இலங்கை தோழிகள் சங்கம்

இலங்கைத்தோழிகளா என் அன்பு உறவுகளா அரட்டை அடிக்க வாங்கோ வாங்கோ வாங்கோ

காயத்திரி உங்கள் ஒரு வயசு ஆர்த்தியை நான் கற்பனை செய்து பாக்கிறேன்.இத்துனூண்டு கால் கைகளை வைத்துக்கொண்டு ஏதோ தனக்குத்தெரிஞ்ச்துக்கு அள்வா 4எட்டு வைப்பதும் யாருக்குமே விளங்காத பாஷையில் தாராளமாக கதைத்துக்கொண்டும் யாரோ தனக்கு யோக்ஸ் சொன்னதுபோல் சிரிப்பு என்று மொத்தத்தில் தான் ஒரு மகாராணி போல் நினைப்பில் அட்டகாசங்கள் செய்வதுபோல் என் கண்ணுக்கு தெரிகிறது. பாட்டியை நினைக்க பரிதாபமாக இருக்கிறது.பாட்டியக்கொண்டு திருஷ்டி சுத்திப்போடுங்கோ.காயத்திரி ஒட்டாவா பக்கம் நான் வந்ததே இல்லை.ஆனா நீங்க நிறயத்தடவ ரொறன்டோ வந்திருப்பீங்கள் என்று தெரியும். எனக்கு இங்கு சொந்தங்கள் யாரும் கிடையாது.

ஜீவி உதிரம் வடியிற இடத்தில உப்பும் மிளகாயும் போட்டு நல்லா தேயுங்கோ அல்லது அருசுவைத்தோழிகளிடம் ஆலோசனை கேட்டு அதன்படி செய்யுங்கோ.அதுக்கும் கட்டுப்படாவிட்டால் dr இடம் போங்கோ.

சுறேஜினி,
நல்லாக் கதைக்கிறீங்கள்... அது என்ன அதிரா வந்தால் எல்லோரும் போய்விடுவார்கள்.. அதிரா போனால் வருவார்கள்...அவ்வளவு பயமோ:)

நீங்கள் ஸ்காபரோவிலயோ இருக்கிறீங்கள்? ஒருக்கால் போய்ப் பாளிமெண்டைப் பார்த்துப்போட்டு வரலாமே? அப்படியே ஹாயத்ரியையும் பார்த்தமாதிரி இருக்கும்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

முதலிலே எல்லாருக்கும் எனது பணிவானவணக்கம்.... உங்களோட சண்டைபோட நான் வரல்ல... ஆனாலும் இத சொல்லாம இருக்க முடியல.... உங்கட சங்கத்தோட பெயர் இந்த கால கட்டத்தில பொருத்தமாக இல்ல என்பது தான் எனது தாழ்மையான அப்பிப்பிராயம்.... நீங்கள் எல்லோரும் இப்ப தாயகத்தில இல்ல என்பது உங்கட கதையில தெரியுது...... இண்டைக்கு எமது மண்ணில நாங்கள் படுகிற வேதனை, துன்பம், துயரம் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு விளங்கவேண்டும் என்பது கிடையாது...கருவில இருக்கிற பிள்ளையைக்கூட நிம்மதியாக தூங்க வைகேலாத நிலையில எங்கட தாய்மார் பதுங்கு குழியில வாழ்க்கைய இன்றோ நாளையோ என்று நிம்மதியில்லாமல் கழித்துக்கொண்டு இருக்கும் இன்றைய சூழ்நிலையில, தமிழகமே எழுச்சிகொண்டு எமக்காக குரல்கொடுக்கிற நேரத்தில நீங்கள் இப்பிடி ஒரு தலைப்பில ஒரு அரட்டைய தொடங்கியிருப்பது எனது மனதில இரத்த கண்ணீர தான் வரவைக்குது... உங்கட அரட்டைய நான் குறைகூற வரேல்ல ஆனாலும் உங்கட தலைப்ப பார்க்கும் ஒரு இந்திய குடியானவன்/ள் மனதில் ஒரு தப்பான அபிப்பிராயத்த ஏற்படுத்திடும் என்பது தான் இந்த ஈழவனுடைய தாழ்மையான அப்பிப்பிராயம்......தயவு செய்து என் உணர்வுக்கு மதிப்பளித்து உங்களின் தலைப்ப மாற்றிக்கொள்ள முடிந்தால் என்னக்காக ... இல்ல இல்ல எம் தாயகத்திலே "வருந்திகொண்டிருக்கும்" இலட்ச கணக்கான உங்கள் உறவுகளுக்கா மாற்றுவீர்களா ????

"ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே"

சந்தோ நான் டிஷனரி கதைக்கிறன்.வேலி- என்றால் எங்கள் ஊரில் வீடுகளுக்கு நலாபக்கமும் அமைக்கப்படும் சுவர்.இது தென்னை மரத்தின் ஓலைகளை ஒன்றின் கீழ் ஒன்றாகவும் பக்கக்கம் பக்கமாகவும் அடுக்கி அழகாக இருக்கும்[கொஞ்ச நாளைக்கு] காலப்போக்கில் அந்த வேலியில் ஓட்டைகள் கிழிசல்கள் வந்துவிடும் அக்கம் பக்கத்து சுகங்கள் விசாரிக்கவேண்டுமாயின் அல்லது புதினங்கள் பார்க்கவேண்டுமாயின் வெளியே போய் சிரமப்பட வேண்டியதில்லை. காவல்காரர்களான அம்மா அப்பா விடவும் மாட்டர்கள்.பிரியாமாதிரி கெட்டிக்கார பிள்ளைங்கள் அந்த வேலிக்குள்ளால எட்டிப்பாப்பினம் .என்னப்போல அதி கெட்டிக்காரப்பிள்ளைகள் அதுக்குள்ளால புகுந்து வெளிய போய் திருட்டு மாங்காய் தேடுவினம்.சந்தோ என் விளக்கத்துக்கு பயந்து விளங்காவிட்டாலும் விளங்கியதுபோல் காட்டிக்கோள்ள வேண்டாம்.எதுவா இருந்தாலும் கேட்டிடுங்கோ நமக்கும் பழய நினைவுகள மீட்டமாதிரி இருக்கும்.

ஈழவன் அண்ணா மன்னிச்சு கொள்ளுங்கோ.நாங்களும் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற கொடூரங்களை அனுபவித்து ,கண்டுகழித்து நொந்து போய் இங்கு வந்தவர்கள்தான்.எங்கள் மக்களின் வலி எங்களைப்போல் யாராலும் புரிந்து கொள்ள முடியுமா.இது எங்கள் புண்பட்ட மனங்களுக்கு ஏற்படுத்திக்கொண்ட சிறிய சந்தோஷமே தவிர வேறொன்றுமில்லை.இருந்தாலும் உங்கள் வேண்டுகோள் நியாயமானதே.தலைப்பை மாற்ற முடிந்தால் நிச்சயமாக மாற்றுவோம்.ஈழவன் அண்ணா எங்கள் தவறை மன்னித்துக்கொள்ளுங்கள்.

அன்புடன் சுரேகா , நான் உங்கட சந்தோசத்தில குறுக்க வரேல்ல அதை தப்பு எண்டும் சொல்ல மாட்டன். உங்கள் தலைப்பில இருக்கிற இலங்கை என்டத மட்டும் எடுத்திருங்களேன் தயவு செய்து..... எங்களை மறக்காமல் இருக்க கிழே கொடுத்திருக்கும் தொடர்பை பாருங்களேன்... உங்களுக்குளும் அணல் தெறிக்கும்.. நன்றி அம்மா உங்கள் அன்புக்கு......

http://www.youtube.com/watch?v=-aLZ-SLqDQ8&feature=related

http://www.youtube.com/watch?v=33-BY2NhVuc&feature=related

"ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே"

சகோதரிகளே,

உங்களில் எத்தனை பேர் துயிலும் இல்லம் செல்லும் பாக்கியம் பெற்றீர்கள்... அந்த கணப் பொழுதின் உணர்வுகளையும் இங்கே உங்கள் இந்திய தோழியருடன் பகிர்த்துகொள்ளுங்களேன்.

"ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே"

ுரேகா சொல்வது சரிதான். நானூம் நிறைய அனுபவித்தவள் தான். 1983ல் எல்லாவற்றையும் இழந்தோம், பின் 2 தடவை எங்கள் வீடு குண்டு வீச்சுக்குள்ளானது. நாங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் எதையோ இழந்த மாதிரி ஒரு உனர்வு.
திரு ஈழவன் அவர்களே, உங்கள் மனதோ வேறு யார் மனதையோ புண்படுத்தும் நோக்கத்துக்காக இதை ஆரம்பிக்கவில்லை. தலைப்பை மாத்த முடியும் எனில் மாத்த முயற்சி செய்கிறோம். நன்றி.

வாணி

உங்க துயரம் உங்க எழுத்துகளில் தெரிகிறது அவங்க சாதாரணமாகதான் அபப்டி போட்டு இருக்காங்க..அட்மின் கண்டிப்பாக திரட் தலைப்பை மாற்றுவார் தாங்கள் இப்ப இருப்பது இலங்கையிலா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்