இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2

சகோதரிகளே இங்கே வாருங்கள்

இமா கோவிக்காதேங்கோ.பேய்க்குட்டிகளெல்லாம் நேற்று சரியான பிஸி.நானும் ஏமாந்து போனேன் என் வீட்டுக்கு போனதடவை வந்து சொக்லட்பாக்ல எல்லாம் சேர்ந்து கையை விட்டு கொட்டி பெரிய ஆர்வமா வாங்கி வாங்கி சேர்க்கிறார்கள்.எனக்கு அலங்காரம் பண்ணிய அந்த வடிவு வடிவான குட்டிப்பேய்களை நிறைய பிடிக்கும்.

தோழீஸ் என்னிடம் தமிழ் ரீவி சனல் இல்லை.தமிழ்நாட்டில் நடந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் நடிகர்கள் ஆற்றிய உரையை தமிழ்வின் ல் பாத்தேன்.கொஞ்சம் கொஞ்சம்தான் இருக்கு .முழுசா எங்கயாவது பாக்கலாமா நீங்களெல்லாம் எந்த தளத்தில் பாத்தனீங்கள்? தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்கோ

ஜீவி ஓ ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா பேய்க்கே பேய்க்கிலி பிடிக்க வச்சுட்டீங்களா?

அன்புடன் சுறேஜினி ,
நீங்கள் கேட்டது இதில இருக்கு தொடர்ச்சியாக........ http://www.youtube.com/watch?v=FU2MQd5drlE இதில்தான் தொடங்குது பிறகு Related videos என்ற பகுதியிலே இரண்டாவதை தேடி சொடுக்கி பார்க்கவும். அவ்வாறு இரண்டாவது பகுதி வராவிடின்
Part1-Fasting In Protest - Tamil Actors Pledge Allegiance To Eelam Tamils இதை copy செய்து மேலே உள்ள search என்ற பகுதியில் paste செய்து Part1 இல் இலக்கம் ஒன்றை அழித்துவிட்டு இரண்டு என்று type செய்து தேடவும்.இவ்வாறே தொடர்ச்சியாக நீங்கள் விரும்பியதை தொடர்ச்சியாக பார்க்க முடியும். நான் நினைக்கிறேன் 20 பகுதிக்கு மேல் அதில் காணொளி காட்சிகள் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுள்ளது.

"ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே"

அமெரிக்காவின் 44 வது சனாதிபதியாக பாரக் ஒபாமா தேர்வு.
அமெரிக்க வரலாறிலேயே முதலாவது கறுப்பின சனாதிபதி. 205 வாக்கு வித்தியாசத்தில் குடியரசு வேட்பாளர் ஜோன் மக்கைனை வீழ்த்தி சாதனை வெற்றியை ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்

"ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே"

என்னவோ தெரியலை ஒபாமாவைக் கண்டாலே முகத்தில் ஒரு ஒளி தான்...நல்ல பன்பானவர் போலொரு தோற்றம்.சந்தோஷமாக உள்ளது

அனைவரும் நலமா,
அடிக்கடி இந்த த்ரெட்டிற்கு வர முடியவில்லை. :) எல்லாரும் எப்படி இருக்கிறியள்?
அன்பின் இமா, உங்களுக்கு நன்றி ஸ்கிரப் புக் நன்றாக வர வாழ்த்தியதற்கு. ஆற அமர இருந்து செய்ய நேரம் தான் கிடைக்குதில்லை. கொஞ்சம் கொஞ்சமாதான் செய்யுறன்.எனக்கும் முத்திரை, நாணயம், வாழ்த்து அட்டைகள் சேர்க்கும் பழக்கம் இருக்குது. இப்பவும் சேர்க்கிறனான். ஆனால் முன்பு மாதிரி நிறைய தொடர்புகள் எல்லாததால் நிறைய சேர்க்க முடிவதில்லை. இப்ப ஃபிறிட்ஜ் மக்னட்தான் ஒழுங்கா கிடைக்குது. நானே போகும் இடங்களில் நினைவாக வாங்குவதால். :) யாழில் இருந்த போது காணுறதெல்லாம் சேர்ப்பேன். சொப்பிங் பை கூட கசங்காம இருந்தால் எடுத்து வடிவா மடித்து சேர்ப்பேன். அம்மா திட்டுவா குப்பை எல்லாம் சேர்க்கிறன் எண்டு :) O/L மட்டும் டொபி பேப்பர், நெருப்பு பெட்டி கூட சேர்த்தனான். பிறகு விட்டுட்டன்.:)
நீங்களும் கிராஃப்ட் சேயும் போது படம் எடுத்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோ.
-நர்மதா :)

ஹாய் நர்மதா,
உங்கட டேஸ்டும் என்னை மாதிரியே இருக்குது. நானும் டொபி பேப்பர், நெருப்புப் பெட்டி, ஷொப்பிங் பாக், பிளாஸ்டிக் கரண்டி, வித விதமாய்ப் போத்தல்கள் என்று எல்லாம் சேர்ப்பேன். இப்பவும் கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் ஒரு லாச்சி நிறைய வைத்திருக்கிறேன். முன்பு வெடிங் காட்ஸ்ஸும் சேர்ப்பேன். தெரிந்தவர்கள் சாம்பிள் தேடி என்னிடம் வருவார்கள். பிறகு தாங்கள் சேர்த்ததையும் எனக்குத் தருவார்கள். எனக்குப் பிராணிகள் வளர்க்கவும் பிடிக்கும். முன்பு நாய், பூனை, அணில், ஆமை, முயல், புறா, லவ் பேர்ட்ஸ், கிளி, மீன்கள் எல்லாம் இருந்தது. இங்கு மகன் மீனும் ஒரு ஆமையும் வளர்க்கிறார்.
என் கமராவில் ஏதோ பிரச்சினை. போட்டோஸ் நன்றாக வருகுதில்லை. செய்வது எதையும் படம் எடுக்க முடியவில்லை.
நீங்கள் இந்தியா போய் வந்தபிறகு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எனக்கும் போக விருப்பம்.
மகள் எப்படி இருக்கிறா?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நர்மதா,
நேரம் கிடைக்கிறபோது Iris foldings, tea bag foldings பற்றிச் சொல்லுங்கள். நன்றி
இமா

‍- இமா க்றிஸ்

சுரேஜினி, வாணி, காயத்ரி, எப்படி இருக்கிறீர்கள்? அடிக்கடி இங்கு வரமுடியவில்லை.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்