மைதா டைமண்ட் பிஸ்கட்

தேதி: October 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

மைதா மாவு - கால் கிலோ
சீனி - 100 கிராம்
டால்டா - 50 கிராம்
சோடா உப்பு - 1 சிட்டிகை
உப்பு - 1/4 தேக்கரண்டி


 

மைதா மாவை சுத்தம் செய்து சலித்து எடுத்துக் கொள்ளவும். டால்டாவை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சீனியை போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடி செய்த சீனி இரண்டையும் போட்டு ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் மாவில் உருக்கிய டால்டாவை ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.
கால் கப் தண்ணீரில் உப்பு மற்றும் சோடா உப்பை போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.
மாவு நன்கு கையில் ஒட்டாமல் மிருதுவான பதம் வரும் வரை பிசையவும். பிசைந்த மாவை சாத்துக்குடி அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அதில் ஒரு உருண்டையை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும். நன்கு மெல்லியதாக தேய்க்காமல் சற்று தடிமனாகவே தேய்க்கவும். அதை கத்தியை வைத்து டைமண்ட் வடிவில் துண்டுகள் போடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் செய்து வைத்திருக்கும் பிஸ்கட் துண்டுகளை போடவும். பின்னர் திருப்பி விட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் பொன்னிறமாக இருக்கும் போதே எடுத்து விடவும்.
எளிதில் செய்யக்கூடிய சுவையான டைமண்ட் கேக் தயார். அறுசுவை நேயர்களுக்காக இந்த குறிப்பினை செய்முறை விளக்கத்தோடு வழங்கியவர் திருமதி. லலிதா கண்ணன் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதில் டால்டாக்கு பதில் நெய் அல்லது பட்டர் யூஸ் பண்ண முடியுமா? முடியும் எனில் அளவு சொல்ல முடியுமா? இதை நாளை செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்..நன்றி லலிதா மேடம்..

லலிதா அண்ணி
மைதா கேக்கு செய்தேன் நல்லா வந்தது.
ரொம்ப நன்றி.

hi
today i tried this.. came out nicely..i used all purpose flour..so it s soft inside and crispy outside..thanks for ur receipe

ஹாய்
நான் இலங்கையைச் சேர்ந்தவல்.
மைதா மா என்ரால் என்ன என்டு தயவு செய்து சொல்லுங்கலேன்