சீப்பு முறுக்கு

தேதி: October 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பச்சரிசி - ஒரு கிலோ
பொட்டுக்கடலை - 200 கிராம்
டால்டா - 50 கிராம்
தேங்காய் - ஒரு மூடி(பெரியது)
சீனி - கால் கிலோ
உப்பு - அரை தேக்கரண்டி
எள்ளு - ஒரு மேசைக்கரண்டி


 

பச்சரிசியை கால் மணி நேரம் ஊற வைக்கவும். எடுத்து தண்ணீரை வடித்து விட்டு கால் மணி நேரம் உலர்த்தவும். பின்னர் மெஷினில் கொடுத்து இடித்து வாங்கிக் கொள்ளவும். இடித்த மாவை வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த மாவை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொண்டு 5 முறை சலிக்கவும். சலிக்க சலிக்க மாவு நன்கு மென்மையாகும்.
மிக்ஸியில் பொட்டுக்கடலையை போட்டு பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய தாம்பாளத்தில் சலித்த பச்சரிசி மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவு இரண்டையும் சேர்த்து போட்டு அதனுடன் எள்ளை தூவி கலந்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். இரண்டு முறை இதைப்போல் பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு கிலோ மாவிற்கு 2 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதில் சீனி மற்றும் உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
அந்த பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்து பொங்கும் போது இறக்கி விடவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக்கடலை கலவையை எடுத்துக் கொண்டு அதில் டால்டாவை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அதில் சூடுப்படுத்திய தேங்காய் பாலை ஊற்றி நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
முறுக்கு உரலில் சீப்பு முறுக்கு அச்சை போட்டு அதில் பிசைந்து வைத்திருக்கும் மாவை நிரப்பி ஒரு தட்டில் நீளவாக்கில் பிழியவும். அதை கத்தியைக் கொண்டு துண்டுகளாக போடவும்.
பின்னர் அந்த துண்டினை எடுத்து சுற்றி இரண்டு முனையையும் இணைத்து விடவும். இதைப் போல் எல்லா துண்டினையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் சீப்பு முறுக்கை போட்டு 3 நிமிடம் கழித்து திருப்பி விட்டு 2 நிமிடம் வெந்ததும் எடுத்து விடவும்.
மொறுமொறுப்பான சீப்பு முறுக்கு ரெடி. இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. பவானி அவர்கள். இவர் பலகாரங்கள், வற்றல், வடாம் செய்வதில் கைத்தேர்ந்தவர். இதனையே தொழிலாகவும் கொண்டுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் தீபாவளி பலகாரத்தில் சீப்பு முறுக்கை நிறைய சாப்பிட்டுவிட்டேன்.சூப்பர்.காரத்திற்கு காரச்சேவுதான்,முறுக்கும் பார்க்கவே அழகு, அய்யோ ஜாங்கிரி,இன்னும் வெரைட்டி இருக்கே,கண்ணைக்கட்டுதேப்பா

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.