எப்படி இருக்கு பக்கோடா யாராவது செய்தால் அனுப்புங்கோ

ஒரு இணையத்தளத்தில் சுட்டது சும்மா வீட்டில இருக்கிறாக்கள் செய்யுங்கோ[paraparappu.com]
என்னிடம் ஏதும் கேள்வி கேட்கப்படாது ஏனென்றால் எனக்கு தெரியாது சமையல்

எப்படி இருக்கு பக்கோடா யாராவது செய்தால் அனுப்புங்கோ

வெ‌ண்டை‌க்கா‌ய் பகோடா செ‌ய்வது ‌மிகவு‌ம் எ‌ளிது. ஆனா‌ல் ஒரு முறை ரு‌சி‌த்து‌வி‌ட்டீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் செ‌ய்‌வீ‌ர்க‌ள். அத‌ற்கான கு‌றி‌ப்பு இதோ.

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் - 1/4 கிலோ
நல்லெண்ணெய் - பொ‌றிப்பதற்கு

கலவை தயாரிக்க :

கடலை மாவு - 2 மேஜைக்கரண்டி
அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி
மக்காச்சோள மாவு - 1 மேஜைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ¾ தேக்கரண்டி
அஜினோ-மோட்டோ - 1/4 தேக்கரண்டி

செய்முறை :

வெண்டைக்காயை கழுவித் துடைத்து விட்டு ‌சிறு ‌சிறு து‌ண்டுகளாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் கடலை மாவு, அ‌ரி‌சி மாவு, ம‌க்கா‌‌ச்சோள மாவுட‌ன் தேவையான அளவு உ‌ப்பு, ‌மிளகா‌ய்‌த் தூ‌ள், அ‌‌ஜின மோ‌ட்டா ஆ‌கியவ‌ற்றை‌ச் சே‌ர்‌த்து ‌சி‌றிதளவு ‌நீ‌ர் ‌வி‌ட்டு கலந்து கொள்ளவும்.

நறு‌க்‌கிய வெண்டைக்காயுட‌ன் கலந்து வைத்த மாவை அதன் மேல் தூவி பிசறி விடவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் நெல்லிக்காயளவு புளியை அதில் போட்டு நன்றாக கருப்பாக பொரிந்ததும் எடுத்து விடவும்.

‌பிறகு கலவையுட‌ன் சே‌ர்‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் வெண்டைக்காயை கைகளால் எடுத்து பகோடா போல உதிரியாக எண்ணெயில் தூவவும்.

‌தீயை குறைவாக வை‌த்து ந‌‌ன்கு வேகு‌ம் வரை கா‌த்‌திரு‌ந்து ‌‌பிறகு ‌திரு‌ப்‌பி‌ப் போடவு‌ம். பொ‌ன்‌னிறமானது‌ம் எடு‌த்து‌விடவு‌ம்.

எ‌ண்ணெ‌ய் உ‌றி‌ஞ்சு‌ம் பேப்பரில் வைத்து எண்ணெய் உறிஞ்சியப் பிறகு பரிமாறலாம்.

புளியை எண்ணையில் போட்டு எடுப்பது எதற்கு?.கண்டிப்பா இது நன்றாக தான் இருக்கும் என்று படிக்கும்போதே தெரிகிறது

தளிகா, புளியை எண்ணெயில் சிறிது போட்டால் எண்ணெய் குடிக்காது என்று சொல்வார்கள். என் அம்மா ஒரு சின்ன தம்ளரில் தண்ணீர் ஊற்றி காஸ் அடுப்பின் பின்னால் வைப்பார்கள். கேட்டால் தண்ணீர் குடிக்காது என்று சொல்வார்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மாமி,புளி காய்ச்சல் செய் முறை உங்கள் குறிப்பில் தேடினேன்.கிடைக்க வில்லை.அது எப்படி செயவது?உங்கள் குறிப்பில் போடுங்களேன்.புளிகாய்ச்சல் உங்களப்போலவே சூப்பர் மாமி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா, உங்களுடைய மற்றும் உங்கள் தங்கையின் சிரித்த முகம் கண்ணிலேயே இருக்கு. மீண்டும் மீண்டும் பார்க்க, பேசத்தோன்றும் உங்கள் குடும்பம் எனக்கு ரொம்பப் பிடித்தது.
ஆமீர் எப்படி இருக்கிறார்?
கொடுத்த குறிப்பையே கொடுக்க வேண்டாம் என்று தேடிப்பார்த்தேன் புளிக்காய்ச்சல் குறிப்பு மனோகரி அவர்கள்
www.arusuvai.com/tamil/nodes/4551
இந்த லிங்க்கில் கொடுத்திருக்கிறார். பாருங்கள்.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்