்னும் எத்தனை எத்தனை ...

இன்னும் அலை அலையாக எத்தனையோ நினைவுகள்.

தொடரட்டும் உங்கள் அரட்டை.

தள்ளி நின்று நாங்களும் ரசிக்கலாம்தானே, அனுமதி உண்டா எங்களுக்கு

அன்புடன்

சீதாலஷ்மி

சுரேகா,சுரேஜினி,அதிரா,நர்மதா,ஜீவிதா,ப்ரியா,வாணி,தாமரை,சதாலெட்சுமி அனைவரும் நலமா.சுரேஜினி ஆர்த்தி இன்று நல்ல புளுகத்தில் இருக்கின்றா காரணம் அவவின் பாட்டி வந்து இருக்கின்றா. ஒட்டாவா வந்து இருக்கின்றீங்களா? ஜீவி எப்பிடி இருக்கிறீங்கள். வாணி என்ன பிசியா இருக்கிறீங்கபோல, ப்ரியா பிள்ளைகள் எப்பிடி இருக்கிறாங்க.
.
காயத்திரி

ஐயையோ என்ன இது??
சீதலக்ஸ்மி ஆன்டி என்ன இப்படிக் கேட்டிட்டீங்க? நீங்களெல்லாம் ரசிக்கிறீங்க எங்கட தமிழை எனக் கேட்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமோ? ரசிப்பதோட மட்டும் நிறுத்தாமல் அதைச் சொல்லும்போது கேட்க உண்மையில் காதில தேன் பாயுது....

நர்மதா.... நல்லாச் சொல்லுறீங்கள்.. உண்மையில் இப்போ நாங்கள் ஊரவர்களைக்கண்டாலும் சரியான ஊர்த்தமிழில் கதைப்பதில்லைத்தானே, எல்லாமே மாறிப்போச்சு... உ.க்கள் மகளின் பெயர் வித்தியாசமாக இருக்கு,

நிஷ்ஹரி உங்கட எழுத்தைப்பார்த்து ஒரு தடவை ஊருக்குப்போய் வந்தேன் கனவில்.. சந்தோ வேலிக்கு மேலால் பார்ப்பதுதான் அது... ஒரு நாட்டார் பாடல் நினைவிற்கு வருகிறது
நெற்றிக்கு நேரே நிலாக் கிளம்பி வாறதுபோல்
வேலிக்கு மேலால மச்சான்ர வெள்ளை முகம் காண்பதெப்போ? , முன்பு படித்தது புத்தகத்தில்.

சுறேஜினி நல்லாவே ஜோக்கெல்லாம் சொல்லுறீங்கள்.

ஹாயத்ரி கம்பிமேலதானா ? கவிசிவாவிடம் கற்றது..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்