இலங்கை தோழிகள் சங்கம்

இலங்கைத்தோழிகளா என் அன்பு உறவுகளா அரட்டை அடிக்க வாங்கோ வாங்கோ வாங்கோ

அன்பின் காயத்ரி, நீங்கள் கனடாவில் எங்கு இருக்கிறீர்கள்? எனது அம்மா, அப்பா Victoria Park ல் இருக்கிறார்கள்.

vany

always smile

நான் ஒட்டாவாவில் இருக்கின்றேன்.பிள்ளைகள் எப்பிடி இருக்கிறாங்க. இரண்டு பேர் தங்களுடைய வயதைச் சொல்லிட்டினம் கவனிச்சனீங்களா

காயத்திரி

காயத்ரி, பிள்ளைகளுடன் நேரம் போவதே தெரியாது. இப்ப தான் வேலை எல்லாம் முடித்தேன். பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லை. அம்மாவையும் வருடத்தில் 2 தரம் தான் போய் பார்ப்பது. சில நேரம் ஒரே வெருப்பாக இருக்கும், ஆனால் என்ன செய்வது சொந்த நாடு இல்லாவிட்டால் இப்படித்தான் .
வாணி

always smile

உண்மைதான் எனக்கும் சில நேரத்தில் இப்படித்தான் இருக்கும் ஐந்து வருடமாக அம்மா,அப்பா கூடப்பிறந்தவர்களைப் போய்ப் பார்க்காமல்,மகளை கொண்டு போய்க்காட்டாமல் என்ன வாழ்க்கை இது என்று.என்ன செய்வது.
பிள்ளைகளுக்கு என்ன சுகமில்லை.இப்பொழுது காலநிலை வேறு சரியில்லை.மகள் இப்பத்தான் நித்திரை விட்டு எழும்பி இருக்கிறா. இனி விடமாட்டா.
காயத்திரி

ஜெயந்திமாமி இப்போதான் ஒரு பதிவில் பார்த்தேன் தலைப்பை மாற்ற உதவியதற்கு கோடிநன்றி .and நன்றிஅட்மின் அண்ணா.

nanum elankaiyai (yalpaNam) saynthavaL .eppothu jayrmaneyel erukeren ,ennaiyum unkaludaiya tholeyaka sayrththukoLvirkala .

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

நண்பி டுஸ்யந்தி வாங்கோ.இருங்கோ.டீ போட்....மன்னிக்கவும் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாரன். அதிராவப்பாத்தீங்களே சின்னப்புள்ளத்தனமா பூனை மியா மியா எண்டு கத்துமாம்.பிரியா நீங்க பிசியா? வாணி பிள்ளைக ளுக்கு சுகமோ?காயத்திரி யாரு வயச மறச்சது இந்தப்புரட்டாசியோட எனக்கு 18 முடியுது.எங்க ஜீவியக்காணேல்ல பாவம் எங்கயாவது மண்விளையாடிட்டு இருக்கா போல. நர்மதா மாம் பருத்தித்துறை வடை அதாவது தட்டைவடை செய்யுரது எப்படி எண்டு அருசுவைல போடுங்கோ.நான் செய்து பாத்தனான் பாக்க தட்டைவடை மாதிரியே இருந்திச்சு சாப்பிட்டுப்பாத்தா இது அதில்ல.

ஹய்!
துஸ்யந்தி வாங்கோ. நீங்களும் எங்களின் தோழி தான். சுரேயினி தந்த தேத்தண்ணி எப்படி இருந்தது? சுரேயினி மண்விளையாடுறத விட்டிட்டு உங்களோட கதைக்க வந்திற்றன்.

அடடா ஜீவி வெள்ளிக்கிழமை அல்லவா வீடு கிளீன் பண்ணீட்டு இப்பத்தான் உங்கட பதிவப்பாத்தனான் .ஜீவி ஏன் நிறய தமிழாக்கள் தாங்கள் தமிழர்கள் மாதிரியே காட்டிக்கொள்ளாமல் வாழ்கிறார்கள்.அதில் என்ன பெருமை இருக்கு அவர்களிடம் கேக்க முடியாதல்லவா அதுதான் நண்பிகளிடம் கேட்டேன் .அவயள் இருக்கட்டும் நீங்க வாங்கோ நாங்கள் தமிழ் வளர்ப்போம்

நீங்கள் சொல்வது சரி.நானும் கவனித்திருக்கின்ரேன்.நிறையப்பேர் இப்படித்தான் இருக்கினம்.தாயகத்தில் இருக்கும்பொழுது நன்றாகத் தமிழ் கதைத்த குழந்தைகளை இங்கு வந்ததும் ஆங்கிலத்திற்கு மாற்றிவிடுவது பெற்றோர்தான். அதுவரைக்கும் தமிழ் கதைத்துக் கொண்டிருந்துவிட்டு எங்களுடைய ஆக்களைக் கண்டவுடனெயெ ஆங்கிலத்திற்கு மாறுகின்ற ஆக்களும் இருக்கினம்.ஆர்த்திக்கு கீழவிழுந்ததில பல்லு சின்னதா உடைஞ்சிட்டுது.ஒரு வேலையும் செய்ய விடமாட்டா.நித்திரை விட்டு எழும்பிட்டா.பிறகு வாறன்

மேலும் சில பதிவுகள்