சுலப கத்தரிக்காய் கொத்ஸு

தேதி: October 20, 2008

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 4
பச்சை மிளகாய் - 4
பூண்டு பல் - 4
புளி - நெல்லிக்காய் அளவு
பெரிய வெங்காயம் - 1 (அரிந்து கொள்ளவும்)
மஞ்சள் தூள் - சிறிது
பெருங்காயத் தூள் - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க :
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


 

கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன், பூண்டு பல், பச்சை மிளகாய், நார் நீக்கிய புளி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் எல்லாம் சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும், இறக்கி வைத்து, சிறிது ஆறியதும், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு போட்டு, வெடித்ததும், நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து, உப்பு போட்டு, இரண்டு கொதி வந்ததும், கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Think Twice before you do!
Thank u so much.i tried this it came out well and i had extra dosas.

Think Twice before you do!

எமிலி, பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி
அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சுலப கத்தரிக்காய் கொத்ஸு நல்ல ருசி...சப்பாத்திக்கும் நல்லா இருந்தது. என்னோட வடநாட்டு நண்பிக்கும் ரொம்ப பிடித்திருந்தது

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கத்தரிக்காய் கொத்ஸு மிகவும் சுவையாக இருந்தது. இலா சொன்னவுடன் நானும் சப்பாத்திக்கு தொட்டுகொள்ள செய்தேன். north indian dishes விட கத்தரிக்காய் கொத்ஸு நல்ல match ஆக இருந்தது மிகவும் நன்றி.

இந்த தருணத்தில் இன்னொன்றும் சொல்ல ஆசை படுகிறேன். உங்களுடைய எழுத்து நடை மிகவும் அருமை. பட்டிமன்றத்தில் நல்ல கருத்துகளை சொல்லி இருக்கிறீர்கள்.நீங்கள் சொல்லும் கருத்துகளுக்கு நான் விசிறி. :)))))

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

இலா,

இந்த முறை என்னுடைய குறிப்புகள் நிறைய செய்து இருக்கிறீர்கள். ஊக்கத்துக்கு மிக்க நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஸ்வர்ணலஷ்மி,

பின்னூட்டதுக்கு மிக்க நன்றி.

பட்டி மன்றப் பதிவுகள் பற்றி பாராட்டி இருக்கிறீர்கள். மிகவும் நன்றி. என்னை விட சீனியர்கள் எல்லாம் இருக்கிறார்கள். மனோ மேடம், திருமதி மனோஹரி, தேவா, ஹேமா,(வயதில் அல்ல, அறுசுவை அரங்கத்தில்), இன்னும் நிறைய தோழிகள், இவர்கள் இன்னும் பிரமாதமாக எழுதுவார்கள். நான் இப்போதுதான் அறுசுவையில் பங்கு பெறுவதன் மூலம் எழுதப் பயிற்சி பெற்றுக் கொண்டு இருக்கிறேன்.

அடிக்கடி feedback தாருங்கள்.தங்களைப் போன்ற தோழிகளின் பின்னூட்டம் எங்களைப் போல எழுத ஆர்வமுள்ளவர்களின் எழுத்தை செம்மைப் படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.

நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலஷ்மி,
சுவையாக இருந்தது. பிடித்திருக்கிறது. குறிப்புக்கு நன்றி. இலாவுக்கும் நன்றி. :)
இமா

‍- இமா க்றிஸ்