கத்தரிக்காய் மசாலா

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - அரை கிலோ
தேங்காய் - அரை மூடி
பெரிய வெங்காயம் - 2
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - அரைத் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

பிஞ்சு கத்தரிக்காய்களாக தேர்ந்தெடுத்து காம்புகளை நீக்கி விட்டு, பின்புறமாக கத்தரிக்காய்களைக் கீறி முழுதாக தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தேங்காயைத் துருவி ஒரு மேசைக்கரண்டி அளவிற்கு தேங்காய்ப்பூ எடுத்துக் கொள்ளவும்.
புளியைக் கரைத்து இரண்டு மேசைக்கரண்டி அளவிற்கு கெட்டியான கரைசல் எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய்ப்பூ, புளிக்கரைசல், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
வாணலியை காய வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடேறியதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
தாளித்தவற்றை கலந்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்த்து, தேவையான உப்புப் போட்டு நன்கு கிளறவும்.
பிறகு இந்த கலவையைக் கீறி வைத்துள்ள கத்தரிக்காய்களுக்குள் நிரப்பவும்.
ஒரு தட்டையான வாணலி அல்லது பானில் 3 மேசைகரண்டி எண்ணெய் விட்டு காய விடவும்.
சூடேறியதும், மசாலா நிரப்பிய கத்தரிக்காய்களைக் காம்பு நீக்கிய பகுதி கீழே இருக்குமாறு பரவலாக அடுக்கி வைக்கவும்.
மசாலா நிரப்பிய பகுதி மேல்புறமாக இருக்க வேண்டும். இத்துடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
மீதி இருக்கும் மசாலாவை கத்தரிக்காயின் மீது போட்டு, வாணலியை மூடி, மிதமான தீயில் வேகவிடவும்.
அவ்வப்போது மூடியைத் திறந்து மெதுவாகக் கிளறிவிடவும். கத்தரிக்காய் வெந்ததும் இறக்கி நன்கு ஆறிய பிறகு, வெளியில் உள்ள மசாலாவை கத்தரிக்காய்களுக்குள் நிரப்பிப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்