இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2

சகோதரிகளே இங்கே வாருங்கள்

ஹாய் துஷ்யந்தி நான் நலம்.நானும் யாழ்ப்பாணம்.அதை விட நீங்கள் ஜேர்மனியா? எந்த இடம் ஜேர்மனியில்.நானும் ஜேர்மனி. திருமணம் முடித்துவிட்டேன். ஒரு மகன் தான்.நீங்கள் எப்படி? அதே கேள்வியைதிரும்ப உங்களிடத்தில் கேட்கின்றேன்.எனக்கு பதில் தந்தமைக்கு ரெம்ப நன்றி. தொடர்ந்து பேசுவோம். அன்புடன் அம்முலு

தோழிகளே எல்லோரும் நலமா? இன்று தான் இரண்டாவது பதிப்பைப் பார்த்தேன். நானும் இலங்கையில் இருக்கும் பொழுது முத்திரை,ரொபிபேப்பர் சேர்த்தேன்.எல்லாம் அப்படியே போய்விட்டது.எங்கள் வீடும் உடைந்து எல்லாம் அழிந்துவிட்டது. இங்கு வந்து முத்திரை சேர்க்கிறேன்.அத்துடன் திருமணவாழ்த்து அட்டைகள்,பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளும் சேர்த்து
வைத்திருக்கிறேன். நர்மதா செய்து காட்டியுள்ள சோப் கூடை நானும் இலங்கையில் இருக்கும் பொழுது செய்து பழகினேன்.இங்கு வந்து செய்து வைத்திருந்தேன்.வீடுமாறும் பொழுது தூக்கி வீசிவிட்டேன்.நேரம் கிடைக்கும் போது மீண்டும் செய்யவேண்டும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

வாங்க வத்சலா, இங்கு துஷி, வேணி இருவரும் german தான். எனக்கு 2 பிள்ளைகள்(4 ,2 வயது). உங்களை பற்றி சொல்லுங்கள்.
வாணி

நான் ஜேர்மனியில் பிராங்பேட்டில் இருக்கிறேன். தாயகத்தில் யாழ்மாவட்டம் சுன்னாகம். இங்கு வந்து 12 வருடங்கள் ஆகிறது .தாயகத்திற்கு இதுவரை போகமுடியவில்லை அது தான் பெரும் கவலை.
எனக்கு ஒரு மகன் இருக்கிறார். 9வயது.துஷி, வேணி ஜேர்மனியில் எங்கு இருக்கிறீர்கள்.விரும்பினால் சொல்லவும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அம்முலு இந்தாங்கோ தமிழில் என்பெயர்- சுரேஜினி-

தோழிகளே ஈழவனண்ணா மாவீரர் தினத்துக்கு ஒரு தலைப்பு போட்டிருக்கிறார் .
http://www.arusuvai.com/tamil/forum/no/9779

எல்லாரும் வாங்கோ

வத்சலா தாயகத்துக்கு போகவேண்டும் என்ற ஆவல் எல்லோரையும் போல் என்னையும் வாட்டுகிறது.airport ற்கு போய்வரும் சந்தர்ப்பங்களில் இன்னும் ஏக்கம் அதிகரிக்கிறது .

துஷி எங்கேயோ உங்கள் ஐடி பார்த்தேன்.மெய்ல் அனுப்புகிறேன்.

வானி!
ஓ அப்பிடியா? நான் ரிச்மன் கில் பிள்ளையார் கோவிலுக்கு போயிருக்கிறன். என்னை பற்றி சொல்றதெண்டால் நானும், என்ர கணவரும் தான் இங்க இருக்கிறம். அம்மா, மாமி எல்லாரும் ஊரில இருக்கினம். இங்க ஒரு long term careவில nurseஆ வேலை செய்யிறன். இப்ப இரண்டு கிழமையா வேலைக்கு போகேல்ல. அது சரி நீங்க ஏன் winterஎல வாறீங்கள்? சும்மா தான் கேட்டேன்.

எனக்கு வின்டர் தான் பிடிக்கும்( தமாஷ்). என் மகன் ஸ்கூல் போகத் தொடங்கி விட்டார், அவருக்கு thanks givingலீவு அதுதான் நவம்பரில். இனிமேல் அடுத்த வருடம் தான் வர முடியும்.
வாணிalways smile

எல்லோருக்கும் வணக்கம்,
புது வரவு, அம்முலு, வேணி துஷி, வானதி, வத்சலா மற்றும் பழைய நண்பிகள் அனைவருக்கும் அதிராவின் வணக்கம். அம்முலு நீங்க சொன்னதுபோல் நான் பிஸிதான், பெரிதாக ஒன்றுமில்லை... பள்ளிக்கூடம் அவர்களின் ஹோம்வேர்க், சமையல் வீட்டைப் பராமரித்தல் இப்படியே போகிறது பொழுது, இடையிடை இங்கும் வருவேன். காலையில் இலங்கைத் தோழிகள் பெரும்பாலும் வருவதில்லை, அதனால் தான் நானும் இதில் அதிகம் பங்குகொள்வதில்லை. இப்போ என் கணவர் மீற்றிங் போயிருக்கிறார், நாளைதான் வருவார், எனவே தான் கொஞ்சநேரம் கதைப்போம் என வந்துவிட்டேன். அல்லாதுவிட்டால் நாங்களிருவரும் கதைக்கவே நேரம் போதாமல் இருக்கும்.(என் கணவரைத்தான் சொல்கிறேன்). சுரேஜினி நீங்கள் கிறிஸ்துவரா? நாங்கள் இந்துக்கள்தான் ஆனால் தவறாமல் கிறிஸ்மஸ் கொண்டாடுவோம். மரம் வைத்து நிறைய பிறசண்ட் கீழே வைப்போம் காலையில் எழுந்து பிள்ளைகள் போடும் கூத்திருக்கே.... அப்பாப்பா அதற்காகவே அடிக்கடி கொண்டாடலாம். அவர்களின் பேரன் பேத்திகளிடம் இருந்தும் பார்சல் வரும் நான் கஸ்டப்பட்டு அவற்றை ஒழித்து வைத்து முதல் நாள் இரவு அவர்கள் நித்திரையானபின் வைப்போம். இப்பவும் பிள்ளைகள் இருவரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் சன்ரா வந்துதான் வைக்கிறார் என்று. மூத்தவர் கேட்டார், ஒரு சன்ரா தானே இருக்கிறார் எப்படி ஒரே நேரத்தில் எல்லா வீட்டுக்கும் போவார் என்று... இப்ப இப்ப சந்தேகமும் வராத் தொடங்குது. ஆனால் மரத்துக்கு கீழே யூசும் கரட்டும்(றெயின் டியருக்கும் சன்ராக்கும்) வைத்துவிட்டுப் படுப்பார்கள் , நானும் கணவரும் யூசில் பாதியும் கரட்டில் பாதியும் எடுத்துவிடுவோம், காலையில் எழுந்து பார்த்து அதிசயப்படுவார்கள்... இப்படி போகிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் சுரேயினி எப்படி இருகிங்கள்? கண்டிப்பா மெயில் அனுப்புங்க நான் எதிர் பார்பேன்.

அது சரி தனு வை யாரும் பார்தீர்கலா பார்த சொல்லுஙப்பா.
அவக்கு மெயில் அனுப்பினேன் போகுது இல்லை

வணக்கம் அதிரா எப்படி இருகிங்கள்?
எங்களை எல்லாம் விசாரித்ததிர்கு ரொம்ப நன்றிப்பா.

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் தொடங்கிடிங்களா ?
உங்க பசங்க எப்படி இருகாங்க?

உங்களுக்கு எத்தனை பசங்கள்
அன்புடன்
துஷி

மேலும் சில பதிவுகள்