இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2

சகோதரிகளே இங்கே வாருங்கள்

வாணி!
நான் Torontoவில் (North york)இருக்கிறேன். உங்கள் அப்பா, அம்மா எங்கு இருக்கிறார்கள்?

வணக்கம் சுரேஜினி, பதிவு போடமுடியாமைக்கு மன்னிக்கவும். நலமா? நீங்கள் அரியாலையா?. ஊரில இருக்கும்போது நல்லூர் திருவிழா என்றா எவ்வளவு சந்தோசம். அம்மம்மா குழல் சத்தம், கச்சான் கடலை வாசனை ஒரு பக்கம். ஐஸ்கீரீம் கடைகள். தும்புமிட்டாய் தெரியுமா? இந்த நினைவுகளை மறக்கமுடியாது. இந்த நினைவுகளை நான் அடிக்கடி நினைத்துப்பார்ப்பேன். எனது நண்பியுடன்(லண்டனில் இருக்கும்)அடிக்கடி பேசுவோம். இன்னும் நிறைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள ஆசை. தொடந்து எழுதுகிறேன்.அன்புடன் அம்முலு

எனது பெற்றோர் விக்டோரியா பார்க்கில் இருக்கின்றார்கள்.ஒரு அண்ணா ரிச்மன்ட் ஹில்லில் இருக்கிறார். உங்களை பற்றி சொல்லுங்கள்?

vany

சுராஜினி , காயத்திரி , நர்மதா , வாணி , இமா , ஜீவி , அதிரா , பிரியா , அம்முலு , சுரேக்கா . நைவ் , துஷி , ஈழவன் அண்ணா , உங்கள் எல்லோருக்கும் எனது கிறிஸ்மஸ் , புதுவருட வாழ்த்துகள் . அத்துடன் வருகிறவருடம் உங்கள் எல்லோருக்கும் சிறப்பான வருடமாக இருக்க எனது நல்வாழ்த்துகள்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

வேணி னு ஒரு தோழி இலங்கையய் சேர்ந்தவங்களாம்..நார்வே ல இருக்கறவங்க.. ரொம்ப தனிமையா இருக்காம்...கஷ்டமா இருக்குன்னு ஒரு பதிவு போட்டுருக்காங்க..அவங்களையும் உங்க அரட்டைல சேர்த்துப்பீங்களா ?

அவங்க போட்ட லின்க் இதோ http://www.arusuvai.com/tamil/forum/no/9789

நான் வீட்டுக்கு கிளம்பற நேரம்... Bye

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

hello வணக்கம் நீங்கள் இலங்கை என்று இறுக்கு ரொம்ப சந்தோசம் நானும் இலங்கை தான் உன்கலுக்கு திருமணம் ஆகிவிட்டதா குழந்தை இருக்க

hello வணக்கம் நீங்கள் இலங்கை என்று இறுக்கு ரொம்ப சந்தோசம் நானும் இலங்கை தான் உன்கலுக்கு திருமணம் ஆகிவிட்டதா குழந்தை இருக்க

வேணி, வருக, வருக என எல்லோர் சார்பாகவும் உங்களை வரவேற்கிறேன். நான் வாணி, அமெரிக்காவில் இருக்கிறேன். உங்களை ப்ற்றி சொல்லுங்கள்.
வாணி

always smile

வாணி அக்கா வணக்கம் எனக்கு ரொம்ப தனிமையான வாழ்கை அத்துடன் கர்ப்பமாக உள்ளேன் எனக்கு யாரும் இல்லை அறுதலக யாரும் பேசமாட்டாங்களா என்று தவிக்கிறன் உங்களுக்கு குழந்தை இருக்க

இனிமேல் கவலைப் படாமல் இருங்கோ.இந்த மாதிரி நேரத்தில் சந்தோசமாகவ்ல்லோ இருக்கவேணும் நீங்க யாழ்ப்பாணமா?இப்பொழுது உங்களுக்கு எத்தனை மாதம்,உங்களைப்பற்றி விருப்பம் இருந்தால் சொல்லுங்கோ.எனக்கு ஒரு மகள் இருக்கிறா.
காயத்திரி

மேலும் சில பதிவுகள்