இலங்கை தோழிகள் சங்கம்

இலங்கைத்தோழிகளா என் அன்பு உறவுகளா அரட்டை அடிக்க வாங்கோ வாங்கோ வாங்கோ

வாங்கோ துஷ்யந்தி, இங்கே எழுத்துதவி என கீழே இருக்கிறது அதை கிளிக் பண்ணினால், ஆறுதலாக வாசியுங்கோ உடனேயே தமிழில் ரைப் பண்ணலாம்.

சுறேஜினி, பார்த்தீங்களா, உங்கள் பெயரை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறேன் அப்போ பூனை கத்துவதைப் பிளையாக எழுதுவேனோ? நீங்கள் நினைக்கிறீங்கள் கனடா எண்டதால பூனை ஆங்கிலத்தில் கத்துமென்று... அதுதான் தப்பு... மனிஷர் தான் அப்படி மற்றவை எல்லாம் ஒரே மாதிரித்தான் தெரியுமோ? வெள்ளையர்களின் குழந்தை அழும்போது கிட்டக் காதைக் கொடுத்துப் பாருங்கோ. அம்மா என்றுதான் அழுகிறார்கள்... கவனம் காதை ஆகவும் கிட்ட கொண்டுபோய் அடிவாங்கிட வேண்டாம்...

காயத்ரி ஏன் மகளுக்கு பல் உடைந்துவிட்டதோ? கவனம் பால் பல்லுத்தானே பெரிதாக தாக்கம் இருக்காது, ஆனால் அழுதால் ஒருதடவை டொக்டரிடம் காட்டினால் நல்லது.

அறுசுவையில் தீபாவளித் தலைப்பு போட்டு வாழ்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் நேரமிருக்கவில்லை அப்போ, இப்போ தேடிக் கழைத்துவிட்டேன் எங்கே எனத் தெரியவில்லை.. நாளைதான் நேரமுள்ளபோது ஆறுதலாகத் தேடவேண்டும்... அனைவருக்கும் எனதினிய தீபாவளி வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பின் சுரேஜினி,அதிரா,ஜீவி, ப்ரியா, காயத்ரி, வாணி, துஷ்யந்தி அனைவரும் நலமா?
சுரேஜினி எங்க போனாலும் எங்கட தமிழ் ஆக்கள்தான் ஆங்கிலத்தில அளக்கிறவை :) அதில என்ன இன்பமோ .....:)
http://www.arusuvai.com/tamil/node/3364 இந்த தொடுப்பில் திருமதி. செல்லி, இலங்கை அவரின் பருத்துறை வடை செய்முறை உள்ளது. நான் மிளகாய் பொடிக்கு பதில் மிளகாய அரைத்து போடுறனான். சிறிது உள்ளியும் சேர்ப்பன். நல்லா இருக்கும்.
வாங்கோ துஷ்யந்தி. உங்கட இடம் என்ன? கோண்டாவிலுக்கு கிட்ட இருக்கா?
அதிரா, இணுவிலில் எனது நண்பிகள் பலர் இருந்தவை. அதில் ஒருவரின் வீட்டில் நிறைய விதமான ரோஜா பூந்தோட்டம் இருந்தது.( farm வைத்திருந்தவை எண்டு நெக்கிறன்) அவ ஒவ்வொரு நாளும் பள்ளிகூடத்துக்கு பூ கொண்டு வந்து எங்களுக்கெல்லாம் தாறவ.:)
வாணி பிள்ளைகளுக்கு இப்ப சுகமா?
காயத்ரி மகள் ஸ்னோக்க விளையாடினவவோ? கனடால ஸ்னோ எண்டு நண்பி ஒராள் சொன்னா.
-நர்மதா :)

இனிய வந்தனங்கள், நர்மதா, சுரெஜினி, அதிரா, காயத்திரி, என்ன நலமா? 2 குட்டிகளோட மட்டுமில்ல, கொலிஜ்க்கு போறனான். மன்னிக்கவும். நேரம் காணாது. உங்கட எல்லார்ட குட்டிகள் என்ன செய்யினம்.மீண்டும் சந்திப்போம். நன்றி.

அன்புள்ள சுரேயினி, காயத்ரி, நர்மதா, துஷி நலமா?இன்று என் மகளை மருத்துவரிடம் கூட்டிக் கொண்டு போனேன். இரவு ஒரே அழுகை. இங்கு மருந்து தரவே மாட்டார்கள்.

எங்களுடைய ஆட்களுக்கு எப்போதும் ஒரு வறட்டு கௌரவம். அது தான் அப்படி ஆங்கிலத்தில் கதைக்கிறார்கள்.கோயிலுக்கு வந்தாள் அவர்கள் செய்யும் அலம்பல் தாங்காது.
vany

அன்புத் தோழிகளே, தமிழகத்தில் எமக்காக குரல் கொடுக்கும் வை.கோ, இயக்குனர்கள் சீமான், அமீர், ஆகியோரின் கைது, மிகவும் மனதை நெருடுகின்றது, தொடரும் ஜெயலலிதா, மற்றும் சிலரின் தூண்டுதல்கள், அவர்களின் அறிக்கைகள் எம்மையும், எமது மக்களின் மனங்களையும் மேன்மேலும் புண்பட செய்கின்றன. இங்கும் சிலரின் விஷமத்தனமான பிரச்சாரங்கள் துளிர் விட ஆரம்பித்துள்ளன. அரசியல் என்பதை விடுத்து மனித நேயம், மனிதாபிமானம் இவர்களுள் வளருமா. நன்றி.

என்ன சுரேஜினி, எங்களுக்கு தேத்தண்ணி இல்லையா. உங்கட தேத்தண்ணிக்கு தான் காவலிருக்கிறன். என்ன குடுப்பியளோ , நர்மதா, அதிரா, காயத்திரி, சுரேஜினி, அனைவருக்கும் இனிய திபாவளி வாழ்த்துக்கள். நர்மதா உங்கட மகளுக்கு தலை தீபாவளி (பகிடிக்கு ) கோபம் வேண்டாம்.

அன்பின் சுரேஜினி,அதிரா,நர்மதா,சுரேக்கா,ப்ரியா, காயத்ரி, வாணி, துஷ்யந்தி எல்லாருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள். எனது விலாசம் தாறன். பலகாரங்களை பார்சல் பண்ணி விடுங்கோ:)
சுரேயினி, நீங்கள் சொல்வது சரி தான். தமிழில் கதைக்க ஏன் வெட்கப் பட வேணும். "தமிழுக்கும் அமுதென்று பெயர்; இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்."

அதிரா,நர்மதா,சுரேக்கா,ப்ரியா, காயத்ரி, வாணி, ஜீவி,துஷ்யந்தி,குட்டீஸ் தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி வாழ்த்துக்கள். ஜீவி அர்ஜீன் அஜித்.ஜெலலிதா மாதிரி ஆக்களின்ர மனிதாபிமானத்தை நினைச்சுப்பாக்க மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கிறமாதிரி இல்லயா?அயலவன் ஆபத்தில் இருக்கும்போது நேசிக்க மறுக்கும் அதுவும் அவன் உயிருக்குப்போரடிக்கொண்டிருப்பதுதெரிந்தும் இவர்கள் ஏன் இப்படி கல்நெஞ்சத்துடன் வார்த்தைகளைப் பிரயோகிக்கிறார்கள். கால் நூற்றாண்டுக்கும் மேலாக கதறும் எங்கள் குரல் பலரின் காதில் இன்னும் விளாமல் போவதற்கு எங்கள் மக்கள் செய்த பாவமென்ன?சரி சீமான் ,வைக்கோ போன்ற ஆயிரக்கணக்கான் நல்லுள்ளங்களை நினைத்து மனதை தேற்றிக்கொள்வோம்.கொஞ்சம் பொருங்கள் எங்கள் உணர்வுகளை மதிக்கும் எங்கட இந்தியத்தோழியளுக்குதீபாவளி வாழ்த்துச்சொல்ல வேணும் மீண்டும் சந்திப்போமா?

அது தானே, பிடிக்காவிட்டால் தாங்கள் அதில் பங்களிக்காம விடலாம். ஏன் மற்றவர்களை தடுக்கிறினம் என்று தான் தெரியேல்ல. ஆனால் கடு மழையிலும் தென்னிந்திய உறவுகள் எவ்வளவு பேர் எங்களுக்காக குரல் கொடுத்தார்கள். அந்த உறவுகள் எப்போதும் எம் மனதில் இருப்பார்கள்.

முதல்ல தாங்கள் எதுக்கு ஆதரவு தரவேணும் எண்டு சொன்னவை இப்ப தீபாவளிக்கு வரப்போற தங்களுடைய படம் ஒட வேண்டும் என்டதற்காக இப்பதாங்கள் ஆதரவு தருவதாக அறிவிச்சிருக்கினம்.ஏன் இப்பிடி மாறி மாறிக் கதைக்கவேணும்.

மேலும் சில பதிவுகள்