இலங்கை தோழிகள் சங்கம்

இலங்கைத்தோழிகளா என் அன்பு உறவுகளா அரட்டை அடிக்க வாங்கோ வாங்கோ வாங்கோ

ஜீவி கவலப்படாதீங்கோ.விடிவு வரும்.95இல் நீங்கள் சொன்ன அதே பாதையில் அதே நாளில் நாங்களும் குடும்பத்துடன் மூச்சுத்திணறினோம்.அதில் நிறய குடும்பங்கள் பெற்றோரை பிள்ளைகளை சின்னக்குழ்ந்தைகளை நெரிசலில் தொலைத்துவிட்டு கதறிக்கதறி சிதறி ஓடியதும் அவலக்குரல்களும் பசியும் தாகமும்.இப்போது நினைத்தாலும் உடம்பெல்லம் நடுங்குது ஆனால் அதில் எத்தனை ஆயிரம்பேர் சிக்கினோம் என்று யாபகம் இல்லை.

அதிரா எனக்கு அரசியலும் தெரியாது எலக்சனிலும் நிக்கவில்லை ஓண்டும் தெரியாத கூமுட்டையாகிய என்னை எப்படி நீங்கள் பார்லிமன்ட் போகச்சொல்லி கேக்கலாம்.பள்ளிக்கூட மீற்ரிங் எண்டாலே எனக்குப்பயம்.காயத்திரியையும் குட்டி ஆர்த்தியையும் பார்க்கச்சொன்னது ok.

நர்மதா.. அம்மா... நர்மதா.அன்பர்களே நண்பர்களே நர்மதாவை இங்கு காணவில்லை.கண்டவர்கள் உடனே அறியத்தரவும்.

ஈழவன் அண்ணா ஈழவன் அண்ணா எங்கள் உடன் பிறப்புகள்படும் வேதனைகளை நாங்கள் உணர்ந்தவர்கள் மட்டுமல்ல அனுபவித்தவர்கள்தாம்.ஒவ்வொரு நாளும் தாயகத்தில் என்ன நடக்கிறது என்று அறியாமல் நித்திரைக்குச்செல்லும் புலம் பெயர்தமிழர்கள் எனக்குத்தெரிந்து யாருமில்லை.இந்தப்பெயருக்காக நீங்கள் கவலைப்படவேண்டாம்.கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கும் எம் உறவுகளின்நிலைதான் தினமும் எங்கள் மனதில் தோன்றும் படங்கள். தமிழீழத்தில் கொண்டாடிய 1வது மாவீரர் தினத்துக்கு என் குடும்பத்தினரை அழைத்தார்கள்.நான் அதில் பங்கு கொண்டேன்[12வயசிருக்கும்] இன்றுவரை நான் யாருடனும் பகிர்ந்து கொண்டது கிடையாது.அதை ஒரு விபரிக்க முடியாத வேதனையாகவே மனதில் பூட்டி வைத்திருந்தேன். கல்லறைமுன் கதறாமல் கண்ணீர் சிந்திய மவுனஅஞ்சலி....நீங்கள் சொன்னபின் தான் மற்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று என்று எனக்கு தோன்றுகிறது.

அனைவரும் நலமா?
நான் இங்குதான் இருக்கிறேன் சுரேஜினி. உங்கட கவிதை அங்கத்தைய நிலமைய சொல்லுது. நாங்களும் 95 இடப்பெயர்வில் அம்பிட்டனாங்கள்தான். அதற்கு முன்னரும் பல தடவை. விக்கிரமாதித்தன் போல காடாறு மாதம் வீடாறுமாதம் போலதான் வாழ்க்கை. நாங்கள் யாழ் நகரில் இருந்ததால அடிக்கடி இடப் பெயர்வுதான். ஒவ்வொரு முறையும் திரும்பி வரும்போது வீடு அரைவாசி இருக்காது. அதைவிட தெரிந்தவர்களின் சாவுச் செய்திகள்.சொல்லி விளங்காது. அனுபவித்தவர்களுக்கு தெரியும். வேறு என்ன சொல்ல........

அன்பின் சுரேகா, வாழ்த்துக்கள். கவனமாப் போய் வாங்கோ. எல்லாம் நல்லபடியாய் நடக்கும்.
-நர்மதா :)

ஆகா நானும் அதே கட்சிதானுங்கோ....
நீங்கள் நடக்கேக்கை நானும் தான் நடந்தேன், ஒரு மணித்தியாலத்தில் சைக்கிளில் போறதூரத்தை ஒரு நாள் முளுக்க நடந்து முடித்தோம், ஒரு கட்டத்தில் தண்ணி தாகம் தாங்க முடியாமல் எனக்கு மயக்கமே வந்திட்டுது, மயக்கத்தைத் தீர்க்க ரோட்டின் பக்கத்தில் ஓடிய வாய்க்கால் தண்ணியைத்தான் அள்ளிப் பருக்கினார்கள்,,, பின்னர் பார்த்தால் கொஞ்சத் தூரத்தில் அதே வாய்க்கலில் ஒரு சாரை செத்துக்கிடந்தது, ஊரில் இருக்கிறபோது அந்த அருமையான கிணற்றுத் தண்ணியையே குடிக்க விடமாட்டினம், சுடவச்சு கூசாவில் ஊத்தியிருக்கு அதைத்தான் குடிக்கவேணும் என்பினம், அப்படி இருந்திட்டு இப்படியும் அனுபவித்தது தான்... எனக்கு எதையுமே எழுத விருப்பமில்லை, ஆனால் எல்லோரும் சொல்லேக்கை, தானாட விட்டாலும் தசையாடும் என்பதுபோல் நிறைய எழுதிப்போட்டன், நர்மதா சொன்னதுபோல் எவ்வளவோ இருக்கு எதையுமே மறக்கவில்லை, எப்படித்தான் மறக்க முடியும்.ஏதாவது தப்பாக எழுதியிருந்தால் மன்னித்துவிடுங்கள்...

சுரேஜினி, இப்பத்தான் புரியுது.... 95 இல் நடக்கேக்கை, இதே போல் தான், வாய் மூடாமல் ஒரு பிள்ளை கதைத்துக்கொண்டே போனா... அது நிட்சயம் நீங்கள் தான்:)

பாளிமென்டைப் பாருங்கோ என்றால் உடனேயே உயரப் பறக்கிறதோ:)..... சும்ம ஒருதடவை போய்ப் பாருங்கோ... அப்படியே பின்பக்கம் போனால் நல்ல குண்டுப் பூனைகள் மியா.... மியா... எனக் கத்திக்கொண்டு நிற்பினம் மறக்காமல் சிக்கின் பிறியாணி கொண்டுபோய்க் கொடுங்கோ...

சுரேகா, விரைவில் உங்கள் நல்ல செய்தியை எதிர்பார்க்கிறோம், கவனமாய்ப் போய்வாங்கோ... ஓல் த பெஸ்ட்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தலைப்பை மாற்றி அமைதமைக்கும் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.

"பிள்ளையின் வளர்ச்சி கண்டு தாயழுதாள் ஏனோ?
பிடித்துதின்னும் அரக்கர்களின் பயம்தானோ"

அருமையான வரிகள் சுறேஜினி..... இன்று நடைபிணம் என்பதின் உண்மையான அர்த்தத்தை வடகிழக்கில் தான் உணரமுடியும்.

"ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே"

நல்லபடியா எல்லாம் நட்க்கும் அந்த இறைவனை வேண்டிகிட்டு கிளம்புங்க எல்லாம் நல்லதே நடக்கும்.
சேவ் ட்ரிப்.

எனக்கு இந்த பாஷை ரொம்ப பிடிக்கும் நான் ஹாஸ்டலில் படித்து கொண்டிருக்கும் போது நிறய்ய எனக்கு இலங்கை தோழிகள் தான் எல்லாரும் அவ்வள்வு உதவி +நட்பு என்றும் மறக்கமுடியாத தோழிகள், அதிலும் யாழ்பானத்தை சேர்ந்த கொஞ்சம் தோழிகள் நல்லாவே பழகினார்கள், இப்பவும் என்னுடய்ய நைபர் கூட இலங்கை தான், நல்லவே இருக்கு நிங்கள் எல்லாரும் சேர்ந்து கதைக்கிறது கேட்க்க படிக்க நல்லா இருக்கு. தொடரட்டும்.

நர்மதா,அதிரா, சுரேஜினி,ஜீவிதா,ப்ரியா,வாணி,விஜிtvm அனைவரும் நலமா. நானும் 95ல் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்து ஏழு வருடங்கள் இருந்து 2003ல்தான் கனடா வந்தேன். பார்த்து அனுபவித்த எங்களால் மட்டும்தான் அதை உணரமுடியும்.பிறந்து வளர்ந்த சொந்தமண்ணை விட்டு இங்கு வருவோம் என்று நினைத்துப் பார்த்திருப்போமா

காயத்திரி

மேலும் சில பதிவுகள்