பால் பணியாரம்

தேதி: October 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பச்சரிசி - ஒரு கப்
உளுந்து - ஒரு கப்
தேங்காய் - ஒரு மூடி
சீனி - கால் கப் + 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 5
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 கப்


 

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும். ஏலக்காயை பொடிச் செய்து கொள்ளவும்.
அரிசி, உளுந்து ஊறியதும் எடுத்து தண்ணீர் வடித்து விட்டு மற்றொரு முறை அலசி விட்டு கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து முழு உளுந்து இல்லாமல் நன்கு மையாக அரைக்கவும்.
முழு உளுந்து அரைப்படாமல் இருந்தால் எண்ணெயில் போடும்போது வெடிக்கும். இட்லி மாவு பதத்தில் நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவலை போட்டு ஒரு கப் தண்ணீரை சுட வைத்து அதில் ஊற்றவும். வெந்நீரில் ஊற வைத்த தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதில் மீண்டும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு பிழிந்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் பாலில் பொடி செய்த ஏலக்காய் மற்றும் சீனியை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி கிள்ளி போடவும்.
உருண்டைகள் வெந்ததும் சிவக்க விடாமல் எண்ணெயை வடித்து விட்டு உடனே எடுத்து விடவும்.
அரைத்து வடிகட்டி வைத்திருக்கும் தேங்காய் பாலில் இந்த சிறிய உருண்டைகளை போடவும். பணியாரத்தை அரை மணி நேரம் தேங்காய் பாலில் ஊற வைத்து பிறகு பரிமாறவும்.
சுவையான காரைக்குடி பால் பணியாரம் ரெடி. இந்த பால் பணியார குறிப்பினை வழங்கியவர் திருமதி. புவனேஸ்வரி ரவிசந்திரன் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இத்தனை தெளிவான குறிப்புகளை தீபாவளிக்கு செய்து பார்க்கும் வகையில் அசத்தலாக வெளியிட்ட அறுசுவை டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. உடம்பு சரியில்லாததால் எந்த பலகாரமும் செய்யக்கூடாது என்று நினைத்திருந்தேன். இப்படி அழகழகான போட்டோக்களையும், குறிப்புகளையும் பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது. இன்றைக்கே கொஞ்சம் கொஞ்சமாக பலகார வேலையை ஸ்டார்ட் செய்ய வேண்டியதுதான். இல்லாவிடில் கனவில் எல்லா ஸ்னாக்ஸும் வந்து படுத்தும். அதுவும் இந்த பால் பணியாரம் பாக்கவே ஆசையா இருக்கு.

இங்கேலாம் தீபாவளி மாதிரியே இல்லை. தூங்கி வழியுது. ஆனால் அறுசுவை பார்க்கும்போது பண்டிகையின் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. ரம்ஜான் நேரத்தில் நோன்புக் கஞ்சிகளின் செய்முறைகளும் மற்றும் சாயங்கால சிற்றுண்டிகளின் செய்முறைகளும், கிறுஸ்துமஸ் நேரத்தில் கேக், பிஸ்கட் என்றும், தீபாவளிக்கு விதவிதமான பலகாரங்கள் என்றும் காலத்திற்கு தகுந்தவாறு சரியாக குறிப்புகளை வெளியிடும் அறுசுவைக்கு மிக்க நன்றி.

அறுசுவை டீமுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ( எல்லாம் இந்தியாவில் பட்டாசு வெடிச்சு கொண்டாடுவீங்க. ரொம்ப பொறாமையா இருக்கு. நம்ம ஊரில் இல்லையேன்னு. ம்ஹூம்). இங்கே மத்தாப்பு மட்டும்தான் கிடைக்கும். பாபு, பாப்பிக்கு எனது தலை தீபாவளி வாழ்த்துக்கள்.

மிகவும் அருமையாக இருக்கின்றது பால் பணியாரம்.

அருசுவைக்கு எல்லொரும் சேர்ந்து ஒரு ஒஹோ !!!! போடுங்கள் இவ்வளவு அருமையனா தீபாவளி பலகாரங்கள் தந்தமைக்கு. உடனே செய்து பார்த்து விட தோன்றுகிறது. வாழ்க வள்ர்க அருசுவை

அறுசுவை டீமுக்கு எஙகளது எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பால் பணியாரம் பார்க்கவே மிகவும் ஆசையாக இருக்கிறது

தேவா!!!
உடம்பு சரியில்லையா.. பார்த்துக்கோங்க அம்மிணி!!! நானும் ரொம்ப சோம்பேறியாதான் இருந்தேன்.. அப்பறம் கொஞ்சமா நெய் மைசூர்பாக்கு கொஞ்சம முறுக்குன்னு லிஸ்ட் அதிகமாகிட்டே போகுது.. நாளை பாதி நாள் லீவு.. பார்சல் எல்லாம் அனுப்பலை.. எல்லாருக்கும் தீபாவளி பலகார போட்டோஸ் அனுப்பறேன்... அட்மின் நமக்கெல்லாம் அவர் தலை தீபாவளிக்கு கொடுத்த மாதிரி....

அறுசுவை டீமுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... ஒரு போட்டோ போடுங்கப்பா!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பால் பணியாரம்நல்லா இர்க்கு. சைது பார்க்கிரன்.
நன்றி.
WISH YOU HAPPY DEEPAVALI. TO ALL

பால் பணியாரம்நல்லா இர்க்கு. சைது பார்க்கிரன்.
நன்றி.
WISH YOU HAPPY DEEPAVALI. TO ALL

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?