நேந்திரன் சுக்கு வரட்டி

தேதி: October 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நேந்திரன் காய் - 2
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
வெல்லம் - 1 கப்
சுக்குத்தூள் - 1 டீஸ்பூன்


 

நேந்திரன் காயை 90% காயாக பார்த்து வாங்கவும்.
தோலுரித்து கத்தியால் குறுக்காக நான்கு பாகங்கள் ஆக வெட்டி ஒரு இன்ச் நீளத்திற்கு நறுக்கிக்கொள்ளவும்.
2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து வெல்லத்தை கரைய விட்டு கெட்டி பாகு வைக்கவும். சுக்குப்பொடி சேர்க்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் நறுக்கிய காயை சிறிது சிறிதாக போட்டு மொறுகலாக பொரிக்கவும்.
சூடாக இருக்கும் பொழுதே வெல்லப்பாகில் போட்டு கிளறி ஆற விடவும்.


வெல்லப்பாகு கெட்டியாக இருக்க வேண்டும். வறுத்த காயை சேர்த்துக் கிளறினால் பாகுடன் நன்கு ஒட்டி உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.விரும்பினால் ஏலப்பொடி சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்