இலங்கை தோழிகள் சங்கம்

இலங்கைத்தோழிகளா என் அன்பு உறவுகளா அரட்டை அடிக்க வாங்கோ வாங்கோ வாங்கோ

மர்ழியா சுகன்யா உங்கள் அன்புக்கு நன்றி.உங்கள் ஆலோசனைப்படி அட்மினுக்கு மெயில் பண்ணியிருக்கேன்.

நானும் நிறைய அனுபவித்திருக்கின்றேன் இடம்பெயர்ந்து வன்னியின் பல பாகங்களில் இருந்து இருக்கின்ரேன்.யாழ் கோட்டைப் பிரச்சனையின் போது எனது வீட்டின் மீது குண்டு விழுந்தது.நாங்கள் அனைவரும் பதுங்குகுழியில் இருந்ததால் உயிர்தப்பினோம்.இந்தத் தலைப்பைப் பார்த்து எனது கணவரும்நீங்கள் கூறிய கருத்தைத்தான் தெரிவித்தார்.ஆனால் நான் எதுவும் கூறவில்லை.அதற்காக இப்பொழுது மிகவும் வருந்துகின்ரேன். ஆனால் இதில் நாங்கள் கதைப்பது என்பது எங்கள் தனிமையைப் போக்குவதற்காகத்தான்.எமது தாயகமக்களுக்காக நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிதான் இருக்கின்றோம்.நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் மன்னியுங்கள்.
அன்புடன்
காயத்திரி

தோழிகளா தமிழில் எழுதி எழுதியே கொல்லும் என் சகோதரிகளா சுரேக்காவின் வணக்கம்.நாளை எனக்கு பிளைட்.இந்தியா செல்கிறேன்.திரும்பி வரும் டேட் தெரியாது.உங்களலாம் மிஸ்பண்றாபோல ஒரு வருத்தம்.ஏன்னா எனக்குத்தெரிஞ்சு தமிழில் ஆரோக்கியமாக உரையாடும் தளம் இது ஒன்றுதான்.

நல்லபடியாக இந்தியா போய்ட்டு வாங்க.உங்களை நாங்கள் மறக்க மாட்டோம். முடிந்தால் கர்ப்பரட்சம்பிகை அம்மனுக்கு நேர்த்தி வையுங்கள்.நல்ல சக்தியுள்ள கோயில் அது.உங்களுக்காக நான் கடவுளை வேண்டிக்கொள்ளுகின்றேன்
அன்புடன்
காயத்திரி

ஹய்!
காயத்திரி நான் நல்லா இருக்கிறன். சுகம் கேட்டதுக்கு நன்றி. 2005ல் ஒற்றோவா வந்திருந்தேன். ஆனா, ஒரு நாள் தான் நின்றோம். என்ன சுரேயினி என்ர பேரில உங்களோட முந்தி பள்ளிக்கூடத்தில ஆரும் படிச்சிருக்கினமோ? ஒரே என்னோட சண்டை பிடிக்கிறீங்க. சுரேக்கா நல்ல படியா போய்ற்று வாங்கோ. கடவுளை பிரார்த்தியுங்கோ.

எழில் கொஞ்சும் இயற்கை வளம்
எனை ஈன்றெடுத்த அன்னை நிலம்
விழி காண முடியவில்லை இன்று
விதியை எண்ணி வருந்துகிறேன் நொந்து
பழி வந்து சேர்ந்ததுவோ எனக்கு
பகட்டாக வாழ்ப்பறந்தவன் என்று
களிப்போடு வாழ்வில்லை நான் இங்கு
கனன்று எரிகிறது என் நெஞ்சு

பரந்த வானின் நிலவின் ஒளியில்
படுக்க வேண்டும் பாய்விரித்து மரநிழலில்
விடிந்ததென்று சேவல் கூவும் இன்பம்
வித விதமாய் ஒலியெழுப்பும் அலாரமிது துன்பம்
செறிந்த மரங்களூடே வீசும் காற்றை
செத்து மடியுமுன் ஏற்க வேண்டும் என் சுவாசப்பை
விரிந்து செல்கிறது மண்ணில் கால்பதிக்கும் ஆசை
விம்மி அழுகிறேன் கேட்கவில்லை ஓசை

பலநாள் ஆசைகள் சுடராய் எரிந்தது
பலனாய் நெடுங்கனவுதான் வந்தது
இதுநாள்வரையில் உறங்கிய ஆசைகள்
இதமாய் நெஞ்சில் உதயம் ஆனது
தலைநகரில் கால்பதித்தேன் புல்லரித்தது உடல்
தமிழ் முகங்களைத்தேடினேன் உடன்
தொலைவில் ஓரிருவர் சிரிப்பைத்தொலைத்த முகம்
தொக்கி நின்றது அதில் பெரும் பயம்.

சிறைவாழ் தமிழ்ர்கள் பலபேர் - இங்கு
சிறுகுற்றம் புரியவில்லை விடுதலைதான் என்று?
மறைந்து வாழ்ந்தனர் நம்மக்கள்- இம்
மண்ணில் தமிழ்ராய் பிறந்ததுதான் அவர் குற்றம்
கொலை மலிந்து உயிர்கள் தொலைந்தது
கொடுமையது தலை விரித்து தாண்டவம் ஆடியது
தடை உத்தரவு திடீரெனப் பிறந்தது
தடல்புடல் தேடலோடு கைதுகள் தொடர்ந்தது.

சோதனைகள் பலகடந்து நான் சென்றேன் யாழிற்கு
சோலையாக இருந்தமண் கிடந்ததே பாழாக
உறவுகள் கண்டேன் இதுவென்ன உருவோ
உடல்மெலிவு சகிக்கவில்லை ஊனிழந்த நிலையோ
சித்திமகள் சித்திரவதையில் வாழ்விழந்ததேனோ
சிறகொடிந்த பறவைகளாய் வாழுவோர் எத்தனையோ?
நித்தம் இங்கு நடக்கும் நிந்தனையால்
நிம்மதியை இழ்ந்த வண்ணம் எம்மக்கள்.

காணவில்லை காணவில்லை என்மகனை என்று
கதறியழும் தாயவளின் கண்ணீரைக்கண்டு
தாளவில்லை பதைபதைத்தேன் கொடுமைகளை எண்ணி
தாய்க்குலத்தை பிழியும் துயர் மறைவதெப்போ மண்ணில்
பாடசாலை சென்றபிள்ளை பிண்மாகப் பற்றைக்குள்
பாவிகளின் கொடுமைகளால் பலவுயிர்கள் மூடு கிண்ற்றுக்குள்
வீதிகளில் தடைவிதித்து இடமறிக்க நடை பயில வேண்டும்
வீணர்களால் பிஞ்சுகளும் வயோதிபமும்கூட மிஞ்சியது இல்லை.

செம்மணியில் புகைகிறது என்போன்ற உயிர்கள்
செவிமடுக்க யாருமில்லை வெறிபிடித்த அரச நரிகள்
பிள்ளையின் வளர்ச்சி கண்டு தாயழுதாள் ஏனோ?
பிடித்துதின்னும் அரக்கர்களின் பயம்தானோ
அரசபீடம் ஏறுதற்கு அம்மை போட்ட போடு
அடுத்த நிமிடம் அதை மறந்து பிறதிட்டங்களோடு
செம்மையான அடி உதைகள் கற்பழிப்பு சூடு
செய்திகளை மறைத்து நல்லாட்சி எனும் பகட்டு.

இரவுவேளை தலைகாட்ட முடியாது வெளியில்
இளையவர்கள் வாழும் வீட்டில் எழுப்பிவிட்டு நிரலில்
பரவி நின்று பேசுவார்கள் தம்மொழியில்
பகலாகுமுன்பே கைது தெரியாது வெளியில்
துரவுகள் கிணறுகள் மண்ணைத்தூர்க்கும்
துருவி ஆராய யார் வருவார் இங்கு
தீர்வுப்பொதியில் இன்னுமென்ன திட்டங்களோ
தீராத எம் சுமையை எடுத்து வைப்பது எப்பொதியில்?

பலத்த அழிவுகள் இரத்த சிதறல்கள் பொறுக்க முடியாமல்
பதைத்து எழுந்த வேங்கைகள் பலபேர் - தம்
இனத்தை அழிக்கும் கொடுமைகள் மறைய
இளமை வாழ்வை களைந்து எறிந்து
உதைக்கும் எதிரியை சிதைப்பேன் என்று
உரமோடு நிமிர்ந்த தலைவன் செல்வங்கள்
விடியலை நோக்கி போரிடும் படையை
விட்டு விலகி நானும் சுநலமாய் வாழலாமோ?

விழித்துப்பார்த்தேன் உணர்ச்சிவசத்தில்
விலகிப்போனது இரவின் கனவு
வேலைக்குப்போகவேண்டும் சொன்னது என் மனது
வேறாகிப்போனதுவோ என் மண்ணின் கனவு
இல்லை.. இல்லை ...வேராகிப்போனது நினைவு
இயந்திர வாழ்க்கைக்கு நடைபயின்றேன்
திசைமாறிரப்போகுமோ எந்தன் மோகம்
தினம் மோதுதே தேசத்தின் ராகம்.

நண்பிகளே இது நான் 98 ஆம் ஆண்டு பாரீசில் ஒரு போட்டியில் எழுதி தங்கம் வாங்கிது நீளம் கூடிவிட்டது தப்போ தெரியவில்லை இது கவிதையல்ல என் அனுபவங்கள்.9வயதில் தந்தையையும் 18 வயதில் தாயையும் இழ்நதேன் நான்.இந்த யுத்தத்தில் இழ்ப்பதற்கு எதுவுமே இன்றி வந்தவர்கள் வரிசையில் நானும் ஒருத்தி.என் கணவர் வந்துவிட்டார்.இனிமேல்pc யில் உக்காருவது தனது முறை என்று என்னைத்துரத்தி விடுவார்

ஹய்!
சுரேயினி நல்லா எம் தாயகத்து நிலமையை கவிதையா எழுதியிருக்கிறீங்கள். படித்ததும் என்னை அறியாமல் அழுது விட்டேன்.
ஈழவன் அண்ணா, தலைப்பு தப்பாயிருந்தால் மன்னித்து விடுங்கள். நாம் இங்கு இருந்தாலும் எமது தாயக நினைவுகளை, நாம் பட்ட அவலங்களை மறக்கேல்ல. 95 ஆம் ஆண்டு யாழிலிருந்து தென்மராட்சி நோக்கி இரவிரவாக நடந்தோம். அப்போ எனக்கு பத்து வயசு. இரவு நடக்கத் தொடங்கினது அடுத்த நாள் பத்து மணிக்கு தான் கைதடி வந்தடைந்தோம். இதை எல்லாம் உயிர் இருக்கும் வரை மறக்க முடியாது. நாம் அந்த ஒரு நாள் பட்ட கஸ்ரத்தை எங்கட உறவுகள் தினம் தினம் இப்ப அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். எப்ப தான் இந்த அவலம் முடியுமோ...

சரியாத்தான் கற்பனை பண்ணியிருக்கிரீங்கள்.பாட்டு போட்டா டான்ஸும் ஆடுறா அப்பா வேலையால் வந்தவுடனே தான் போட்டிருக்கின்ற சட்டையை தொட்டுக்காட்டுவா.தான் புதுச்சட்டை போட்டிரிக்கின்றாவாம்.சுரேஜினி இதுவரைக்கும் நான்டொரன்டொ வந்ததெயில்லை என்னுடைய சொந்தங்கள் எல்லாம் ஒட்டாவாவில்தான்
அன்புடன்
காயத்திரி

surekka, have a safe trip. Where do you live in Toronto? I am visiting my parents next month. They live near Victoria park. Please forgive me for typing in English.
Good luck.

Vany

மேலும் சில பதிவுகள்