இனிப்பு கிச்சடி.

தேதி: October 26, 2008

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறுபருப்பு - 1கப்
பாசுமதி அரிசி ௧/2 கப்
சீனி - 1 கப்
தேங்காய் பால் - முதல் பால்- 1 கப், இரண்டாம் பால் ௨2 கப்
ஏலக்காய் 3
நெய் - 100 கிராம்
உப்பு - 1சிட்டிகை


 

முதலில் சிறுபருப்பை லேசாக வறுத்து கழுவிக்கொள்ளவும்.
அரிசியை மிக்ஸியில் ரவை போல் உடைத்து கழுவிக்கொள்ளவும்
இரண்டாம் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து லேசாக சூடானதும் அரிசியை போட்டு வேகவைக்கவும்
அரிசி பாதி வெந்ததும் பருப்பை போட்டு வேக வைக்கவும்
அரிசியும்,பருப்பும் நன்றாக குழைந்த்து, இறுகி வரும் போது சீனியை சேர்த்து கிண்டி கொண்டே இருக்கவும்.அடிபிடித்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும்
சீனி கரைந்து ஒன்றாக சேர்ந்த்தும்,பாதி அளவு நெய்யை ஊற்றி முதல் பாலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்
ஒரு சிறிய பேனை அடுப்பில் வைத்து மீதி நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரி ஏலக்காயை தாளித்து கிச்சடியில் ஊற்றிக் கிளறி விடவும்


மேலும் சில குறிப்புகள்