இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வருக வருக தீபாவளி வருக!
புன்னகை மேவிடும் புதுவாழ்வு தருக!

சுமஜ்லா பிடியுங்கள் என் புன்னகையை உங்கள் கவிதைக்கு பரிசாக (நம்ம கணவர்கிட்ட இதுக்கு value ஜாஸ்திங்க )... கவித்துவமான தீபாவளி வாழ்த்துக்கு நன்றி...

கவிதை அருமை :-) இதுக்கு ஏதானும் Copyrights இருக்கான்னு சொல்லுங்க.. நீங்க ok சொன்னா இந்த கவிதைய என் friends க்கு மெயில் ல தீபாவளி பரிசா பார்சல் பண்ணிடுவேன் :-) உங்க பெயர் போட்டுதாங்க ... :-)

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

தங்களிடம் இருந்து இப்படியொரு கவிதையை கண்டு ஆச்சர்யம் தான் போங்க.இதுக்கு அறுசுவைக்கு நன்றிகள் பல.இது சமத்துவ தளமாய் அமைந்ததற்க்கு எல்லா சகோதரிகளுமே காரணம்.சுஹைனா தங்கள் வாழ்த்துக்கும்,கவிதைக்கும் மிக்க நன்றிபா.

தேவை அனைத்தும் நிறைவேறிடவே
தென்றல் வசந்தம் தேனூறிடவே,
நிறைவாய் வாழ்வில் விளக்கேற்றிடவே
நிதமும் இனிமை நமை சூழ்ந்திடவே.....
உங்க கவிதையில் இருக்கிற மாதிரி நடக்கனும்னு இறைவனை வேண்டுகிறேன்.

அதான்பா உங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டு.யார் தொடங்குறாங்களோ இல்லையோ உங்களுக்கு த்ரெட் தொடங்கி வாழ்த்தனும்னு தோணுச்சு பாருங்க,உண்மையில் சந்தோஷமா இருக்குபா.சுஹைனாவின் தீபாவளி பரிசா இந்த கவிதையை மற்ற தோழிகளுடன் share பண்ணிக்கிறேன்!!!இருமல் சரியானவுடன் ஸ்வீட் சாப்பிடுங்க,பார்ஸல் வந்துட்டே இருக்கு பாருங்க...

http://www.youtube.com/watch?v=GbU4IAIcLl8

http://www.youtube.com/watch?v=5phDlQIOfls&NR=1(இந்தளவுக்கு அழகாக நாம் பாடியதுண்டா?)

தளிகா:-)

பாட்டும் அழகு. குழந்தையும் கொள்ளை அழகு.
மைக் :-) பிடிச்சிருக்கற அழகே அழகுதான்

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சூப்பர்மா அந்தக் குழந்தை என்ன அழகா பாடுது. பிள்ளையும் ரொம்ப க்யூட்டா இருக்கா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அறுசுவை தோழியர், தோழர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

கவிதாயினி சுஹைனா சென்னைக்கு கெட் டு கெதருக்கு வந்துடுங்க. ஸ்வீட் கொடுக்கறோம்.

தனிஷா உங்களைப்பார்த்துட்டேன். அழகு குட்டிப்பாப்பாவை அழ வெச்சு போட்டோ எடுத்துட்டீங்களே.

என்னுடைய அக்காவுக்கு சஷ்டியப்தபூர்த்தி (அக்கா கணவருக்கு 60 வயது). அதனால் எனக்கு அறுசுவைக்கு 4 நாட்கள் லீவு வேண்டும். முடிந்தால் சனியோ, ஞாயிறோ வருவேன். இல்லாவிட்டால் செவ்வாய்க்கிழமைதான்.

அசரவைக்கும் அறுசுவை முகப்பு. அட்மினுக்கு ஜே.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

அறுசுவை நண்பர் எல்லோருக்கும் இனிய திபாவளி நல்வாழ்துக்கள்.

அறுசுவையின் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.எல்லாரும் என்ன என்ன பலகாரம் செய்து,பட்டாசு வெடித்து எப்படி தீபாவளியை கொண்டாடினீங்கன்னு வந்து சொல்லனும். பாபு அண்ணா பலகாரங்கள் போட்டோஸ் எல்லாம் முகப்பில் போட்டு அசத்தீட்டீங்களே.அறுசுவை கல கலக்குது முன்னைவிடவும்.மேலும் அறுசுவை சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

அன்புடன் கதீஜா.

செய்யது கதிஜ நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் பதில்
சொல்லவில்லை ஏன்

மேலும் சில பதிவுகள்