இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2

சகோதரிகளே இங்கே வாருங்கள்

வேணி வாங்கோ வாங்கோ.வேணி வாணி யாராவது நல்லநாளாப்பாத்து பேரை மாத்துங்கோ.எனக்கு இப்பவே கண்ணக்கட்டுது.

ஜீவி உடம்புக்கு என்ன ?இப்ப ஓகேவா?

அம்முலு கச்சான் சோளனெல்லாம் சொல்லி என்னக்கூட்டிக்கொண்டுபோய் நல்லூரில விட்டிட்டீங்களே.எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஏழெட்டு நிமிடத்தில் நல்லூருக்குபோய்விடலாம்.விடுவோமா என்ன?இங்கு கச்சான் சோளன் இருக்கிறது ஆனால் வாசனை மட்டும் ஊரில் மட்டும்தான் கிடைக்கும் இல்லயா? அம்முலு எங்களுக்கு உங்கள் எல்லாரோடையும் கதைக்க சரியான விருப்பம் ஏலுமானவரை வந்து கதையுங்கோ.

ஆர்த்தி இருக்கிற கொஞ்சப்பல்லை வச்சுக்கொண்டு ஒரு இடத்தில இருங்கோ குழப்படி செய்யாம ஓகே.

வேணி கவலைப்படாதீங்கோ.நான் இப்போதைக்கு வீட்டில்தான் இருக்கிறேன்.மற்றவர்கள்மாதிரி பெரிய பிஸியில்ல.[நான் இருந்த பிஸி காரணமாக குழந்தை அபோர்ஷனாகியதால் வீட்டில் நிக்கிறேன்]நீங்கள் எங்களோடு தாரளமாக கதைக்கலாம்.

மனம்விட்டுக்கதையுங்கோ. ஒண்டு தெரியுமோ ## நமக்கு வரும் துன்பத்தில் பாதிக்கு மேல் நாமே கற்பனை செய்து கொண்டவைகளே##
கிட்டத்தட்ட உங்கள் நிலையில்தான் நானும் இருக்கிறேன்.நிறைய பேர் இருக்கிறார்கள். கவலையை விடுங்கள்.

எனக்கு இப்போ 3 மாதம் நான் வன்னி neeன்க எந்த இடம் எனக்கு ஒரு அக்கா கனடாவில்த்தான் இருக்கா நானும் ஒரு முறை வந்தனான்

வேணி, முதலில் கவலைபடுவதை விடுங்கள். நானும் உங்களை போல் தான் யாரும் இல்லாமல் இருந்தேன்.இப்போது 2 பிள்ளைகள். எப்படா கொஞ்ச நேரம் தனிய இருப்போம் என்று இப்போ நினைப்பேன்.
சுரேஜினி, நீங்களே எனக்கு ஒரு நல்ல பெயர் சொல்லுங்கள் ( தமாஷ்).உங்கள் பாட்டு கச்சேரி முடிந்து விட்டதா?
துஷி, நலமா. எனது அண்ணியின் பெயரும் துஷிதான்.
அம்முலு எப்படி இருக்கிறீர்கள்?
vany

always smile

வணக்கம் தோழிகளே நானும் இலங்கை தான் புதுஷா உங்களூடன் இணைந்து கொள்ள விரும்புகிரேன்

சுரேஜினி எப்பிடி இருக்கிறீங்கள். நீங்கள் ஸ்ரான்லி கொலிஜிலா படிச்சனீங்கள். வேணி வன்னியில் நீங்கள் எந்த இடம்.நானும் வன்னியில் எட்டு வருசம் இருந்தனான்.கடைசியாக விசுவமடுவில் இருந்தனான். அம்முலு, ஜீவி,துஸிய்ந்தி, துஸி எப்பிடி சுகமா?வானதி வாங்கோ. எப்பிடி இருக்கிரீங்கள்

வாணி பாட்டோட ஈழவனண்னா மாவீரருக்கு ஒரு தலையங்கம் போட்டிருக்கிறார் அங்கே போய்விட்டேன்.நீங்களும் முடிந்தால் பங்கு பற்றுங்கோ.

காயத்3 நான் ஜெவ்னா கொன்வெண்டில் படித்தேன் ஆனால் ஸ்டான்லியில் படித்த நிறயப்பேரை எனக்கு தெரியும்.டியூசனில் அவயள்தான் கூட இருப்பினம்.காயத்திரி நானும் வன்னியில் மல்லாவியில் இருந்தனான்.வன்னி மக்கள் மிகவும் நல்லவர்கள்.இப்போ எந்த தொடர்பும் இல்லை.

வானதி வாங்கோ வந்து நிறய கதையுங்கோ.

வேணி 3 மாதமா?கர்ப்பிணிகள் பக்கத்தில் நிறைய தகவல் இருக்கிறது. பார்த்து பலனடையுங்கோ.எங்கள் துஷிக்கு 2மாதம் என்று நினைக்கிறேன் .அவவுடன் சோடி சேருங்கோ.

துஷி .....துஷி....துஷீ..ஈ..ஈ இதற்குமேல் கத்தமுட்யாது.வந்து வேணியோட கதையுங்கோ.

ஹாய் surejiniஎப்படி இருகீங்கள் நீங்கள் ?கூப்பிட்ட சத்ததில் நான் ஓடி வந்து விட்டேன் எவ்வலவு ஓடியும் உடன் வர முடியல ஏன்னா நான் shoping போய் இருந்தேன் எனக்கு இப்ப 2 மாதம் தான்.

ஹாய் வாணி கூப்பிட்ட சத்ததில் வன்னியில் இருந்து புலி வருது என்ரு பயந்து ஓடிவிட்டிங்களா? நானும் வன்னி தான்ப்பா உடயார்கட்டு விசுவமடுவிட்கு பக்கதில தான்( காயத்திரிக்கு பக்கதில தான்)

ுரேயினி, துஷி , நான் வி.வி.டி(vvt). ஆனால் பிறந்தது கொழும்பில். 1989 ல் இலங்கையை விட்டு வந்து விட்டேன். இலங்கை போக விருப்பம்.அம்மா, அப்பா 3 தரம் அங்கு போய் வந்தவர்கள். அவர்களுக்கு அங்கு தான் இருக்க விருப்பம்.

vany
always smile

ஹாய்! எல்லோரும் எப்படி இருக்கீங்க?துஷியந்தி நீங்க எப்படி இருக்கீங்க? வாணி எப்படி உங்க பொழுது போகுது?சுராஜினி பதிலுக்கு பதில் தந்தமைக்கு நன்றி.நலமா? உங்க பெயரை சரியாக ஒருதரம் தமிழில் எழுதுறீங்களா? காயத்திரி நான் சுகமாக இருக்கிறேன்.நன்றி. எனக்கும் வன்னிக்கு போக விருப்பம்(இப்ப இல்லை.)ஆனால் போனதில்லை.அங்கிருந்து வ்ருபவர்களெல்லாம் வன்னியைப்பற்றி கூறுவார்கள்.இது எல்லாம் இனி நிறைவேறாத ஆசை. நர்மதா இமா, ப்ரியா, அதிரா இவர்களையெல்லாம் காணவில்லையே. அதிரா ரெம்ப பிஸி போல. வானதி வருக வருக.வந்து நிறைய எழுதுங்க.சந்திக்கும் வரை அன்புடன் அம்முலு.

அம்முலு எப்படி இருக்கிறீர்கள் , நான் நல்ல சுகமாக இருக்கிறேன் , உங்களுடைய சொந்ந இடம் எது? எனது சொந்த இடம் யாழ்ப்பாணம் . இங்கு எந்த நாட்டில் இருக்கிறீர்கள் உங்களுக்கு திருமணமாகிவிட்டதா ? எத்தனை குழந்தைகள்?

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்